வெள்ளி, 4 ஜூலை, 2014

பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார் என யோபு 9:6 பூமிக்குத் தூண்கள் உண்டா?


கேள்வி - பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார் என யோபு 9:6 கூறுகிறது.பூமிக்குத் தூண்கள் உண்டா?ஆம் எனில், பூமி அந்தரத்தில் இல்லை என்றாகிவிடுமே?

 

பூமியின் தூண்களைப் பற்றி சொன்ன அதே யோபு, பூமி அந்தரத்தில் தொங்குவதைப் பற்றியும் பின்வரும் வசனத்தில் கூறுகிறார்.

யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

எனவே யோபு சொல்கிற தூண்கள் என்பது மரம், இரும்பு போன்ற திண்ணமான பொருட்களாலான தூண்கள் அல்ல.

திண்ணமில்லாத தூண்களைப் பற்றி வேதாகமத்தின் வேறொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது.

யாத்திராகமம் 13:21,22 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும் (மேகத் தூண்), இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் (அக்கினித் தூண்அவர்களுக்கு முன் சென்றார். பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் நம் கண்களால் காணக்கூடிய ஸ்தம்பங்களேயாயினும், அவற்றின்மேல் கனமாக பொருட்களை வைக்கமுடியாது என்பதை நாம் அறிவோம். அவ்வாறே காற்றினாலான ஸ்தம்பத்திலும் கனமான பொருட்களை வைக்கமுடியாது.

நம் கண்களுக்குத் தெரியாத காற்றினாலான தூணைப் போன்றதொரு தூணையே யோபு 9:6-ல் யோபு கூறுகிறார். அத்தூண் என்னவாக இருக்கமுடியும்?

பூமி மற்றும் அதைச் சுற்றியுள்ள கோள்களில் உள்ள ஈர்ப்புவிசையின் காரணமாகத்தான் அவை யாவும் ஒரு குறிப்பிட்ட பாதையில் அந்தரத்தில் சுற்றி வருகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வாறெனில் நம்மைப்பொறுத்தவரை பூமி அசையாமல் ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்குக் காரணமென்ன? அதைச் சுற்றிலுமுள்ள பிறகோள்களின் ஈர்ப்புவிசை, மற்றும் பூமியின் சுய ஈர்ப்புவிசை ஆகியவையே.

எனவே ஈர்ப்புவிசை எனும் விசையினாலான தூண்களில்தான் பூமி நிலையாக நிற்கிறது. ஈர்ப்புவிசையினாலான இத்தூண்களைக் குறித்துதான் யோபு கூறுகிறார். இத்தூண்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை (காற்றுத்தூணைப் போல). ஆயினும் காற்றுத்தூண் எப்படி நம் அறிவுக்கு எட்டுகிறதோ அதேவிதமாக ஈர்ப்புவிசையினாலான தூண் யோபுவின் அறிவுக்கு எட்டியிருக்க வேண்டும். எனவேதான் அத்தூண்களை பூமியின் தூண்கள் என அவர் கூறுகிறார்.

மற்றபடி, நாம் நினைப்பதுபோல் சாதாரண இரும்பு அல்லது மரத்தூணைப் பற்றிதான் யோபு கூறினாரெனில், யோபு 26:7-ல்தேவன் பூமியை அந்தரத்தில் தொங்க வைக்கிறார்எனும் உண்மையை அவரால் எப்படிக் கூறஇயலும்?

எனவே யோபு கூறுகிறபூமியின் தூண்கள்”: திண்ணமானதும் கண்களுக்குத் தெரிகிறதுமான தூண்கள் அல்ல, நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறஈர்ப்பு விசைஎனும் தூணே என்பதை அறிவோமாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக