கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். – ஏசாயா 40:31
தேவ சமூகத்திற்கு வருவது, ஜெபத்தில் காத்திருப்பது போன்ற காரியங்களை சொல்லும் போது இன்றைய விசுவாசிகள் நாங்கள் பிஸியாக இருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ஜெபத்திற்கு எங்களுக்கு நேரமில்லை எங்களுக்கு அதை காட்டிலும் முக்கியமான வேலை உள்ளது என்று சொல்லுகிறார்கள். உங்களுடைய வாழ்க்கையில் ஏன் உங்களால் பிரச்சனைகளை மேற்கொள்ள முடியவில்லை, ஏன் உங்களுடைய ஆசிர்வாதங்கள் தடைப்பட்டு போகிறது என்று சிந்தித்து பார்த்தீர்களா? நீங்கள் தேவனுடைய சமுகத்தில் காத்திருக்கவில்லை எனவே நீங்கள் போராட்டங்களை சந்திக்கிறீர்கள். இன்றைக்கு தேவன் உங்களோடு பேசும் வார்த்தையில் சொல்லப்பட்டுள்ள சத்தியம் என்னவென்றால் தேவனுடைய சமூகத்தில் காத்திருப்பவர்கள் புதுபெலனை பெற்றுக்கொள்ளுவார்கள். தேவ சமூகத்தில் ஜெபிப்பது என்பது தேவனிடத்திலிருந்து பெலத்தை பெற்றுக்கொள்வது. இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற ஜெபித்தார். பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள். அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி, அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (லூக்கா 22:39-42) இங்கு இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படியாய் அவருக்கு பெலன் தேவை. அவர் பிதாவை நோக்கி ஜெபித்தபோது அவர் பெலத்தை பெற்றுக்கொண்டார். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.(லூக்கா 22:43) இந்த உலகத்தில் பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவனுடைய பெலன் மிகவும் அவசியம். நீங்கள் தேவனுடைய பாதத்தில் காத்திருந்து ஜெபிக்கும் போது தேவ பெலனை பெற்றுக்கொள்கிறீர்கள்.
நீங்கள் தேவனுடைய பாதத்தில் ஜெபத்தில் காத்திருக்கும் போது அவரும் உங்களுக்கு பதில் கொடுக்கும்படியாய் நீங்கள் எவ்வளவு நேரம் ஜெபித்தாலும் காத்திருக்கிறார். உங்கள் ஜெபத்தின் முடிவில் பதிலை பெற்றுக்கொள்கிறீகள். தேவனுடைய பெலன் உங்களுக்கு பல விதமான ஆசீர்வாதங்களாய் உங்களுக்கு கிடைக்கிறது. அது ஞானமாக இருக்கலாம், உங்களுக்கு தேவையான ஆலோசனையாகவும், வழிநடத்துதலாகவும் இருக்கலாம், மற்றவர்களின் கண்களில் உங்களுக்கு தேவையான தயவாக இருக்கலாம், அது சரீரசுகமாக இருக்கலாம், பொருளாதார ஆசீர்வாதங்களாக இருக்கலாம், உங்களுக்கு தேவையான எதுவாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நீங்கள் நேரத்தை ஒதுக்கி அவருடைய ஜெபத்தில் காத்திருக்கும் போது பெற்றுக்கொள்கிறீர்ள். இன்றைய சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய காரியங்களை தேவனுடைய சமூகத்தில் கொண்டுவராமல் உங்களுடைய சுயவிருப்பத்தின்படியும், உங்களுடைய ஞானத்தில் செய்கிறபடியினால் உங்களுடைய தற்போதய சூழ்நிலைகளை உங்களால் மேற்கொள்ள முடியவில்லை. ஒருவேளை நீங்கள் சொல்லலாம் நான் தினமும் ஜெபிக்கிறேன், அதிக நேரம் ஜெபிக்கிறேன் ஏன் என்னுடைய வாழ்க்கையில் நான் நெருக்கப்படுகிறேன். நீங்கள் ஜெபிப்பது உண்மை, உங்கள் ஜெபத்திற்கு பின் நீங்கள் தேனுடைய சமூகத்தில் காத்திருக்கிறீர்களா? நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை மட்டும் நீங்கள் ஜெபத்தில் சொல்லிவிட்டு அப்படியே கடந்த போகிறீர்கள். பிரியமானவர்களே, தேவனுடைய சமூகத்தில் காத்திருக்கும் போது தான் தேவன் உங்களுக்கு தம்முடைய ஆலோசனையை வெளிப்படுத்துவார். தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தம் ஆலோசனைகள் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும். தாவீது எப்போதும் அவருடைய சமூகத்தில் காத்திருந்து பல ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.(சங் 40:1) ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.(சங் 84:10)
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். – சங்கீதம் 147:11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக