ஊத்தமனும்
சன்மார்க்கனுமாகிய
🌹யோபு🌹
☀ எபிரேய
மொழியில் யோபு புத்தகம் “איוב ” (iyov) என வரும்.
☀ “யோபு” என்ற பெயரின் அர்த்தம் “பகைமைக்கு
இலக்கானவன்” என்பதாகும்.
☀ யோபு கேட்டுக்
கொண்டபடியே இவையெல்லாம் எழுதி
வைக்கப்பட்டுள்ளன. (யோபு 19:23, 24).
யோபுவின் மரணத்திற்கு பிறகு, இஸ்ரவேலர்
வனாந்தரத்தில் இருந்த சமயத்தில் மோசே இந்தப்
புத்தகத்தை எழுதி முடித்தார்.
☀ யோபு
புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள
உயிர்த்துடிப்பான எபிரேய செய்யுள் பாணி,
அது மோசேயின் தாய்மொழியாகிய
எபிரேயத்திலேயே முதலாவதாக இயற்றப்பட்டது
என வெளிப்படுத்துகிறது.
☀ அது மற்றொரு
மொழியிலிருந்து, உதாரணமாக அரபிய
மொழியிலிருந்து மொழி பெயர்த்ததாக இருக்க
முடியாது. மேலும், உரை நடையிலுள்ள
பகுதிகள் வேதாகமத்தின் வேறு எந்தப்
புத்தகத்தைப் பார்க்கிலும் ஐந்தாகம
தொகுப்புடனேயே அதிகமாய்
ஒத்திருக்கின்றன.
☀ இதன் எழுத்தாளர்
மோசேயைப் போன்ற ஒரு இஸ்ரவேலனாக
இருந்திருக்க வேண்டும், ஏனெனில்
யூதர்களிடமே “கடவுளின் வாக்கியங்கள் நம்பி
ஒப்புவிக்கப்பட்டன.” ( ரோ. 3:1, 2)
☀ மோசே முதிர்
வயதான பிறகு ஊத்ஸுக்கு அருகிலிருந்த
மீதியானில் 40 ஆண்டுகள் செலவிட்டார். யோபு
புத்தகத்திலுள்ள நுட்ப விவரங்களை அங்கே அவர்
பெற்றிருக்கலாம்.
☀ பிறகு, இஸ்ரவேலர் 40
ஆண்டுகள் வனாந்தரத்தில் சுற்றி திரிந்த போது
யோபுவின் தாய் நாட்டுக்கு அருகில் சென்ற
சமயத்தில் மோசே அந்தப் புத்தகத்தின்
முடிவிலுள்ள விவரங்களை அறிந்து பதிவு
செய்திருக்கலாம்.
☀ யோபு புத்தகம்
வேதாகமத்தின் மையப்பகுதியில் இருந்தாலும்,
வேதாகம நூல்களிலேயே மிகவும்
பழைமையான புத்தகமாகும்.
☀ யோபு
ஆண்டவரை தொழுது கொள்ளும் விதம்
ஆபிரகாம் காலத்தை சேர்ந்தாக உள்ளது. ஆகவே
இவர் ஆபிரகாமிற்கும், மோசேயின்
காலத்திற்கும் இடையில் வாழ்ந்திருக்கலாம் என
வேத வல்லுநர்கள் கருதுகின்றனர்.
☀ நம்முடைய
பரிசுத்த வேதாகமத்திலே 18-வது புத்தகமாக
வருகிறது.
☀ யோபு புத்தகம், உலகத்தின் தலை
சிறந்த இலக்கியங்களுள் ஒன்றாக
கருதப்படுகிறது.
☀ ஆனால் இது வெறும் ஓர்
இலக்கிய படைப்பு மட்டுமல்ல. கர்த்தரின் வல்லமை,
நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றை
மேன்மைப்படுத்துவதில் வேதாகமத்தின் மற்ற
புத்தகங்களை விட யோபு புத்தகமே
முதன்மையாக உள்ளது.
☀ யோபு ஊத்ஸ்
தேசத்தில் வாழ்ந்தார். புவியியல் வல்லுனர்கள்
சிலர் கூறுகிறபடி இது, வட அரேபியாவில்
ஏதோமியர் குடியிருந்த நாட்டிற்கு அருகிலும்
ஆபிரகாமின் சந்ததியாருக்கு
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு கிழக்கேயும்
இருந்தது. சபேயர் தெற்கிலும், கல்தேயர்
கிழக்கிலும் இருந்தனர்.
☀ இந்தப் புத்தகம்
இரண்டு முக்கிய கேள்விகளுக்கு
பதிலளிக்கிறது: குற்றமற்றோர் ஏன்
துன்பப்படுகின்றனர்? கடவுள் பூமியில்
துன்மார்க்கத்தை ஏன் அனுமதிக்கிறார்?
யோபுவின் புத்தகம் சாத்தானின் இரக்கமற்ற
தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது.
(யோபு 1:9,10).
☀ வேதாகமத்தின் எபிரேய
வாக்கியத்தில் ஹாஸ்சேட்டன் (has·Sa·tan) என்ற
இந்தச் சொற்றொடர் இந்த இடத்தில் தான் (யோபு
1:6) முதன் முதலில் உபயோகிக்கப்படுகிறது.
இது ‘அந்தப் பழைய பாம்பை’ அடையாளம்
காணவும் உதவுகிறது.
☀ பரிசுத்த
வேதாகமத்தின் மற்ற புத்தகங்களில், முக்கியமாக
ஆதியாகமம், யாத்திராகமம், பிரசங்கி, லூக்கா,
ரோமர் மற்றும் வெளிப்படுத்துதலில்
சொல்லப்பட்டுள்ள அநேக காரியங்களை
தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது.
(யோபு 1:6-12, 2:1-7-ஐ ஆதியாகமம் 3:15,
யாத்திராகமம் 9:16, லூக்கா 22:31, 32 ரோமர் 9:16-19
வெளிப்படுத்துதல் 12:9 உடன் ஒப்பிடுக).
யோபு 1:21, 24:15, 21:23-26, 28:28-ஐ பிரசங்கி 5:15,
8:11, 9:2, 3, 12:13 உடன் ஒப்பிடுக. இது
வாழ்க்கையின் அநேக கேள்விகளுக்கு
பதிலளிக்கிறது.
☀ இப் புத்தகம், நிரூபிக்கப்பட்ட
அறிவியல் உண்மைகளுக்கு ஆச்சரியப்படத்தக்க
அளவு இசைந்திருப்பதும் அது பரிசுத்த
ஆவியானவரினால் ஏவப்பட்டது என்பதற்கு
வல்லமை வாய்ந்த அத்தாட்சியாகும்.
☀ ஒரு
பெரிய கடலாமையின் மீது நிற்கும் யானைகள்
பூமியைத் தாங்குகின்றன என்பதே பூமியின்
ஆதாரம் பற்றி பூர்வ காலங்களில் நிலவிய ஒரு
கருத்தாகும். இத்தகைய முட்டாள்
தனத்தையெல்லாம் நீக்கி, கர்த்தர் “பூமியை
அந்தரத்திலே தொங்க வைக்கிறார்” (யோபு 26:7)
என்ற இந்தச் சத்தியத்தை யோபு புத்தகம்
தெளிவாக தெரிவித்துள்ளது.
☀ யோபுவை
எசேக்கியேல் நோவாவோடும்
தானியேலோடும் ஒப்பிட்டார். (எசேக் 14:14,20).
யாக்கோபு புத்தகத்தில், யாக்கோபு
சகிப்புத்தன்மைக்கு முன்மாதிரியாக
யோபுவைக் குறிப்பிடுகிறார். (யாக். 5:11)
மொத்தம் 42 அதிகாரங்களும், 1070 வசனங்களும்
கொண்டுள்ளது.
☀ 38-வது அதிகாரம் பெரிய
அதிகாரமாகவும் 25-வது அதிகாரம் சிரிய
அதிகாரமாகவும் உள்ளது.
☀ யோபு ஓர்
இஸ்ரவேலனல்ல ஆனப்போதும் அவன்; கர்த்தருக்கு
முன்பாக ஊத்தமனும் சன்மார்க்கனும்,
தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு
விலகுறவனுமாய் இருந்தான். (யோபு 1:8).
யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3
குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.
☀ கர்த்தருடைய அனுமதியை பெற்று
யோபுவை சோதித்த சாத்தான், அனைத்தையும்
இழக்கச் செய்த போதும் யோபு கடவுள் மீது
வைத்த விசுவாசம் சாத்தானை தோற்கடித்தது.
☀ யோபுவின் முன்னிலமையை பார்க்கிலும்
பின்னிலமை இரட்டிப்பான ஆசீர்வாதத்தால்
நிறைந்திருந்ததோடு, “கர்த்தர் எவ்வளவு
இரக்கமுள்ளவர்” என்பதை நிறுபித்த புத்தகமாக
உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக