வெள்ளி, 20 நவம்பர், 2015

வேதாகமத்தில் (சொல்லப்பட்டும்) இடம் பெறாத (நியாயப்பிரமாண வரிசையில் இல்லாத (Non Canonical) புத்தகங்கள்

📘📕📒📔📙📗📓📔📘📗

வேதாகமத்தில் (சொல்லப்பட்டும்) இடம் பெறாத
(நியாயப்பிரமாண வரிசையில் இல்லாத (Non Canonical) புத்தகங்கள்

📕📗📘📙📓📔📒📓📘📕

வேதாகமத்தில் இடம் பெறாத
நியாயப்பிரமாண வரிசையில் இல்லாத (Non Canonical) புத்தகங்கள் (அ) மறைபொருளாய்
சொல்லப்பட்டவைகள்

பழைய ஏற்பாடு :
வேதாகம புத்தகங்கங்களில் ஏனைய புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவைகளில் பல வேதாகமத்தில் இடம் பெறாத நியாய பிரமாண வரிசையில் இல்லாத( Non Canonical)  புத்தகங்களாகும். அந்த புத்தகங்களைப்பற்றி பார்ப்போம்.

1. யாசேரின் புத்தகம்

இது யோசுவா 10 : 13, 2 சாமுவேல் 1 :18 ல் குறிப்படப்பட்டுள்ளது.
"யோசுவா 10 : 13 அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா;
2 சாமுவேல் 1 : 18 (வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.)"

யாசேர் புத்தகம் என்றால் சரியான பொருள் நீதி, நேர்மையான புத்தகம். இது ஒரு கவிநடை உள்ள புத்தகமாக கருதப்படுகிது. இருந்தாலும் இவைகள் பழைய எற்பாடு ஆசிரியர்கள் எழுதிய காணாமல் போன சுருள்களாகவே கருதப்படுகிறது.

2. யுத்த புத்தகம்

எண்ணாகமம் 21 : 15 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
"எண்ணாகமம் 21 : 15
ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புத்தகத்தில் எழுதியிருக்கிறது."

இதை சில வரலாற்று ஆசிரியர்கள் வெற்றி கீதம்-கவிதை என்றும் சிலர் யுத்த சரித்திர உரைநடை என்றும் கூறுவர். எனினும் இந்த புத்தகம் யாசேர் புத்தகம் போன்றே காணப்படாத சுருள்கள்.

3. நாத்தானின் புத்தகம்

1 நாளாகமம் 29 : 30 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது."

தீர்க்கதரிசி நாத்தானின் புத்தகம் என்றும் தீர்க்கதரிசி நாத்தானின் நடபடிகள் என்றும் தீர்க்கதரிசி நாத்தானின் வரலாறு என்றும் கூறப்பட்டுள்ளது.

4. அகியா புத்தகம்
5. இத்தோ புத்தகம்

மேலே உள்ள 2 புத்தகங்களும்
2 நாளாகமம் 9 : 29 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சாலொமோனுடைய ஆதியந்தமான நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது."

இத்தோ தீர்க்கதரிசன புத்தகம் என்றும், தீர்க்கதரிசி இத்தோவின் வரலாறு என்றும் வழங்கப்படுகிறது.
( 2 நாளாகமம் 15 :22 )
தீர்க்கதரிசி இத்தோ சாலமோன், ரெகாயாயோம், அபியா மன்னர்கள் அரசாண்ட காலங்களில் வாழ்ந்தவர். இவருடைய ஆவணங்கள் குறிக்கப்பட்டு இருந்தும் சுருள்கள் காணாமல் போய் சரித்திரம் மறைந்து புத்தக தலைப்பு மட்டுமே நிலைத்து இருக்கிறது.

6. செமாயாவின் புத்தகம்

2 நாளாகமம் 12 : 15 ல் மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளது.
இதோ...
" ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; "

7. ராஜாங்கத்தின் முறை
புத்தகம்

இது 1 சாமுவேல் 10 : 25ல்
மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளது.
" சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்."

8. சாலொமோனுடைய நடபடிகள் புத்தகம்

இது 1 இராஜாக்கள் 11 : 41 ல் மேற்க்கோள் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
" சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது."

9. தாவீது ராஜா தீர்க்கதரிசன புத்தகம்

இது 1 நாளாகமம் 27 : 24 ல்
மேற்க்கோள் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
" செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை."

10. தீர்க்கதரிசி காத் புத்தகம்
1 நாளாகமம் 29 : 30 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. யூதா - இஸ்ரவேல் ராஜாக்கள் புத்தகம்

2 நாளாகமம் 16 : 11,
2 நாளாகமம் 27 :7
2 நாளாகமம் 32 :32 அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் 1 & 2 ராஜாக்கள் புத்தகங்களை குறிக்கும் என்பர்.
"ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது."

12. தீர்க்கதரிசி யெகூ
புத்தகம்

1 இராஜாக்கள் 16 :1 - 7,
2 நாளாகமம் 20 : 34 ல்
குறிப்பிடப்பட்டுள்ளது.
2 நாளாகமம் 20 : 34
"யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேலில் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது."

13. இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகம் ( அ ) மனாசேயின் நடபடி- ஜெப புத்தகம்.

2 நாளாகமம் 33 : 18 ல் குறிப்பிடப்பட்டுள்ளது. "மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது."

இந்த புத்தகம் இஸ்ரவேல் இராஜாக்களின் புத்தகத்திற்க்கு ஏற்ற மாதிரி உள்ளது.

14. தீர்க்கதரிசன ஆவண புத்தகம்

2 நாளாகமம் 33 : 19 ல்
குறிப்பிடப்பட்டுள்ளது.
"அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது."

புதிய ஏற்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புத்தகங்கள்.

1. ஏனோக்கின் புத்தகம்
    யூதா 1 : 4, 6, 13-15 லும்,
 2 பேதுரு 2 :4, 3 :13லும்     
மட்டும் சுட்டிக்   
காட்டப்பட்டுள்ளது.

இந்த புத்தகம் வேதாகமத்தில் இடம்பெறாவிட்டாலும் ஏனோக் புத்தகம் எல்லா அதிகாரங்களோடும் உள்ளது.
எத்யோப்பியா பழமை(Orthodox )
தேவாலயம் மற்றும் வேறொரு சபையில் மட்டும் போதிக்கிறார்கள்.

2. லவோதிக்கேயாவிற்க்கு நிருபம்
(அ) கடிதம்

கொலோசெயர் 4 :16 ல்
லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள் என சொல்லப்பட்டுள்ளது.

3. ஆதாம் ஏவாள் வாழ்க்கை
(Apocalypse of Moses) மோசேயின் புத்தகம்
அதாவது தொடர் நிகழ்வுக்கான முதன்மை காரண புத்தகம். இது ஆதாம் ஏவாள் இரண்டு பேரும் ஏதோன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இறக்கும் வரை வாழ்ந்த வாழ்க்கையை காட்டுகிறது. எபிரேயத்தில் எழுதப்பட்டு கிரேக்க மொழியில் உள்ளது.

★வேதாகமத்திலே சுட்டிக்காட்டப்படாத புத்தகமான தோமாவின் புத்தகம் சமீப காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
( தனிப்பதிவு வெளியிடுகிறேன்)

- தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக