சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார், தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் என்றான். – வெளிப்படுத்தின விசேஷம் 7:17
தேவன் உங்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவதாக இன்று வாக்குத்தத்தம் செய்கிறார். ஜீவத்தண்ணீரை விசுவாசித்து பருகாதவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள முடியாது. ஊற்று என்பது வற்றிப்போகாத ஒன்று. அது சுரந்துகொண்டே இருக்கும். அது போலவே தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஊற்றும் சுரந்துகொண்டே இருக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது, நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.(யோ 4:14). தேவன் உங்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவதால்; தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு போதும் வற்றிபோகாது. இன்று ஒரு வேளை உங்கள் சூழ்நிலையின் நிமித்தம் நீங்கள் வெறுமையாய் இருப்பதை உணரலாம். நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிப்பதின் மூலம் உங்கள் சூழ்நிலைகள் மாறுவதை இன்று காணப்பபோகிறீர்கள். தேவன் உங்களுக்கு வற்றாத ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளின்; ஆசீர்வாத்தை தருகிறார். இந்த ஆசீர்வதத்தை பெற்ற தாவீது என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்று சொல்லுகிறார். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.(சங் 23:5). இந்த ஆசீர்வாதத்தினால் உங்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் பெருகும். தெய்வீக சந்தோஷம், தெய்வீக சுகம், தெய்வீக சமாதானம், பரிசுத்தஆவியின் அபிஷேகம் உங்களுக்குள் ஜீவத்தண்ணீருள்ள ஊற்றைப்போல பெருகும். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் 40 வருடம் வனாந்திரத்தில் வழிநடத்தினார். இந்த வழிகள் இது வரை அவர்கள் கடந்து செல்லாத புதிய வழிகள். எனவே அவர்களை நடத்துவதற்கு ஒருவர் அவசியம் தேவை. தேவனே அவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்து அவர்களை வழிநடத்தினார். எனவே மோசே ஆண்டவரை பார்த்து உம்முடைய சமுகம் என்னோடே கூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும் என்றார். தேவன் அவர்களோடு வருவேன் என்று வாக்குத்தத்தம் செய்திருந்தார். அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.(யாத் 33:14).
ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை வழிநடத்தும் தேவனை புரிந்து கொள்ளாமல் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். தேவன் அவர்களை வழிநடத்துவேன் என்று வாக்குத்தத்தம் செய்தபடியினால் மோசே எப்பொமுதும் உதவிக்கு கர்த்தரையே நோக்கிப்பார்த்தான். உங்களுடைய வாழ்க்கையில் கஷ்டத்தில் மனுஷனுடைய உதவியை நீங்கள் நாடுகிறீர்கள். அப்படிப்பட்ட வேளைகளிலே மனுடைய உதவி விருதாவாய் போகிறது. பிரியமானவர்களே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்த வல்லவராய் இருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். அவரை நோக்கி பாருங்கள் அவர் உங்களை ஒரு போது வெட்கப்பட்டு போகவிடுவதில்லை. எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் ப+மியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.(சங் 121:1-2) தேவனுடைய வழிநடத்துதலை பெற நீங்கள் அவரை நொக்கி பார்க்கவேண்டியது அவசியம். அதை வெளிப்படுத்தவே இஸ்ரவேல் ஜனங்களை தேவன் வனாந்திரத்தில் வழிநடத்தினார். அவர்கள் வனாந்திரத்தில் எது வேண்டுமானாலும் கர்த்தரை நோக்கித்தான் பார்க்கவேண்டும். ஆகாரம் கேட்டால் வானத்திலிருந்து மன்னாவை தருவார். தண்ணீர் கேட்டால் கன்மலையை பிளந்து கொடுப்பார். ஆனால் இந்த ஆகாரமும், தண்ணீரும் கிடைக்கிற வழியை அவர்கள் அறியாதிருந்தார்கள். ஆகாரம் தண்ணீரும் கிடைக்கும் வழிக்காக அவர்கள் தேவனை நோக்கிப்பார்க்க வேண்டும். நீங்கள் ஏமாற்றங்களையும், வேதனைகளையும் சந்திக்கும் போதும், குறைவுகளை வரும்; போதும் தவிக்கிறீர்கள். தேவன் நீங்கள் வேண்டிக்கொள்ளும் அனைத்து காரியங்களுக்கும் பதில் கொடுக்க ஆயத்தமாய் இருக்கிறார். நீங்கள் அவரை நோக்கிப்பார்த்து அவைகளை பெற்றுக்கொள்ளும் வழியை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.(சங் 34:5). தேவன் இஸ்ரவேல் மக்களை வனாந்திரத்தில் நடத்தி வந்த போதிலும் அவர்களுக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை. இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர், அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.(நெகே 9:21). தேவன் உங்களை நடத்தம்போது உங்களுக்கு குறைவு இருக்காது, உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிச்சயமாய் இருக்கும். பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார், அவர் அதைக் காத்துக் தப்பப்பண்ணுவார், அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.(ஏசா 31:5)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக