கேள்வி - தமிழ் வேதாகமத்தில்
ஏசாயா 40:22 பின்வருமாறு
கூறுகிறது.தேவன் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
இதே வசனத்தை ஆங்கில வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது.It is he that sitteth upon the circle of the earth, and the
inhabitants thereof are as grasshoppers; that stretcheth out the heavens as a
curtain, and spreadeth them out as a tent to dwell in:
தமிழ் வேதாகமத்தில்
காணப்படும் “பூமி உருண்டை” எனும் வாசகங்கள், ஆங்கில வேதாகமத்தில் “circle of the earth” எனக் காணப்படுகிறது.
தமிழ் மொழிபெயர்ப்பு
கூறுகிறபடி பூமி உருண்டையானது என வேதாகமம் கூறுகிறதா,
அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறபடி
பூமி தட்டையானது
என வேதாகமம் கூறுகிறதா?
ஆனால் “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என ஏசாயா 40:22 கூறுவதை வைத்து, “பூமி தட்டையானது” என அவ்வசனம் கூறுவதாகக் கருதமுடியாது. இதை சற்று ஆராய்ந்தறிவோம்.
வட்டம் என்பது, 2 பரிமாணம் (2
dimensions) மட்டுமே உடையது. ஆனால் எந்தவொரு திடப்பொருளுக்கும் கட்டாயம் 3 பரிமாணம் (3
dimensions) உண்டு. பூமியுங்கூட முப்பரிமாணமுடையதுதான். ஆனால் முப்பரிமாணமுள்ள பூமியை நாம் பூமிக்கு வெளியேயிருந்து பார்த்தால் அதன் 2 பரிமாணத்தைத்தான் பார்க்கமுடியும். உதாரணமாக, பூமியிலிருந்து சந்திரனைப் பார்த்தால், அது முப்பரிமாணமுள்ளதாகத் தெரியாமல், 2 பரிமாணமுள்ளதாகத்தான் நமக்குத் தெரியும். ஆனால் உண்மையில், சந்திரன் முப்பரிமாணமுள்ளதுதான்.
அவ்வாறே, பூமிக்கு வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் அது 2 பரிமாணமுள்ள வட்டமாகத்தான் தெரியும்.

சந்திரன் மீது சில “கரும்புள்ளிகள்” தெரிவதை நாம் அறிவோம். அக்கரும்புள்ளைகளை, “சந்திர வட்டத்தின் மீதுள்ள கரும்புள்ளிகள்” அல்லது “சந்திரன் மீதுள்ள கரும்புள்ளிகள்” என்றுதான் நாம் சொல்வோமேயன்றி, “சந்திர உருண்டையின் மீதுள்ள கரும்புள்ளைகள்” என நாம் சொல்வதில்லை.
அதேவிதமாகத்தான் “பூமி உருண்டையின் மீது” தேவன் வீற்றிருக்கிறார் என ஏசாயா கூறாமல், “பூமி வட்டத்தின் மீது” தேவன் வீற்றிருக்கிறார் எனக் கூறுகிறார். அவரது கூற்றிற்குள் பூமி உருண்டையானதுதான் எனும் கருத்தும் அடங்கியுள்ளது.

பூமிக்கு வெளியிலிருந்து பார்க்கையில் பூமியானது வட்ட வடிவமாகத் தோன்றுவதால், அது ஒரு கோளமாக (sphere) இருக்கவேண்டும், அல்லது உருளையாக (cylinder) இருக்க வேண்டும்.
“தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” என ஏசாயா 40:22-ல் கூறின ஏசாயா, பூமியை ஒரு கோளமாகக் கருதி அப்படிச் சொல்லியிருப்பாரா, அல்லது ஒரு உருளையாகக் கருதி அப்படிச் சொல்லியிருப்பாரா? சற்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஏசாயாவின் தரிசனங்கள் யாவும் தேவனிடமிருந்தே பெறப்பட்டவை எனில், “பூமி ஒரு கோளம்” என்பதை தேவன் அறிவாரென்பதால், ஏசாயாவும் “பூமி ஒரு கோளம்” என்ற புரிந்துகொள்தலில்தான் “தேவன் பூமி வட்டத்தின்மேல் வீற்றிருக்கிறவர்” எனும் கூற்றைக் கூறியிருப்பார்.
ஒருவேளை, ஏசாயாவின் தரிசனங்கள் யாவும் தேவனிடமிருந்து பெறப்படாமல், ஏசாயா சுயமாக அவற்றைக் கூறியிருந்தால், பூமி வட்ட வடிவமானது என்பதை ஏசாயா தனது சுயஅறிவின் மூலம்தான் அறிந்திருப்பார்.
பூமியின் எல்லைகளைத் தெளிவாக ஆராய்ந்தறியாமல், அது வட்ட வடிவமானது எனும் முடிவுக்கு ஏசாயா வந்திருக்கமுடியாது. பூமியின் எல்லைகளை ஆராய்கையில், அது ஒரு கோளமா, அல்லது உருளையா என்பதையும் ஏசாயா நிச்சயமாக அறிந்திருப்பார்.
எனவே ஏசாயா தன் சுய அறிவின்மூலம் “பூமி வட்டத்தின்மேல் தேவன் வீற்றிருக்கிறார்” எனக் கூறியிருந்தாலும், பூமி ஒரு கோளம் என்ற புரிந்துகொள்தலுடன்தான் அவர் அக்கூற்றைக் கூறியிருப்பாரேயொழிய, பூமி ஒரு உருளை என்ற புரிந்துகொள்தலுடன் அவர் கூறியிருக்கமாட்டார்.
எனவே எப்படிப் பார்த்தாலும், பூமி ஒரு கோளம் என்ற புரிந்துகொள்தலுடன்தான் ஏசாயா 40:22-ஐ ஏசாயா கூறியிருப்பாரேயொழிய, பூமி தட்டையானது என்ற புரிந்துகொள்தலுடன் அவர் அதைக் கூறியிருக்கமாட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக