புதன், 4 நவம்பர், 2015

2 இராஜாக்கள் - இருண்ட காலப்பகுதியாம்

இருண்ட காலப்பகுதியாம்

🌹2 இராஜாக்கள்🌹

 ☀ 2 இராஜாக்கள் என்னும் இந்நூல் “வடக்கு - தெற்கு” என்று பிளவுண்ட யூதா-இஸ்ரேல் அரசுகளின் வரலாற்றை 1 இராஜாக்கள் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 12-வது புத்தகமாக வருகிறது.

☀ 2 இராஜாக்கள் புத்தகம் முதன் முதலில் 1 இராஜாக்கள் புத்தகத்தோடு ஒரே சுருளாக இருந்தது. ஆகவே இதன் எழுத்தாளர் எரேமியா தான் என்பதற்கும் இந்த புத்தகம் அதிகாரப்பூர்வ பட்டியலைச் சேர்ந்தது என்பதற்கும் இதன் நம்பகத்தன்மைக்கும் 1 இராஜாக்கள் புத்தகத்திற்கு சொல்லப்பட்ட அதே காரணங்களை சொல்லலாம்.

☀ இஸ்ரவேலர் விக்கிரக ஆராதனையில் ஈடுபடல், அவர்களின் ஒழுக்கக்கேடு ஆகியனபற்றி இப்புத்தகத்தில் கூறப்படுகிறது.

☀ கி.மு. 722இல் அசீரியரால் வட அரசான இஸ்ராயேல் கைப்பற்றப்படும்வரை 130 வருடங்களுக்கு அவ்வரசு கொடுமையான அரசர்களால் ஆட்சி செய்யப்பட்டது.

☀ தென் அரசான யூதா கி.மு. 586இல் பாபிலோனியரால் கைப்பற்றப்படும்வரை மேலும் 136 வருடங்களுக்கு அவ்வரசு நிலைநின்றது. அதன்பின் ஆலயம் அழிக்கப்பட்டது.

☀ அந்த இருண்ட காலப்பகுதியில் முப்பது இறைவாக்கினர் கர்த்தரின் செய்தியை மக்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் அறிவித்தார்கள். அவர்களில் எலியாவும் எலிசாவும் முக்கியமானவர்கள்.

☀ எலியாவின் சால்வையை எலிசா எடுத்துக்கொண்டார்; எலியாவைவிட இரண்டு மடங்கு அதிக ஆவியால் ஆசீர்வதிக்கப்பட்டார்.

☀ எலியா 8அற்புதங்களை செய்தார். எலிசாவோ 16 அற்புதங்களை செய்தார்.

☀ இந்த புத்தகத்தில் மொத்தம் 25 அதிகாரங்களும் 719 வசனங்களும் உள்ளன.

☀ 4-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும் 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ முக்கியமான கதாபாத்திரங்கள் - எலியா, எலிசா, நாகமான், யோசபாத், யோவாஸ், எசேக்கியா, யோசியா.

☀ 2 இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது அதில் முதலாவது முறையாக யோசு 4:7,19-ல் வரும் அதேவேளை மிகுதி இரண்டு முறைகளும் 2 இரா 2:8, 2 இரா 2:13-14 என்று இப்புத்தகத்திலே வருகிறது.

☀ முதலாவதாக இஸ்ரவேல் ராஜ்யமும், பின்பு யூதா ராஜ்யமும் அழிந்து போவதை காணும் போது, உபாகமம் 28:15, 29:28-ல் கூறப்பட்ட கர்த்தரின் தீர்க்கதரிசன நியாயத்தீர்ப்பு நம் நினைவுக்கு வருகிறது.

☀ தொல் பொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் 2 இராஜாக்களின் பதிவை ஆதரிக்கின்றன. இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் உண்மையில் நடந்தன என்பதற்கு கூடுதலான அத்தாட்சி அளிக்கின்றன

☀ பிரசித்தி பெற்ற மோவாபியகல். இதில் மோவாபுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே ஏற்பட்ட போரைப்பற்றி, மோவாபிய அரசன் மேசா சொல்வதாக பொறிக்கப்பட்டுள்ளது. (2 இரா 3:4,5)

☀ இப்பொழுது லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அசீரிய அரசன் மூன்றாம் ஷல் மனேசரின் கரும் சுண்ணாம்புக் கல் ஸ்தூபி உள்ளது; இது இஸ்ரவேலின் அரசராகிய யெகூவின் பெயரை குறிப்பிடுகிறது.

☀ அசீரிய அரசன்(பூல்) மூன்றாம் திகிலாத்-பிலேசரின் கல்வெட்டுகளும் இருக்கின்றன. இவை மெனாகேம், ஆகாஸ், பெக்கா உட்பட இஸ்ரவேல், யூதா அரசர்கள் பலருடைய பெயர்களை குறிப்பிடுகின்றன.–15:19, 16:5-8.

☀ இந்நூல் யோயாக்கின் அரசனது விடுதலையுடன் முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக