பாலும் தேனும் ஓடும் தேசமாகிய கானானுக்குள்
🌹யோசுவா🌹
* இந்நூலின் ஆசிரியர் “யோசுவா” ஆகும் யூதர்களின் நம்பத்தகுந்த நூலான தல்மூத் இதனை உறுதிப்படுத்துகிறது. கடைசி 5 வசனங்கள் (24:29-33) மட்டும் எலெயாசர் அல்லது பினேகாசால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
* முன்னைய இறைவாக்கினர் நூல்கள் என்னும் பிரிவில் முதலாவதாக இதை யூத மக்கள் கணிப்பர்.
* வேதத்திலே இது 6-வது புத்தகமாகும்.
* யோசுவா என்பதற்கு “யேகோவா என் இரட்சிப்பு” அல்லது “கர்த்தரே இரட்சிப்பு” என்று அர்த்தம்.
* யோசுவா என்னும் வார்த்தைக்கு எபிரேய வார்த்தை “யெகோசுவா” என்பதாகும். இதனுடைய கிரேக்க வார்த்தைதான் “இயேசு” வாகும். யெஹோஷுவா என்பதற்குச் சமமான கிரேக்கச் சொல்லாகிய ஈசூஸ் (I·e·sous) என அழைக்கப்படுகிறது, இதிலிருந்தே இயேசு என்ற பெயர் வருகிறது.
 இப்புத்தகத்தின் ஆசிரியரானா யோசுவாவின் பழைய பெயர் ஓசேயா (எண் 13:8) என்பதாகும். இவருடைய தகப்பனார் பெயர் “நூன்”. இவருடைய கோத்திரம் எப்பிராயீம், இவர் பிறந்தது எகிப்தில்.
* இப்புத்தகம் எழுதப்பட்டபோது ராகாப் உயிரோடு இருந்தாள் என்பதை யோசு 6:25 காட்டுகிறது. ஆகவே இது, தாவீதின் ஆட்சிக்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும்.
* யோர்தான் நதி இரண்டாக பிறந்தது, எரிகோ கோட்டை விழுந்தது, சூரியன் தன் பாதையில் ஓடாமல் அப்படியே நின்றது போன்ற அதிசயமான சரித்திர நிகழ்வுகள் இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
* இது ஒரு வரலாற்று அதாவது சரித்திர நூலாகும்.
* இந்நூலில் வரும் முக்கிய நபர்கள் யோசுவா ராகாப், ஆகான், பினெகாய், எலெயாள்.
* இந்நூலில் வரும் முக்கிய இடங்கள் யோர்தான் நதி, எரிகோ, கில்கால், ஆபி, ஏபால்மலை, கெர்கீம் மலை, கிபியோன் சைலோ மற்றும் சீகேம்.
* இந்நூலுல் மொத்தம் 24 அதிகாரங்களும் 658 வசனங்களும் உள்ளன.
* “யோசுவா” என்கிற வார்த்தை முழு வேதாகமத்திலும் 216 தடவை வருகிறது. இந்த ஆகமத்தில் மட்டும் 171 தடவை வருகிறது.
* யோசுவாவும், யோசேப்பும் தங்களுடைய 110-வது வயதில் மரணமடைந்தனர் – ஆதி 50:26, யோசு 24:29.
* மொத்தமுள்ள 658 வசனங்களில் 624 வசனங்கள் சரித்திர நிகழ்வுகளை கொண்டுள்ளது.
* 42 வசனங்கள் நிறைவேறின தீர்க்கதரிசனங்களை கொண்டுள்ளது.
* இப்புத்தகத்தில் 44 காரியங்கள் முன்னரிவிக்கப்பட்டுள்ளது.
* இப்புத்தகம் மொத்தம் 98 கட்டளைகளை கொண்டுள்ளது.
* இந்நூலுல் 15 வாக்குதத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
* இந்நூலில் ஏறக்குறைய 25 வருட சரித்திரத்தை உள்ளடக்கியுள்ளது.
* யாத்திராகமம் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் வெளியே வருவதையும் யோசுவா பாலும் தேனும் ஓடும் தேசமாகிய கானானுக்குள் நுழைவதையும் குறித்து விவரிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக