ஆகமங்களின் கடைசி இது, இஸ்ரவேலரின் தொடர்ச்சி 🌹உபாகமம்🌹
* பழைய ஏற்பாட்டிலே 5-வது புத்தகமாகவும், பஞ்சாகமத்திலே கடைசி புத்தகமாகவும் வருவது உபாகமமே.
* உபாகமத்தின் ஆரம்ப வார்த்தைகள் ‘மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்கள்’ என குறிப்பிடப்பட்டிருப்பது உபாகமத்தை மோசே தான் எழுதினார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
* மேலும், “மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி”னார், “மோசே அந்தப்பாட்டை எழுதி”னார் போன்ற பின்னால் குறிப்பிடப்பட்ட கூற்றுகளும் அவர் எழுதினார் என்பதை தெளிவாய் நிரூபிக்கின்றன.
* இந்தப் புத்தகத்தில் அவருடைய பெயர் ஏறக்குறைய 40 தடவை வருகிறது. பொதுவாக, இது யாரால் சொல்லப்படுகிறது என்பதை தெரிவிப்பதற்காகும். புத்தகம் முழுவதிலும் மோசேயைக் குறிக்கும் தன்னிலை சுட்டுப்பெயர் (first person) முனைப்பாய்ப் பயன்படுத்தப்படுகிறது.
* முடிவான வசனங்கள் மோசேயின் மரணத்துக்குப் பின்பு எழுதப்பட்டன. அந்த வசனங்கள் யோசுவாவினால் எழுதப்பட்டது.
* மேலும், இந்தப் புத்தகத்தில் உள்ள சம்பவங்களும் கூற்றுகளும் சரித்திர சூழ்நிலைக்கும் சுற்றுப்புற சூழல்களுக்கும் திருத்தமாக பொருந்துகின்றன. எகிப்து, கானான், அமலேக்கு, அம்மோன், மோவாப், ஏதோம் ஆகியவற்றை பற்றிய குறிப்புகள் அந்தக் காலங்களுக்கு உண்மையில் பொருந்துபவையாக இருக்கின்றன. மேலும் இடப்பெயர்கள் திருத்தமாக கூறப்பட்டுள்ளன.
* மோசே எழுதியவை உண்மை என்பதற்கு அதிகதிகமான நிரூபணங்களைத் தொல்பொருள் ஆராய்ச்சி தொடர்ந்து அளித்துவருகிறது. ஹென்றிஹெச். ஹாலி பின்வருமாறு எழுதுகிறார்: “தொல்பொருள் ஆராய்ச்சி சமீபத்தில் அவ்வளவு தெளிவான அத்தாட்சிகளை கொடுப்பதால், [ஐந்தாகமத் தொகுப்பை மோசே எழுதினார் என்ற] இந்தப் பாரம்பரிய கருத்தை ஏற்கவைக்கிறது. மோசேயின் நாளில் எழுத்து முறை இல்லை என்ற கோட்பாடு முற்றிலும் தவறென நிராகரிக்கப்படுகிறது. [எபிரெயவேதாகமத்தின்] கூற்றுகள் உண்மையான சரித்திர பதிவுகள் என்பதற்கான அத்தாட்சிகள் கிடைத்துள்ளன. இவை, எகிப்திலும் பலஸ்தீனாவிலும் மெசொப்பொத்தேமியாவிலும் ஆண்டுதோறும் தோண்டியெடுக்கப்படுகிற கல்வெட்டுகளிலும் மண் அடுக்குகளிலும் காணப்படுகின்றன. மோசே நூலாசிரியர் என்ற பாரம்பரியத்தை அறிஞர்கள் இன்னும் அதிகமாக மதிக்கதுவங்கியிருக்கிறார்கள்.
* இவ்வாறு, பைபிள்சாராத அத்தாட்சியும் கூட, உபாகமமும் ஐந்தாகமத் தொகுப்பின் மற்ற புத்தகங்களும் கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மோசேயால் எழுதப்பட்ட மெய்யான, நம்பகமான பதிவென ஆதரிக்கிறது.
* எபிரேய மொழியில் “பேசப்பட்ட வார்த்தைகள்” (Spoken words) என்னும் அர்த்தம் கொண்ட “தேவரிம்” என்னும் வார்த்தையால் அழைக்கப்படுகிறது.
* கிரேக்க மொழியில் “இரண்டாவது நியாயப்பிரமாணம்” (Second law) என்னும் அர்த்தம் கொள்ளும் “ட்யூட்டெரொனோமியன்” என்னும் வார்த்தையால் அழைக்கப்படுகிறது.
* ஆகவேதான் தமிழில் “உப ஆகமம்” அதாவது இன்னுமொரு நியாயப்பிரமாணம் என்று அழைக்கப்படுகிறது.
* காலேபும் யோசுவாவும் தவிர மற்ற முற்பிதாக்கள் அனைவரும் வனாந்திரத்தில் மடிந்து போயினர். ஆகவே தான் 39 ஆண்டுகளுக்கு முன்பு சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட தேவனுடைய கட்டளைகளை புதிய தலைமுறைக்கு மீண்டும் ஒரு முறை சொல்லி அதனை விளக்கிப் போதிக்கிறார் மோசே.
* பிசாசி இயேசுவைச் சோதித்தபோது இந்த ஆகமத்திலிருந்தே சத்திய வசனங்களை எடுத்து சொல்லி சாத்தானை ஜெயித்தார் (மத் 4:1-11; லூக் 4:1-13, உபா 8:3; 6:16; 6:13; 10:20).
* “பேலியாளின் மக்கள்” என்று வேதத்தில் முதல் முதலாக இங்குதான் வருகிறது (உபா 13:13).
* மரத்தில் தொங்கவிட்டு சாகடிப்பதும் முதன் முதலில் இந்த நூலில் தான் வருகிறது (உபா 21:22,23).
* தேவனுக்கு கீழ்ப்படிந்தால் மட்டுமே ஒரு உன்னதமான வாழ்பு கிடைக்கும் என்பதை மிக ஆழமாக வளியுறுத்துகிறது.
* இயேசு கிறிஸ்துவின் வருகையை மோசே முன்னறிவித்ததையும் இந்நூலில் காணலாம் (உபா 18:15).
* மொத்தம் 34 அதிகாரங்களும், 959 வசனங்களும் உள்ளன.
* இந்நூலில் மிக முக்கியமான நபர்களாக வருபவர்கள் மோசேயும் யோசுவாவும் ஆகும்.
* எழுதப்பட்ட இடம் யோர்தானுக்கு கீழக்கே உள்ள மோவாபின் சமவெளியாகும்.
* 690 வசனங்கள் சரித்திரத்தை சொல்லுகிறது.
* 230 வசனங்கள் நிறைவேறின தீர்க்கதரிசனங்களை கொண்டுள்ளது.
* 37 வசனங்கள் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியுள்ளது.
* 519 தேவனுடைய கட்டளைகளை இந்த புத்தகத்தில் காணலாம்.
*47 வாக்குத்தத்தங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.
* உபாகமத்தில் மட்டும் மொத்தம் 497 காரியங்கள் முன்னறிவிக்கப்பட்டுள்ளன. மோசேயும் உபாகமும் இஸ்ரவேலர்கள் யோர்தான் நதிக்கு கிழக்கே உள்ள வனாந்திரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே தன் வாழ்வின் கடைசி நாட்களில் செய்ததான காரியங்கள் இதோ உங்களுக்காக
1. மோசே மூன்று முறை பிரசங்கித்தான் (உபா 1-4, உபா 5-26, உபா 27-30 அதி)
2. மோசே யோசுவாவை உற்சாகப்படுத்துதல் (உபா 31:7,8,14)
3. மோசே 12 கோத்திரத்தாரையும் ஆசீர்வதித்தார் (உபா 33:1-3, 27-29)
4. மோசே நியாயப்பிரமாணத்தை (பஞ்சாகமத்தை) முழுவதுமாக ஒரு புஸ்தகத்தில் எழுதி முடித்தல் (உபா 31:9,24)
5. மோசே ஒரு பாடலை எழுதி இஸ்ரவேலருக்கு படிப்பித்தல் (உபா 31:19, 32:1-43)
6. மோசே மரித்து, தேவனால் அடக்கம் பண்ணப்படார் (உபா 34:5,6)
மிகவும் நன்றாக உபாகமத்தில் உள்ள காரியங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளது.நன்றி
பதிலளிநீக்கு