இஸ்ரவேல் ஜனங்களை எண்ணித் தொகையிட்ட 🌹எண்ணாகமம் 🌹
 பழைய ஏற்பாட்டில் இது நான்காவது ஆகமம்.
 இதனுடைய ஆசிரியர் மோசே ஆகும்.
 இஸ்ரவேல் ஜனங்களை எண்ணித் தொகையிடுதல் 2 தடவை இந்நூலில் வருவதால் இதற்கு “எண்ணாகமம்” என்ற பெயர் வந்ததாக கருதப்படுகிறது (அதி 26).
 எபிரேய மூல பிரதியில் “பிமித்பார் (Bemidbar)” என்று இந்நூலில் பெயரிடப்படுள்ளது. இதற்கு “வனாந்திரத்தில்” என்று பொருள்.
 இந்த புத்தகத்தில் வரும் எல்லா சம்பவங்களும் வனாந்திரத்தில் தான் நடைபெற்றுள்ளது.
 இதில் 36 அதிகாரங்களும் 1288 வசனங்களும் உள்ளன.
 எண்ணாகமம் {அறித்மொய் – arithmoi (Αριθμοί = எண்கள்)} என்ற பெயர் கிரேக்க மொழியில்தான் முதல் முதலாக வைக்கப்பட்டது.
 42 வசனங்கள் நிறைவேறின தீர்க்கதரிசனங்களை கொண்டுள்ளது.
 15 வசனங்கள் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களை கொண்டுள்ளது.
 இதில் 79 காரியங்கள் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த ஆகமத்தில் மொத்தம் 554 கட்டளைகள் உள்ளன.
 எண்ணாகமத்தில் மொத்தம் 5 வாக்குத்ததங்கள் உள்ளன.
 இந்த ஆகமத்தில் உள்ள சம்பவங்கள் நடந்த காலம் ஏறக்குறைய கி.மு.1406.
 இந்த ஆகமம் ஏறத்தாழ 38 ஆண்டுகால வனாந்தர வாழ்க்கையின் சரித்திரமாகும்.
 இந்நூலில் 3 விதமான முறுமுறுப்புகளை காணலாம்.
 இந்த ஆகமம் மோசேயின் வாழ்வின் இறுதி ஆண்டில் எழுதப்பட்டது.
 வனாந்தரம் எண்ணும் அர்த்தம் கொண்ட வார்த்தைகள் இந்த ஆகமத்தில் 48 தடவை வருகிறது.
 முக்கியமானவர்கள் மோசே, ஆரோன், யோசுவா, காலேப், மிரியாம், பினெகாஸ், பிலேயாம் மற்றும் பாலாக்கு.
 இஸ்ரவேலருக்கு கேடுண்டாக்க வந்த தலைவர்கள் கோராகு, தாத்தான், அபிராம் மற்றும் ஓன்.
 இந்த நூலில் வரும் முக்கியமான இடங்கள் சீனாய் மலை, கானான், ஓர் மலை மற்றும் மோவாப் சமவெளியாகும். எண்ணாகமமத்தின் முக்கிய நபர்கள்
1. மாபெரும் தலைவாராக மோசே.
2. பிரதான ஆசாரியயாக ஆரோன்.
3. இவர்களின் சகோதரியாக மிரியாம்.
4. விசுவாசமுள்ள ஒற்றார்களாக யோசுவா, காலேப்.
5. பரிசுத்த வைராக்கியமுள்ள ஆசாரியனாக பினெகாஸ்.
6. சபிக்க துடிக்கும் சதிகாரர்களாக பிலேயாம், பாலாக்கு.
 தோரா பகுதிகள் தற்கால யூதர்கள் எபிரேய மொழியில் “தோரா” என்றழைக்கப்படும் “பஞ்சாகமத்தை” பல பகுதிகளாக பிரித்து “சப்பாத்” என்றும் காலை ஆராதனையில் வாரந்தோறும் ஒவ்வொறு பகுதியாக வாசித்து வருகிறார்கள். எப்படியாயினும் வருஷத்திற்கு ஒருமுறையாவது பஞ்சாகமத்தை ஜனங்களுக்கு வாசித்து காண்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். எண்ணாகமம் புத்தகத்தை அவர்கள் 10 சிறு பகுதிகளாக பிரித்து ஒவ்வொறு பகுதிக்கும் கீழ்வருமாறு பெயரிட்டுள்ளனர்.
1. எண் 1-4:20 அதி – பமித்பார்
2. எண் 4:21-7 அதி – நாசோ
3. எண் 8-12 அதி – பெஹலோட்டேகா
4. எண் 13-15 அதி – ஷ்லாக்
5. எண் 16-18 அதி – கோராக்
6. எண் 19-21 அதி – சுக்காட்
7. எண் 22-25:9 அதி – பாலாக்
8. எண் 25:10-29 அதி – பின்ச்சாஸ்
9. எண் 30-32 அதி – மாடோட்
10. எண் 33-36 அதி – மேசெய்
 12 முறை வேதத்திலே ஒரு சில வசனங்கள் திரும்ப திரும்ப படித்திருப்பீர்கள் உதாரணத்திற்கு சங் 107 அதிகாரத்தில் 6-ம் வசனமும் 13-ம் வசனமும் ஒரே மாதிரியாக இருக்கும். இதைப்போன்று 5 வசனங்கள் தொடர்ந்து 12முறை திரும்ப திரும்ப வருவதை படித்திருக்கிறீர்களா? அவைகள் இதோ உங்களுக்காக.
1. எண் 7:13-17
2. எண் 7:19-23
3. எண் 7:25-29
4. எண் 7:31-35
5. எண் 7:37-41
6. எண் 7:43-47
7. எண் 7:49-53
8. எண் 7:55-59
9. எண் 7:61-65
10. எண் 7:67-71
11. எண் 7:73-77
12. எண் 7:79-83
 கானானுக்கு போன ஒற்றர்கள் (எண்.13) பாலும் தேனும் ஒடுகிற கானான் தேசத்தை 40நாள் சுற்றிப்பார்த்து வரும்படி மோசே கோத்திரத்திற்கு ஒருவர் வீதம் 12 வாலிபர்களை அனுப்பினான். இவர்களில் யோசுவாவும் கலேபும் தவிர மற்ற வாலிபர்கள் கானான் தேசத்தில் குடியிருந்த மனிதர்களையும் அவர்களின் பலத்தையும் பார்த்து பயந்து போய் அந்த தேசத்தில் சுதந்தரிக்க முடியாது என்றனர். ஆனால் யோசுவாவும் காலேபுமோவெனில் தேவன் நம் மீது பிரியமாய் இருந்த்தால் நிச்சயமாக நாம் சதந்தரிக்களாம் என்று விசுவாச அறிக்கையிட்டனர். கடைசியில் 12 வாலிபர்களில் இவர்கள் இருவர் மட்டுமே கானானுக்குள் பிரவேசித்தனர். இந்த 12 வாலிபர்களுடைய பெயர்கள் இதோ..
1. ரூபன் கோத்திரத்தில் சம்முவா
2. சிமியோன் கோத்திரத்தில் சாப்பாத்
3. யூதா கோத்திரத்தில் காலேப்
4. இசக்கார் கோத்திரத்தில் ஈகால்
5. எப்பிராயீம் கோத்திரத்தில் ஓசேயா (யோசுவா)
6. பென்யமீன் கோத்திரத்தில் பலத்தி
7. செபுலோன் கோத்திரத்தில் காதியேல்
8. யோசேப்பின் கோத்திரத்தில் காதி
9. தாண் கோத்திரத்தில் அம்மியேல்
10. ஆசேர் கோத்திரத்தில் சேத்தூர்
11. நப்தலி கோத்திரத்தில் நாகபி
12. காத் கோத்திரத்தில் கூவேல்
 வழிநடத்தின மேகம்…
எகிப்திலிருந்து கானானுக்கு பிரயாணம் பண்ணின இஸ்ரவேலர்கள் அநேக இடங்களில் பாளையமிறங்கி ஒரு சில நாட்கள் அங்கேயே தங்குவார்கள். இவர்கள் தங்குவதற்கும், பிரயானிப்பதற்கும் வழிகாட்டியாக இருந்தது எது தெரியுமா? மேகமே! ஆம் இவர்கள் ஓரிடத்தில் தங்கவேண்டுமானால் கர்த்தருடைய மேகமானது ஆசரிப்பு கூடார வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருக்கும் இவர்கள் பிரயாணப்பட வேண்டுமானால் மேகமானது வாசஸ்தலத்தைவிட்டு மேலே எழும்பும். (எண் 9:19-23)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக