கர்த்தருடைய பரிசுத்தத்தைச்
சொல்லும்
🌹லேவியராகமம்🌹
☀ பரிசுத்த வேதாகமத்திலே 3-வதாக வரும் புத்தகம்.
☀ எபிரேய மூல நூலில் இதனுடைய தலைப்பு
“வாயிச் ராஹ்(Wayiq'ra)”, இதன் பொருள் “அதன்
பிறகு அவர்களை அழைத்தார்” என்பதாகும்.
☀ “லேவியராகமம்” என்ற பெயர் செப்துவிஜிந்த்
என்ற பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழி
பெயர்ப்பாளர்கள் கொடுத்த பெயராகும்.
☀ வேதாகமத்தில் லெயிட்டிக்கான்(Leu·i·ti·kon). லத்தீன்
வல்கேட்டில் “லெவிட்டிக்கஸ்(Leviticus)”.
லேவியர்களைப்பற்றி இப்புத்தகம்
மேலோட்டமாகவே குறிப்பிடுகிறபோதிலும்
இது பொருத்தமான பெயர். ஏனெனில் இந்தப்
புத்தகத்தில் முக்கியமாக லேவி
கோத்திரத்திலிருந்து தெரிந்தெடுத்த லேவிய
ஆசாரியத்துவத்தைப்பற்றிய விதிமுறைகளும்,
ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டங்களும்
அடங்கியுள்ளன.
☀ இந்த புத்தகத்தின் ஆசிரியர் மோசேயாகும்.
☀ எழுதப்பட்ட காலம் கி.மு. ஏறக்குறைய 1686 ஆகும்.
☀ இந்த ஆகமத்தில் 27
அதிகாரங்களும், 859 வசனங்களும் உள்ளது.
☀ இந்நூலின் முக்கிய செய்தி அல்லது கருத்து
“தேவனுடைய பரிசுத்தம்” என்பதாகும்.
☀ “பரிசுத்தம்” என்ற சொல் 87 தடவை இந்த
புத்தகத்தில் வருகிறது.
☀ “பிராயச்சித்தம்” என்ற சொல் 45 முறை வருகிறது.
☀ 58 வசனங்கள் நிறைவேறின தீர்க்கதரிசனங்களை
கொண்டுள்ளது 6 வசனங்கள் இனி நடக்கவேண்டி
தீர்க்கதரிசனங்களை கொண்டுள்ளது.
☀ 799 வசனங்கள் சரித்திர நிகழ்வுகளை
சொல்லுகிறது.
☀ லேவியராகமத்தில் 795
கட்டளைகள் உள்ளன.
☀ இந்த ஆகமத்தில் 26 வாக்குத்தங்களை தேவன் தந்துள்ளார்.
☀ இந்த புத்தகத்தில் அநேக விதமான சட்டங்களையும்
நெறிமுறைகளையும் நாம் காணலாம்.
☀இப்புத்தகத்தில் “கர்த்தர் சொன்னார்”,
“கட்டளையிட்டார்”, “நான் உன் தேவனாகிய கர்த்தர்”,
“கர்த்தராகிய நான் இதைச் செய்கிறேன்” என்ற
வார்த்தைகள் பல தடவை வருகிறது. இதை போல்
மற்ற ஆகமங்களில் காணமுடியாது.
☀முக்கியமான நபர்கள் மோசே, ஆரோன், நாதாப்,
அபியு, எலெயாசார், இத்தாமார்.
☀முக்கியமான இடம் சீனாய் மலை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக