விடுதலைக்காக கர்த்தர் நடத்திய பயணம் – யாத்திராகமம்
🔮 யாத்திராகமம் சீனாய் வனாந்தரத்தில் கி.மு. 1512-ல் எழுதப்பட்டது. அப்போது, இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி ஒரு வருடம் கடந்துவிட்டது. 145 வருட காலப்பகுதியில், அதாவது கி.மு. 1657-ல் யோசேப்பு இறந்தது முதல் 1512-ல் கர்த்தரின் வணக்கத்திற்காக ஆசரிப்புக்கூடாரம் கட்டப்பட்ட சமயம் வரையில் நடைபெற்ற சம்பவங்கள் இப்புத்தகத்தில் உள்ளன. – யோவா.7:19, யாத்.1:6 ; 40:17.
🔮 மோசே யாத்திராகமத்தின் எழுத்தாளர். இப்புத்தகம் ஐந்தாகமத்தின் (Pentateuch) இரண்டாம் தொகுதி என்பதிலிருந்து இது புலனாகிறது.
🔮 கர்த்தரின் வழி நடத்துதலின் கீழ் மோசே பதிவு செய்த மூன்று சந்தர்ப்பங்களை இந்தப்புத்தகமே குறிப்பிடுகிறது. (17:14, 24:4, 34:27)
🔮 யாக்கோபின் வழித்தோன்றல்கள் எகிப்திலே பல்கிப் பெருகி யாக்கோபின் புதுப் பெயரான ‘இஸ்ராயேல்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள், கர்த்தர் அவர்களை எவ்வாறு இனமாக மாற்றினார் என்பதை யாத்திராகமம் வெளிப்படுத்துகின்றது.
🔮 யாத்திராகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் ஏறக்குறைய 3,500ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. ஆகவே, இந்தப்பதிவுகள் துல்லியமாக இருப்பதைக்காட்டும் தொல்பொருள் அத்தாட்சிகளும் மற்ற அத்தாட்சிகளும் ஏராளமாக இருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமே.
🔮 எகிப்திய பெயர்கள் யாத்திராகமத்தில் திருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபட்டப் பெயர்கள் எகிப்திய கல் வெட்டுகளோடு ஒத்திருக்கின்றன.
🔮 எகிப்தியர்கள் அந்நியர்களை தங்கள் தேசத்தில் தங்க அனுமதித்தாலும் அவர்களோடு ஒட்டி உறவாடவில்லை என்பதை தொல்பொருள் ஆராய்ச்சிகாட்டுகிறது.
🔮 நைல் நதி நீராடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் ஆராய்ச்சி காட்டுகிறது. பார்வோனின் குமாரத்தி அங்கே குளித்ததை இது நினைப்பூட்டுகிறது.
🔮 வைக்கோலை பயன்படுத்தியும் பயன்படுத்தாமலும் செய்யப்பட்ட செங்கற்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
🔮 மேலும், எகிப்து செழிப்பாக இருந்த காலத்தில் மந்திரவாதிகள் அங்கு பிரபலமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. – யாத்.8:22, 2:5, 5:6,7, 18, 7:11.
🔮 போரில் பார்வோன்களே முன் நின்று இரதவீரர்களை வழி நடத்தியதை நினைவுச்சின்னங்கள் காட்டுகின்றன. மோசேயின் நாளிலிருந்த பார்வோன் இந்த வழக்கத்தை பின் பற்றியதை யாத்திராகமம் குறிப்பிடுகிறது.
🔮 யாத்திராகமம், எபிரெயுவில் உவீல்லே ஷெமாஹத் (Weelleh shemohth) என அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் “இப்போது அந்தப் பெயர்களானவை” என்பதாகும். அல்லது வெறுமனே ஷெமாஹத் என்றும் அழைக்கப்படும், இது “பெயர்கள்” என பொருள்படும். இந்த எபிரெய வார்த்தைகள் அந்தப்புத்தகத்தில் முதலில் வரும் வார்த்தைகளாகும்.
🔮 இதன் தற்கால பெயர் கிரேக்க மொழி பெயர்ப்பிலிருந்து வருகிறது. அங்கே இது ஈக்சோடாஸ் (Exodos) என அழைக்கப்படுகிறது. அது எக்சொடஸ் (Exodus) என லத்தீன் வடிவமாக்கப்பட்டுள்ளது, “வெளிச்செல்லுதல்” அல்லது “புறப்படுதல்” என்பது இதன்பொருள்.
🔮 ஆதியாகம விவரப்பதிவின் தொடர்ச்சியே யாத்திராகமம் என்பதை பின்வரும் விஷயங்கள் காட்டுகின்றன: “Now – இப்போது”(சொல்லர்த்தமாக சொன்னால்,“மேலும்”) என்ற வார்த்தையோடு ஆரம்பமாகிறது.
🔮 அதோடு, ஆதியாகமம் 46:8-27ல் உள்ள யாக்கோபின் குமாரர்களுடைய பெயர் பட்டியலை மீண்டும் குறிப்பிடுகிறது.
🔮 யேகோவா என்ற கடவுளுடைய மகத்தான பெயரை மகிமையோடும் பரிசுத்தத்தன்மையோடும் மிகச்சிறப்பாக யாத்திராகமம் வெளிப்படுத்துகிறது.
🔮 தம்முடைய பெயரின் ஆழமான அர்த்தத்தை தெளிவுபடுத்திய போது, மோசேயிடம் கர்த்தர் சொன்னார்: “நான் என்னவாக நிரூபிப்பேனோ அவ்வாறே நிரூபிப்பேன்.”
🔮 மேலும், இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்லும்படி அவர் மோசேக்கு கட்டளையிட்டார்: “நிரூபிப்பேன் [எபிரெயுவில்: אהיה, யெஹ்யா (Eh·yeh); ஹாயா (ha·yah)என்ற எபிரெய வினைச்சொல்லிலிருந்து வந்தது] என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார்.”
🔮 யேகோவா (אטיח ,YHWH ,ய்ஹ்வ்ஹ்) என்ற பெயர் “ஆகும்” என பொருள்படும் எபிரெய வினைச்சொல் ஹாவா (ha·wah) என்பதிலிருந்து வருகிறது. “அவர் ஆகும் படி செய்கிறார்” (“He Causes to Become”) என அர்த்தப்படுத்துகிறது.
🔮 யாத்திராகமத்தில் 40’அதிகாரங்கள், 1212’வசனங்கள் உள்ளன.
🔮 புதிய ஏற்பாடு, யாத்திராகமத்தை 100-க்கும் மேற்பட்ட தடவை மேற்கோள் காட்டுகின்றனர்
Please check spelling (யாத்திராகம்)
பதிலளிநீக்குயாத்திராகமம்