🌹வேதாகமத்தில் எண்7🌹
“கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம்
உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான
சுத்த சொற்களாயிருக்கிறது.”
சங்கீதம் 12 :6
♦உலகில் 7 அதிசயங்கள், 7 கடல்கள், வானவில்லின் 7
நிறங்கள், 7 ஸ்வரங்கள்,
வாரத்தில் 7 நாட்கள், 7 கண்டங்கள், 7 கொடிய
பாவங்கள், திருக்குறளில் 7 சீர்கள், கண்ணுக்கு
புலப்படக்கூடிய கோள்ககளின் எண்ணிக்கை 7, தாதுக்கள்
எண்ணிக்கை 7, இந்திய புண்ணிய நதிகள் 7, திருக்குறள்
எழுத்துக்கள் 7, கடை ஏழு வள்ளல்கள், மனிதனின் கழுத்து
எலும்புகள் 7, முக எலும்புகள் 7, தலையில் 7 துளைகள்,
கணுக்காலில் 7 எலும்புகள் என 7…7.. ன்னு
நீண்டுகொண்டே போகும்.
♦ உயிரனங்களின் பிறப்பு 7 ன் வடிவமாய் உள்ளது.
பெண் குழந்தைப்பேறு காலம்
280 நாட்கள் (70×4).
★முட்டையை அடைகாத்து
குஞ்சு வெளிவரும் நாட்கள்- கோழிக்கு 21 புறாவிற்க்கு
14 நாட்கள்.
★ ‘சப்த நாடி’ன்னு சொல்லுவாங்க, சப்த
என்றால் 7.
★மனித வாழ்க்கையும் ஏழு ஏழு வருடங்களில் வளர்ச்சி
வித்தியாசப்படும்.
7-21-28-35-42-49-56-63-70-77..
இப்படி நீங்களும் நிறைய தகவல் வைச்சிருப்பீங்க.
உண்மைதான்.
பைபிளிலும் எண் 7 மிக அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்க தீர்க்கமா படிச்சீங்கன்னா 7 ம் எண் அதிசய
எண்ணுதான்னு புரிஞ்சுப்பீங்க. வேறு எந்த எண்ணையும் விட
7 ன்கிற எண் அதிகமா பயன்டுத்தப்பட்டு இருக்கு.
7 ம் அதன் மடங்குகளும் மிக அதிகமா கையாளப்பட்டு
இருக்கு. 7 ம் எண் நிறைவைக் (Completeness) குறிக்கிறதை நீங்க
பார்க்கலாம்.
♦பைபிளில் 7 ன்கிற எண் 735 தடவை வருகிறது. அதாவது 7×
105 முறை.
ஏழாவது என்ற பதம் 119 முறை, அதாவது 7×17 முறை.
அப்புறம் 7 மடங்கு என்கிற பதம் 35 (7×5) முறை
எழுதப்பட்டுள்ளது.
♦வெளிப்படுத்தின விசேச புத்தகத்தில் மாத்திரம் 54 முறை
எண் 7 பயன்படுத்தப்பட்டுள்ளது.
♦தேவன் தன் சிரிஷ்டிப்புகளை 6 நாட்களில் உருவாக்கி
முடித்து 7ம் நாளில் ஓய்ந்து அந்நாளை புனிதமாக்கினார்.
அந்நாளை நினைவுக்கூற சொன்னார்.
♦சிருஷ்டித்தார் (CREATED) என்ற வார்த்தை 7 முறை வருகிறது.
இது பூரணத்துவத்தை குறிக்கிறது.
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில்
★ 35 தடவை (7 × 5) ஏலோகிம் (தேவன்)
ELOHIM என்றும்,
♦7 தடவை ‘ பூமியின் மேல்’
‘On the earth ‘ என்று உள்ளது.
• 7 தடவை ‘நல்லது’ என்று உள்ளது.
• 7 Heaven(s) அல்லது Sky உள்ளது.
• 7 தடவை fly, flying, birds உள்ளது.
• 7 தடவை Crawls, walks, land animals உள்ளது.
• 14 தடவை day அல்லது days உள்ளது.
• 21 தடவை Earth அல்லது land உள்ளது.
• 7 தடவை water(s) உள்ளது.
• பழைய ஏற்பாட்டில் குறிப்பாக 7 மனிதர்கள் தேவ
மனிதர்களாக எழுதப்பட்டுள்ளது.
அவர்கள் மோசே (யோசுவா 14:6), தாவீது (2 நாளாகமம்
8:14) , சாமுவேல் (1 சாமுவேல் 9: 6,14), சேமாயா
(1 இராஜாக்கள் 12:22),
எலியா (1 இராஜாக்கள் 17:18), எலிசா (2
இராஜாக்கள் 5:8),
ஆனான் (எரேமியா 35 :4)
♦வெளிப்படுத்தின விசேஷம் 10: 6 ல் ஏழாம் தூதன்
எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும்” என்று
எழுதப்பட்டுள்ளது. பூரணத்துவம் நிரூபணம் ஆகிறது.
வெளிப்படுத்தின விசேசம் 16:17 லும் ஏழாம் தூதன்
(” IT IS DONE”) ஆயிற்று என்று
உறுதிப்படுத்தகிறான்.
♦ பாவ நிவாரணப் பலிக்கு இரத்தத்தை 7 முறை
தெளிப்பார்கள். ஆரோன் காலத்திலே துவங்கிய முறைமை
இது.
ரத்தஞ்சிந்தி பாவ மன்னிப்பு பெற்று தந்த இயேசு
கிறிஸ்து மரணத்தில் நுனியில் “முடிந்தது” என்றார். ஆவி
பிரிந்தது.
♦இயேசு சிலுவையில் 7 வார்த்தைகள் பேசினார்.
1. பிதாவே ! இவர்களுக்கு மன்னியும் – லூக் 23: 34.
2. இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய் – லூக்
23 :40-43.
3. அதோ உன் மகன், அதோ உன் தாய் – யோவா 19: 26,17.
4. என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் ? – மத் 27:
45,46; மாற் 15 :34.
5. தாகமாயிருக்கிறேன் – யோவா 19: 28.
6. முடிந்தது – யோவா 19 :30.
7. பிதாவே ! உம்முடைய என் ஆவியை ஒப்புவிக்கிறேன் – லூக் 23:46.
♦பழைய ஏற்பாட்டில் 7
மேய்ப்பர்கள் :
ஆப்ரகாம், ஈசாக், யாக்கோபு, மோசே, ஆரோன், யோசேப்பு &
தாவீது.
• 7 வது மகன் தாவீது ஆவார்.
• மூன்று பண்டிகைகள் அடுத்தடுத்த 7 மாதங்களுக்குள்
வருகிறது.
♦ஆபிரகாமிற்க்கு 7 விதமான ஆசீர்வாதங்களை
தந்தார். (ஆதி 12: 2-3)
♦ காயினை கொல்லுகிற யாவர் மேலும் 7 பழி
சுமரும் என்று கர்த்தர் சொன்னார்.
( ஆதி 4: 15) ,
7 அக்கிரமங்கள் இதயத்தில் உள்ளது என்கிறார்.
♦கர்த்தரின் பண்டிகைகள் 7 (லேவி 23: 1-44)
( பஸ்கா, புளிப்பில்லா அப்பம், எக்காள, கூடார,
முதற்பலன், பெந்தகோஸ்து, பாவ நிவாரணப்பலி
பண்டிகைகள்)
♦ கர்த்தர் நோவாவை பேழைக்குள் செல்ல சொல்லி,
7 ம் நாளில் மழையை பெய்யச் செய்தார். மழை 40
நாட்கள் பெய்து ஓய்ந்த பின் 7 நாட்கள் கழித்து
புறாவை வெளியே விட்டார். பின்னர் 7 நாட்கள்
கழித்து மறுபடியும் புறாவை வெளியே விட்டார்.
நோவாவின் பெயர் ஏழாவது முறை வரும் அதிகாரத்தில்
உள்ள வசனம்
” நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே
நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.
நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.”
(ஆதியாகமம் 6 :9)
♦யோபுவிற்க்கு 7 குமாரர்கள். யோபுவை பார்க்க வந்த
நண்பர்கள் 7 நாட்கள் பகல், இரவு மெளனமாய்
இருந்து அதற்க்கு பின்னர் 7 மாடுகள், கிடாக்கள் பலி
செலுத்தினர்.
♦விளைநிலத்தை ஆறு வருடங்களுக்கு பயிர் செய்து 7 ம்
வருடத்தில் ஓய்வு கொடுப்பார்கள். இது கர்த்தரின்
கட்டளை. ஏழாம் வருடத்தில் நிலம் தன்னை
தயார்படுத்திக்கொள்ளும். அறிவியல் இதை
ஓத்துக்கொள்கிறது.
♦ நாகமான் 7 முறை யோர்தான் நதியில் முழுகினான்.
♦ யாக்கோபு ராகேலுக்காக 7 வருஷம் வேலை
செய்தான். ஈசாவை காண 7 நாட்கள் பயணம்
செய்தான்.
♦யோசேப்பு சொல்லியபடி 7 வருஷம் செழிப்பும் 7
வருஷம் பஞ்சமும் வந்தது.
♦கர்த்தர் 7 நாட்கள் புளிப்பில்லா அப்பம்
சாப்பிடச்சொல்லி ஏழாம் நாளில் பண்டிகை
ஆசாரிக்கச் சொன்னார். வாசஸ்தலத்தில் 7
பொன் குத்து விளக்குகள் வைக்க
சொன்னார்.
♦மிருகங்களை பலியிட அது பிறந்து 7 நாளுக்கு மேல் இருக்க
வேண்டும்.
(யாத் 20:30)
♦நோவாவின் பேழையில் 7 விதமான ஜோடி சுத்த மிருகங்கள்
எடுத்துக்கொள்ளப்பட்டன.
♦ஏசாயா 11:2 ல் மேசியாவின் 7 குணங்களும் அவருடைய
இயல்பான பண்புகளும் எழுதப்பட்டுள்ளன.
1. ஞானத்தையும் 2. உணர்வையும் அருளும் ஆவியும், 3.
ஆலோசனையையும்
4. பெலனையும் அருளும் ஆவியும்,
5. அறிவையும் 6. கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் 7.
அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர்
அவர்மேல் தங்கியிருப்பார்.
♦நீதிமொழிகள் 6: 16-19 ல் கர்த்தர் 7 காரியங்களை
வெறுக்கிறார்.
“அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு,
குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு
விரைந்தோடுங் கால், அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி,
சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
♦கர்த்தரின் பெட்டி 7 நாட்கள் பெலிஸ்தரின்
தேசத்திலே இருந்தது. பழைய ஏற்பாட்டில் அதிக தடவை பல
முறைமகளுக்கு 7 தடவை, 7 முறை என முக்கியமான
எண்ணாகயிருக்கிறது.
♦ சாலமோன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டி முடிக்க 7
வருடங்களானது, பின் 7 நாட்கள் பண்டிகை ஆசரித்தார்.
♦ எழுபது வருடங்கள் பாபிலோனிய ஆட்சியின் பிடியில்
இருக்கும் என்று எரேமியா தீர்க்கதரிசி
25: 11ல் குறிப்பிடுகிறார்.
♦இயேசு கிறிஸ்து 7 அப்பங்களை ஆசீவதித்து நாளாயிரம்
பேருக்கு போஷித்தார். ஒருத்தரை மன்னிக்க ஏழுதரம்
மாத்திரமல்ல ஏழேழு ஏழுபது தரம் மட்டும் மன்னிக்கலாம்
என்றார்.
♦எரிகோ மதிலை 7 நாட்கள் சுற்றி வந்து எக்காளம் ஊதி கீழே
விழச் செய்தார்கள்.
♦ அப்போஸ்தர் கிரேக்கர்களை நியாயம் விசாரிக்க 7 பேர்களை
நியமித்தனர்.
( அப் 6 :1-7)
♦ வெளிப்படுத்தின விசேச புத்தகத்தில் கர்த்தர் 7 சபைகளுக்கு எழுதச் சொன்னார். இதில் “ஜெயங்கொள்கிறவன்”
என்ற வார்த்தை 7 முறை இறுதிப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளது.
உ. தா: – “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன், ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.”
(வெளிப்படுத்தின விசேஷம் 2 :11)
ஆகவே ஜெயங்கொள்ளுகிறவனாக
ஒவ்வொருவரும் இருப்பதையே கர்த்தர்
விரும்புகிறார்.
மேலும் வெளிப்படுத்தின விசேச புத்தகத்தில்,” 7 பொன் குத்து விளக்குகள்
மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும்
கண்டேன். என்ற பரலோக காட்சியை காணலாம்.
♦கர்த்தர் 7 முறை தன் மக்களை ஆசீர்வதித்து
வெளிப்படுத்தின விசேஷம் 1:3; 14:13; 16:15; 19:9; 20:6;
22:7, 14 ல் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆசீர்வாதம் வெளிப்படுத்தின
“விசேஷத்தின் பேரின்பம்”ஆகும்.
♦7 நட்சத்திரம், 7 முத்திரை, 7 கண்கள்,
7 எக்காளங்கள், 7 ஆவிகள், 7 இடி போன்ற சத்தம் என
வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில்
சொல்லப்பட்டுள்ளது.
மேலும் வெ.வி. 16:1 ல் ” அந்த 7 தூதருடனே: நீங்கள் போய்
தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என
உள்ளது.
♦ சங்கீதம் புத்தகத்தில் 126 அதிகாங்களுக்கு தலைப்பு
கொடுக்கப்பட்டு
7 ஆசிரியர்கள் பெயர் குறிக்கப்பட்டடுள்ளது.
தாவீது, ஆசாப், கோராவின் புதல்வர்கள்,
ஏமாம்,ஏதான், மோசே, சாலமென்.
♦புதிய ஏற்பாட்டில் 7 வசனங்கள் சங்கீதத்திலிருந்து
சொல்லப்பட்டுள்ளது. 69 ம் சங்கீத வசனங்கள் 7
முறை சொல்லப்பட்டுள்ளது.
♦யோவான் புத்தகத்தில் இயேசுவின் 7 அற்புதங்கள்
எழுதப்பட்டுள்ளன.
• இயேசு கிறிஸ்து 6 நாட்கள்
கலிலேயா, நாசரத், ஜெருசலேம் தேவாலயம் போன்ற
பல இடங்களில் உபதேசம் செய்து, பல இடங்களில்
அற்புதங்களை செய்து 7 ம் நாளில் பேதுரு, யோவான்,
யாக்கோபு சீடர்களை தனியே அழைத்து உயர்ந்த மலைக்கு கூட்டிக்
கொண்டுபோய் அவர்களுக்கு முன்பாக
மறுரூபமானார்.
♦யோவான் புத்தகத்தில் “நான்”என்ற பதம் இயேசுவால் 7
முறை சொல்லப்பட்டுள்ளது.
♦ மத்தேயு புத்தகம்: 13ம் அதிகாரத்தில் 7 உவமைகள்
எழுதப்பட்டுள்ளன. மேலும் 7 என்ற சொல்
அதிகமாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. 23 ம் அதிகாரத்தில்
மனந்திரும்பாதல் குறித்து 7 இன்னல்கள், துயரங்களை இயேசு
சொல்லியுள்ளார்.
♦ ஒரு ஓய்வு நாளில் (வெள்ளிக்கிழமை மாலை சூரியன்
மறைதலிருந்து அடுத்தநாள் சனிக்கிழமை மாலை சூரியன்
மறைதல் வரை) இயேசு 7 அற்புதங்கள் செய்தார்.
1. சூம்பின கையுடவனை குணமாக்கினார்.
(மத்தேயு 12:10-13)
2. அசுத்த ஆவியுடைய மனிதனை
குணமாக்கினார். (மார்க் 1: 21)
3. பேதுருவின் மனைவியின் காய்ச்சலை
குணமாக்கினார். (மார்க் 1: 29)
4. 18 வருடமாக பலவீனப்படுத்திய ஆவியையுடைய கூனியான
பெண்ணை குணமாக்கி நிமிரச்செய்தார்.
(லூக்கா 13:11)
5. நீர்க்கோவை வியாதியுள்ள மனிதனை
குணமாக்கினார். ( (லூக்கா 14:2)
6. பெதஸ்தா குளத்தருகே 38 வருஷமாய்
வியாதியாய் நடக்க முடியாத மனிதனை
குணமாக்கினார்.
(யோவான் 5: 8-9
7. சிலோயாம் குளத்தருகே ஒரு கண்பார்வையற்றவரை
பார்வையடையச்செயதார்.
♦ஜீவ புத்தகம் என்ற பதம் பைபிளில் 7 முறை
சொல்லப்பட்டுள்ளது.
♦இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன் வரை
அந்திகிறிஸ்துவின் ஆட்சி 7 ஆண்டுகள் இருக்கும். முதல்
மூன்றரை வருடம் அற்புங்களைச்செய்து தானே கடவுள்
எனச்சொல்லுவான். மீதி மூன்றரை ஆண்டுகள்
கிறித்தவர்களுக்கு உபத்திரவ ஆண்டுகளாக இருக்கும்.
♦இறையாட்சி காலங்களை ஏழு வகைப்படுத்தலாம்.
1. அறியாமை 2. மனசாட்சி
3. அரசாட்சி 4. இனத்தலைவர் ஆட்சி 5.
நியாயப்பிரம்மான
6. கிருபை 7. இயேசு கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சி
♦எருசலேமின் பழைய நகரத்தில் 7 தங்க வாசல்கள் உள்ளன.
அவற்றில் 7 ம் வாசல் மூடப்பட்டுள்ளது. மேசியா வருகையின்
போது திறக்க வைத்திருக்கிறார்கள்.
எருசலேம் வாயில்களைப்பற்றி அறிய……
http://www.crystalinks.com/jerusalemgates.html
யூதர்கள் பழைய ஏற்பாடு புத்தகத்தை வேத நூலாக
கொண்டு அதை தனக் (Tanak) என்றும், அதன் முதல்
ஐந்து நூல்களை (பஞ்சாகமம்) தோரா (Torah)என்றும்
அழைக்கிறார்கள். அடிப்படை நூலாக கருதுகின்றனர்
ஒரு யூத ரபீ தோராவிலும் யூத கலாசாரத்திலும் 7 ம்
எண்ணைப்பற்றி தகவல்களை தந்துள்ளார.
இதை நீங்கள் கீழே கிளிக் செய்து தெரிந்து
கொள்ளலாம்.
http://www.betemunah.org/seven.html
♦பாபிலோனிய ராஜா நெபுக்காத்நேச்சார் ஒரு
பெரிய பொற்சிலையை செய்து அந்த
பிரதிர்ஷ்டை நாளுக்கு 7 நிலையிலுள்ள அதிகாரிகளை
அழைத்தான். பின் அந்த சிலையை வணங்க மறுத்த
தானியேலின் நண்பர்களை பாபிலோனிய ராஜா
அக்கினிச்சூளையில் போட உத்தரவு இட்டான்.போடுவதற்க்கு முன்பு
சூளையை 7 மடங்கு சூடேற்ற சொன்னான். அவர்கள்
சூளையில் போடப்பட்டும் உயிரோடு வந்தனர்.
“அவர்களுடைய சரீரங்களின்மேல் அக்கினி
பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர்
கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும்,
அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக்
கண்டார்கள்.”
தானியல் 3 :1- 27
இதேபோல்தான் இயேசு கிறிஸ்துவால் மரணத்தின்
பிடியிலிருந்து உயிரோடு மீட்கப்பட்டவர்கள் அந்த சாயலே
இல்லாமல்
காணப்படுவார்கள். பூரண விடுதலை பெற்று
சாட்சியாய் இருப்பார்கள்.
♦ கர்த்தருடைய சொற்கள் 7 முறை புடமிடப்பட்டுள்ள
ஜீவ வார்த்தைகள்.
(சங் 12 :6)
வெளிப்படுத்தின விசேஷம் 5 : 1
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட ஏழு
முத்திரைகளால ் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச்
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே
கண்டேன்.
அந்த மெய் வார்த்தைகள் ஏழு விதமான அர்த்தங்களை
தரித்தது. முதல் அர்த்தம் சாதாரணமானது, அடுத்தது
ஆவிக்குரிய அர்த்தமாக இருக்கும். மேலும் மேலும் அதை
தியானிக்கும்போது நாம் ஆவியில் உணர்வோம். அதை அறிந்து
கொள்பவர்கள் பாக்கியத்திலும் பாக்கியம்
பெற்றவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக