வியாழன், 12 நவம்பர், 2015

நீதிமொழிகள் - கர்த்தர் தந்த ஞானம்.

கர்த்தர் தந்த ஞானம்

🌹நீதிமொழிகள்🌹

☀ “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” (நீதிமொழிகள் 9:10).

☀ எபிரேய வேதாகமங்களில் இப்புத்தகத்தின் ஆரம்ப
வார்த்தையைக் கொண்டு முதலில் மிஷ்லே (mishleh) என இப்புத்தகம் அழைக்கப்பட்டது, இதன் அர்த்தம் “நீதிமொழிகள்” என்பதாகும்.

☀ மிஷ்லே என்பது மாஷால் (mashal) என்ற எபிரேய பெயர்ச்சொல்லின் பன்மை. “போல” அல்லது “ஒப்பான” என அர்த்தம் தரும் ஒரு மூல வார்த்தையிலிருந்து இந்தப் பெயர்ச்சொல் வந்ததாக பொதுவாய் கருதப்படுகிறது. இந்தப் பதங்கள் இப்புத்தகத்தின் பொருளடக்கத்தை நன்றாக விவரிக்கின்றன.

☀ ஏனெனில் நீதிமொழிகள் கருத்துச் செறிவுமிக்க பழமொழிகளாகும்; அவை பெரும்பாலும் உவமைகளை அல்லது ஒப்புமைகளை பயன்படுத்துகின்றன; அவை செவி கொடுத்துக் கேட்போரை சிந்திக்கவைப்பதற்கு
வடிவமைக்கப்பட்டவை.

☀ கிரேக்க மொழிபெயர்ப்பில் παροιμίαι (paroimiai) என்றும், இலத்தீன் மொழிபெயர்ப்பில் "proverbia" என்றும் இந்நூல் பெயர் பெறுகிறது.

☀ பழைய தமிழ் மொழிபெயர்ப்பு "பழமொழி ஆகமம்" என்றிருந்தது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 20-வது புத்தகமாக வருகிறது.

☀ நீதிமொழிகளை சாலொமோன் எழுதினார் என்று இந்தப் பதிவு சொல்வதில்லை. ஆனால், நீதிமொழிகளை ‘சொன்னார்’ என்றும், ‘பல நீதிமொழிகளை வரிசைப்படுத்தி அமைப்பதற்கு துருவி ஆராய்ந்தார்’ என்றும் அது சொல்கிறது.

☀ பிற் காலத்தில் பயன்படுத்துவதற்காக
நீதிமொழிகளைப் பாதுகாத்து வைப்பதில்
அவருக்கு அக்கறை இருந்ததை இது
காட்டுகிறது.

☀ சாலொமோன் ‘மூவாயிரம்
நீதிமொழிகளைச் சொன்னார்.’ (1 இரா.4:32) அவர் சொன்ன நீதிமொழிகளில் சில, வேதாகமத்தில் நீதிமொழிகள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன.

☀ நீதிமொழிகள் புத்தகத்தை ஐந்து பகுதிகளாய் பிரிக்கலாம். அவை 1.அதிகாரங்கள் 1-9, ‘தாவீதின் குமாரனாகிய சாலொமோனின்
நீதிமொழிகள்’ என்ற வார்த்தைகளோடு
தொடங்குகின்றன;

2.அதிகாரங்கள் 10-24, “சாலொமோனின் நீதிமொழிகள்” என விவரிக்கப்படுகின்றன;

3. அதிகாரங்கள் 25-29, இவ்வாறு தொடங்குகின்றன: “இவையும் சாலொமோனின் நீதிமொழிகளே: இவற்றை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் தொகுத்து எழுதினார்கள்

4.அதிகாரம் 30, “யாக்கேயின் குமாரனாகிய ஆகூரின் வார்த்தைகள்” என அறிமுகப்படுத்தப்படுகிறது

5. அதிகாரம் 31, ‘ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது’ என ஆரம்பிக்கிறது.

☀ எனவே, சாலொமோனே
நீதிமொழிகளின் பெரும்பாகத்தை சொன்னவர். ஆகூரும் லேமுவேலும் யார் என்பது திட்டவட்டமாக அறியப்படவில்லை.

☀ லேமுவேல் என்பது சாலொமோனுக்கு மற்றொரு பெயராக இருந்திருக்கலாம் என விளக்கவுரையாளர்கள்
சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

☀ எபிரேய வாக்கியத்தின் சில பதிப்புகளில் சேத் (Chehth), ஸாயின் (Zayin), கோஃப் (Qohph [ חזק ] ) என்ற ட்ரைகிராமட்டன் அல்லது மூன்று எழுத்துக்கள் உள்ளன. இது, வேதபாரகர்களால் செய்யப்பட்ட நகல் எடுக்கும் வேலை நிறைவுற்றது என்பதை
காட்டுவதற்கு எசேக்கியா ராஜா போட்ட
கையொப்பம் என கருதப்படுகிறது.

☀ மொத்தம் 31 அதிகாரங்களும், 915 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 8-வது அதிகாரம் பெரிய
அதிகாரமாகவும் 9-வது அதிகாரம் சிரிய
அதிகாரமாகவும் உள்ளது.

☀ நீதிமொழிகள் சுருக்கமாக இருப்பதால், அவற்றை எளிதில்
புரிந்து கொள்ளவும் முடிகிறது; ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது; அதோடு, இவற்றை கற்பிப்பதும் கற்றுக்கொள்வதும்
நினைவில் வைப்பதும் மிக எளிது. இதன்
கருத்து ஆழமாக பதிந்து விடுகிறது.

விஞ்ஞானப்பூர்வ விஷயங்களில் அது ரசாயனம், மருத்துவம், அல்லது உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நீதிமொழியாக இருந்தாலும் திருத்தமாக இருப்பது இப்புத்தகம் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டது என்பதை நிரூபிக்கிறது.

☀ நீதிமொழிகள் 25:20 அமிலம் -
காரப்பொருள் ஆகியவற்றின் விளைவுகளை குறிப்பிடுகிறது.

☀ சிந்திக்கும் திறமையை
மதுபானம் மந்தமாக்குகிறது என்ற நவீன
அறிவியல் கண்டுபிடிப்போடு நீதிமொழிகள்
31:4,5 ஒத்திருக்கிறது

☀ தேன் உடல் நலத்துக்கு
ஏற்றது என்பதை பல மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இது, “என் மகனே, தேனைச்சாப்பிடு, அது நல்லது” என்ற நீதிமொழியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. (நீதி.24:13)

☀ மனதுக்கும் உடலுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றிய நவீன கருத்துக்கள் (psychosomatics) நீதிமொழிகள் புத்தகத்துக்குப் புதியவை அல்ல. “மனமகிழ்ச்சியே நல்ல மருந்தாம்.” (நீதி.17:22)

“நீதிமொழிகளின் புத்தகம் இன்று காலை வந்த செய்தித்தாளைப் பார்க்கிலும் நவீன
காலத்திற்கு அதிக பொருத்தமாக இருக்கிறது” என்று வில்லியம் லியான் ஃபெல்ப்ஸ் என்ற அமெரிக்க கல்வியாளர் ஒரு சமயம் கூறினார்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட போதிலும், இப்பொழுது தான் எழுதப்பட்டதைப் போல காலத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.” (ஸ்மித்தின் பைபிள் அகராதி [ஆங்கிலம்], 1890).

☀ புதிய ஏற்பாட்டில் மேற்கோள்
காட்டப்பட்டுள்ள சில நீதிமொழிகள்;
* நீதி.1:16 ; ரோமர் 3:10, ரோமர் 3:15.
* நீதி.3:7 ; ரோமர் 12:16.
* நீதி.3:11-12 ; எபிரேயர் 12:5-6,வெளி.3:19.
* நீதி.27:1 ; யாக்.4:13.
* நீதி.26:11 ; 2 பேதுரு 2:22.
* நீதி.25:21-22 ; ரோமர் 12:20.
* நீதி.22:8 ; 2 கொரி.9:6, கலா.6:7, கலா.6:9.
* நீதி.20:20 ; மத்தேயு 15:4.
* நீதி.20:9 ; 1 யோவான் 1:8.
* நீதி.17:27 ; யாக்.1:19.
* நீதி.17:13 ; ரோமர் 12:17, 1 தெசலோ.5:15, 1பேதுரு 3:9.
* நீதி.11:31 ; 1 பேதுரு 4:17-18.
* நீதி.10:12 ; 1 பேதுரு 4:8.
* நீதி.3:34 ; யாக்.4:6.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக