கூட்டிச்சேர்ப்பவர்
🌹 பிரசங்கி 🌹
☀ இப்புத்தகம் எபிரேய மூல மொழியில்
கொஹேலெத் (Kohelet) அல்லது Qoheleth, Koheles,
Koheleth, Coheleth என்னும் பெயரால்
அறியப்படுகிறது. இதன் பொருள் “
கூட்டிச்சேர்ப்பவர்” அதாவது மக்களைக்
குழுவாக ஒன்று சேர்ப்பவர் என்பதாகும்.
☀ ஆங்கிலத்தில் Ecclesiastes என்று
அழைக்கப்படும் இப் புத்தகத்தின் பெயர் அதன்
கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்து
தோன்றுவதாகும்.
☀ எக்லெஸியாஸ்டிஸ் κκλησιαστής (Ecclesiastes)
என்னும் கிரேக்கச் சொல் குழு (சபை, அவை)
தலைவர் என்னும் பொருள் தரும்.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 21-
வது புத்தகமாக வருகிறது.
☀ சாலொமோன் என திட்டவட்டமாக பெயர்
குறிப்பிடப்படாத போதிலும், அவரே
எழுத்தாளர் என்பதற்கு பல பகுதிகள் பலமான
சான்றளிக்கின்றன.
☀ பிரசங்கி தன்னை “தாவீதின் குமாரன்”
என்றும் “எருசலேமில் இஸ்ரவேலருக்கு
ராஜாவாயிருந்”தவர் என்றும்
அறிமுகப்படுத்துகிறார். இது அரசனாகிய
சாலொமோனுக்கு மட்டுமே பொருந்தும்.
ஏனெனில் எருசலேமில் அவருக்குப்பின்
பதவிக்கு வந்தவர்கள் யூதாவை மட்டுமே
அரசாண்டனர்.
☀ மேலும், பிரசங்கி இவ்வாறு எழுதுகிறார்: “
எனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப்
பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன், என்
மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும்
கண்டறிந்தது.” (பிரசங்கி 1:1,12, 16) இது
சாலொமோனுக்குப் பொருந்துகிறது.
☀ அவர் செய்த கட்டிடத்திட்டம்; திராட்சத்
தோட்டங்கள், தோட்டங்கள், சிங்கார வனங்கள்;
நீர்ப்பாசன திட்டம்; வேலைக்காரரும்
வேலைக்காரிகளுக்குமான ஏற்பாடு;
வெள்ளியையும் பொன்னையும் சேகரித்தல்
என இந்த எழுத்தாளருடைய அநேக
சாதனைகளை பிரசங்கி 2:4-9 சொல்கிறது.
இவையாவும் சாலொமோனுடைய
விஷயத்தில் உண்மையாக இருந்தன.
☀ சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின்
ஞானத்தையும் செழுமையையும்
கண்டபோது: “இவைகளில் பாதியாகிலும்
எனக்கு அறிவிக்கப்படவில்லை” என்று
சொன்னாள். (1 இரா.10:7).
☀ பிரசங்கி 1:1-
ல் “கூட்டிச்சேர்ப்பவர்” என்று சாலொமோன்
தன்னை குறிப்பிடுகிறார்.
☀ இப்புத்தகம் சாலொமோனின் 40 ஆண்டுகால
ஆட்சியின் மத்திப ஆண்டுகளில்
எழுதப்பட்டிருக்க வேண்டும். அதாவது
இப்புத்தகத்தில் அவர் செய்ததாக குறிப்பிடும்
பலதிட்டங்களுக்குப் பின்பு, ஆனால்
விக்கிரகாராதனைக்குள் வீழ்வதற்கு முன்பு
அவர் இதை எழுதியிருக்க வேண்டும்.
☀ ஆகவே இப்புத்தகம் எழுதப்பட்டது கி.மு. 1000
ஆண்டுக்கு முன்பாக இருக்க வேண்டும்.
☀ சாலொமோன், தன்னுடைய ஜனமாகிய
இஸ்ரவேலரையும் அவர்களோடு தற்காலிகமாக
தங்கியிருந்த நண்பர்களையும்
கூட்டிச்சேர்த்தார். முன்பு எருசலேமில்
கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டியிருந்தார்.
அதை பிரதிஷ்டை செய்யும் போது கடவுளை
ஆராதிக்க அவர்கள் எல்லாரையும்
கூடிவரும்படி அழைத்தார் அல்லது கூட்டிச்
சேர்த்தார். (1 இரா.8:1)
☀ இப்போது பிரசங்கி புத்தகத்தின் மூலம்
தன்னுடைய ஜனத்தை இவ்வுலகத்தின் வீணான,
பயனற்ற செயல்களை விட்டு தூரமாக விலக்கி,
பயனுள்ள செயல்களுக்குக் கூட்டிச்சேர்க்க
விரும்பினார்.
☀ பூமியில் உயிர் வாழ்வதற்குத் தேவையான
மூன்று முக்கிய செயல்பாடுகளைப் பற்றி
மட்டுமே பிரசங்கி குறிப்பிடுகிறார். அவை:
சூரியனின் இயக்கம், காற்று வீசும் விதம்,
நீர்சுழற்சி.
☀ இப்புத்தகம் ஹா-எலோஹிம் (ha-
Elohim) “உண்மையான கடவுள்” என்ற
சொற்றொடரை திரும்பத்திரும்ப
பயன்படுத்துகிறது.
☀ மொத்தம் 12 அதிகாரங்களும், 222
வசனங்களையும் கொண்டுள்ளது.
☀ வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும் 11-
வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும்
உள்ளது.
☀ பிரசங்கி புத்தகத்தில் “மாயை” எனும்
சொல்லானது 35 தடவை வருகின்றது.
☀ “மாயை” என்பதற்கான எபிரேய
வார்த்தையின் நேர்ப்பொருள் “மூச்சு” அல்லது
“ஆவி” என்பதாகும். இது, விஷயம் இல்லாததை,
நிலைக்காததை, நீடித்தபயன் இல்லாததைக்
குறிக்கிறது.
☀ பிரசங்கி புத்தகம் வேதாகமத்தில்
போதனையின் மற்ற குறிப்புகளின் பேரிலும்
ஒத்திசைவுள்ள பகுதிகள் காணப்படுகின்றன.
* பிர.3:17— அப்.17:31
* பிர.4:1— யாக். 5:4
* பிர.5:1, 2— யாக். 1:19
* பிர.6:12— யாக். 4:14
* பிர.7:20— ரோ. 3:23
* பிர.8:17— ரோ. 11:33.
☀ பிரசங்கி புத்தகத்திலுள்ள ஞானமான
ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது
திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ
நமக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, ‘
தேவனுக்கு முன்பாகப் பயந்திருப்பவர்கள்
நன்றாயிருப்பார்கள்’ என நமக்கு
உறுதியளிக்கப்படுகிறது.
☀ வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும் 11-
பதிலளிநீக்குவது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும்
உள்ளது.
Mistake pls read