செவ்வாய், 17 நவம்பர், 2015

உன்னதப்பாட்டு - பாட்டுகளுக்கெல்லாம் பாட்டு

பாட்டுகளுக்கெல்லாம் பாட்டு

  🌹உன்னதப்பாட்டு 🌹

☀ இந்தப் புத்தகத்தின் தலைப்பு அதன் தொடக்க
வார்த்தைகளாகிய “சாலோமோன் பாடின
உன்னதப்பாட்டு” என்பதன் சுருக்கமாகும்.

☀ வார்த்தைக்கு – வார்த்தையுள்ள எபிரேய பதிப்பின்படி
“பாட்டுகளுக்கெல்லாம் பாட்டு” என
அழைக்கப்படுவது, சிறப்பின் உயர் நிலையை குறிக்கிறது.

☀ எல்லாவற்றிற்கும் உயர்வான வானங்களைக்
குறிக்கும் “வானாதி வானங்கள்” என்ற
சொற்றொடரைப் போல இது உள்ளது.
(உபா.10:14)

☀ இது பல்வேறு பாடல்களின் ஒரு தொகுப்பு அல்ல,
ஆனால் ஒரே பாடல். “பரிபூரணத்தில் நிகரற்று விளங்கும்
ஒரு பாடல், மனித சரித்திரத்தில் எழுதப்பட்ட எதைக்
காட்டிலும் மிகச் சிறந்த படைப்பு.”

☀ மூல மொழியாகிய எபிரேயத்தில் இந்நூல் Shiyr
Hashirim என்னும் பெயர் கொண்டுள்ளது.

☀ கிரேக்க மொழிபெயர்ப்பில் இந்நூல் σμα
σμάτων (Aisma aismaton – Song of Songs) என்று
அழைக்கப்படுகிறது.

☀ Canticum Canticorum என்று இலத்தீன் பெயர்
அமைந்ததால், ஆங்கிலப் பெயர்ப்பு “Canticle of
Canticles” என்றும் வரும்.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 22-வது புத்தகமாக
வருகிறது.

☀ இதை இயற்றியவர் பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான
சாலொமோன்; இதை அவர் சுமார் கி.மு. 1020-ல்,
அதாவது தன்னுடைய 40 வருட ஆட்சியின் ஆரம்பத்தில்
எழுதியிருக்கலாம்.

☀ இது, ஒரு மேய்ப்பனுக்கும் சூலேமைச் சேர்ந்த ஒரு கிராமியப்
பெண்ணுக்கும் இடையிலான காதல்
காவியமாகும்.

☀ இக்காவியத்தில் அந்தப் பெண்ணின் தாய்,
சகோதரர்கள், ‘எருசலேமின் குமாரத்திகள் [அரசவை
பெண்கள்],’ ‘சீயோன் குமாரத்திகள் [எருசலேமின்
பெண்கள்]’ ஆகியோரும் இடம்பெறுகிறார்கள்.
(உன்னதப்பாட்டு 1:5, 3:11)

☀ உன்னதப்பாட்டு புத்தகத்தை வாசிப்போருக்கு அவர்களை
அடையாளம் கண்டுகொள்வது கடினமாக
இருக்கிறது. ஆனால், அவர்கள் சொல்வதை
அல்லது அவர்களிடம் மற்றவர்கள் சொல்வதை வைத்து
அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

☀ கடவுளுடைய வார்த்தையின் பாகமான
இப்புத்தகத்திலுள்ள செய்தி இரண்டு காரணங்களின்
நிமித்தம் மிக மதிப்பு வாய்ந்தது. (எபிரெயர் 4:12)
1). முதல் காரணம், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையிலான உண்மையான காதல் எப்படிப்பட்டது என்பதை
இது நமக்குக் கற்பிக்கிறது.
2). இரண்டாவது காரணம், இயேசு கிறிஸ்துவுக்கும்
அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபைக்கும்
இடையே எத்தகைய அன்பு நிலவுகிறது என்பதை இது சித்தரிக்கிறது.
(2 கொரிந்தியர் 11:2; எபேசியர் 5:25-31).

☀ உன்னதப்பாட்டில் கடவுள் என்ற சொல்
குறிப்பிடப்படாததைக் காரணம் காட்டி சிலர், அது
வேதாகம புத்தகங்களோடு சேர்ந்தது தானா என்பதாக
சந்தேகிக்கின்றனர்.

☀ “கடவுள்” என்ற சொல் அங்கிருப்பது மாத்திரமே
அதை வேதாகமத்தோடு சேர்ந்ததாக ஆக்கிவிடாது. அவ்வாறே
கடவுளை குறிப்பிடாதது இந்தப் புத்தகத்தைத் தகுதியற்றதாக
ஆக்காது.

☀ 8-ம் அதிகாரம், 6-ம் வசனத்தில் கடவுளுடைய பெயர்
சுருக்கம் தோன்றுகிறது, அங்கே அன்பு “யாவின்
தீக்கொழுந்து” என சொல்லப்பட்டுள்ளது.

☀ “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்;
அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று
எண்ணுகிறீர்களே” என இயேசு கிறிஸ்து அங்கீகரிக்கும்
விதத்தில் குறிப்பிட்ட அந்த புத்தகத்தின் ஒரு பாகம் தான்
இது என்பதில் சந்தேகமில்லை. (யோவா. 5:39)

☀ மேலும், பரஸ்பர அன்பின் மிகச் சிறந்த தன்மையை,
ஆவிக்குரிய கருத்தில் கிறிஸ்துவுக்கும் அவருடைய
‘மணவாட்டிக்கும்’ இடையில் நிலவுவதைப் போன்ற அன்பை,
இப்புத்தகம் வல்லமை வாய்ந்த முறையில் வருணிக்கிறது. இது,
சாலொமோனின் உன்னதப்பாட்டுக்கு, பரிசுத்த
வேதாகமத்தில் அதற்கே உரித்தான இடத்தைத் திட்டமாக
தீர்மானிக்கிறது.

☀ மொத்தம் 8 அதிகாரங்களும், 117
வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 1,2-வது அதிகாரங்கள் பெரிய
அதிகாரங்களாகவும் 3-வது அதிகாரம் சிரிய
அதிகாரமாகவும் உள்ளது.

☀ ஆண்-பெண் இருவருக்கும் நடுவில் முகிழ்க்கும்
இயல்பான காதலுணர்வை வெளிக்காட்டியுள்ளப்
போதிலும் வேதத்தின் மற்றைய புத்தகங்களோடு ஒப்பிடும் போது
இப்புத்தகம் கடவுளுக்கும் இஸ்ராயேல் மக்களினத்திற்கும்
இடையே நிலவும் அன்புறவை (காதலுறவை) வருணித்து
காட்டுவனவாகவே உள்ளது.

☀ வேதத்தின் ஏனையப்பகுதிகளில் கடவுள், இஸ்ரவேலரை
பெண்ணிற்கு ஒப்பிடும் சந்தர்ப்பங்கள் பல உண்டு.
அதேப்போன்று கிறிஸ்துவும் தன்னை மணவாளனாகவும்
அவரது சபையாகிய நம்மை அவருடைய மணவாட்டி என்பதன்
மூலமும் இவை நிறுபிக்கின்றது.

☀ உன்னதப்பாட்டு புத்தகம் வேதாகமத்தில் போதனையின்
மற்ற குறிப்புகளின் பேரிலும் ஒத்திசைவுள்ள பகுதிகள்
காணப்படுகின்றன.

* உன்னதப்பாட்டு 1:3 — மத்தேயு 6:33; 19-21; 24;
யோவான் 6:27

* உன்னதப்பாட்டு 8:6,7 — யோவான் 15:13; எபேசியர்
1:13,14

* உன்னதப்பாட்டு 7:11 — எபிரேயர் 11:10, 16; 1
தெசலோனிக்கேயர் 4:16,17

* உன்னதப்பாட்டு 6:2,3 — எபிரேயர் 13:5,6; யோவான்
14:1-3

* உன்னதப்பாட்டு 6:1 — 2 கொரிந்தியர் 4:7-10; 2
தீமோத்தேயு 4:16-18

* உன்னதப்பாட்டு 1:5-7 — 1 பேதுரு 1:6-7; யாக்கோபு
1:2-4

* உன்னதப்பாட்டு 1:4 — மத்தேயு 5:16; 1 பேதுரு 2:12

* உன்னதப்பாட்டு 1:4 — யோவான் 12:32; எபிரேயர் 4:16;
யாக்கோபு 4:8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக