ஞாயிறு, 8 நவம்பர், 2015

எஸ்றா - 70 ஆண்டுகள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலை .         

70 ஆண்டுகள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலை

          🌹எஸ்றா🌹

 ☀ எஸ்றா என்ற எபிரேய பெயரின் அர்த்தம் “உதவி” என்பதாகும்.

☀ எஸ்றா, நெகேமியா புத்தகங்கள் தொடக்கத்தில் ஒரே சுருளாக இருந்தன. (நெகே. 3:32)

☀ “எஸ்றா” புத்தகம் எபிரேயத்தில் עזרא, கிரேக்கத்தில் : σδρας, இலத்தீனில் : Esdras என்றும் அழைக்கப்படுகின்றது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 15-வது புத்தகமாக வருகிறது.

☀ இந்த புத்தகம் கி. மு. 460க்கும் 440க்கும் இடையில் எழுதப்பட்டது.

☀ பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்து தேவாலயத்தை திரும்ப எடுத்து கட்டப்பட்டதை விளக்கப்படுத்துவது இதில் பிரதானப்பட்டது.

☀ இந்தப் புத்தகத்தில் 7-ம் அதிகாரம் 27-ம் வசனத்திலிருந்து 9-ம் அதிகாரம் வரை ‘நான்’ ‘எனக்கு’ என்ற தன்மை சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதால் எஸ்றாவே இதை எழுதினார் என்பது தெளிவாக உள்ளது.

☀ நாளாகம புத்தகங்களை எழுதிய எஸ்றா, இந்தச் சரித்திரத்தை எழுதவும் தகுதி பெற்றவராக இருந்தார். ஏனெனில், அவர் மோசேயின் நியாயப்பிரமாணத்திலே கைத்தேர்ந்த நகல் எடுப்பவராகவும், ‘கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை ஆராய்ந்து, அதின்படி செய்யவும் உபதேசிக்கவும் தன் இருதயத்தைத் தயார்படுத்தியிருந்த, விசுவாசத்தை செயலில் காட்டின ஒரு மனிதனாகவும் இருந்தார். (எஸ்றா 7:6,10)

☀ எஸ்றா புத்தகத்தின் ஒரு பகுதி (4:8-6:18) அரமேய மொழியிலும் மற்றவை (7:12-26) எபிரேயத்திலும் எழுதப்பட்டன. எஸ்றா இந்த இரண்டு மொழிகளிலுமே புலமை பெற்றவராக இருந்தார்.

☀ எஸ்றா புத்தகத்தின் மிக சிறிய அதிகாரம் 1, பெரிய அதிகாரம் 2.

☀ மொத்தம் 10 அதிகாரங்களும், 280 வசனங்களும் உள்ளன.

☀ இந்தப் புத்தகத்தில் 70 ஆண்டுகளில் நிகழ்ந்த சம்பவங்கள் அடங்கியுள்ளன.

☀ அதாவது, யூதர்கள் முறியடிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்ட ஜனமாக ‘மரணத்துக்குரிய குமாரர்களாக’ குறிக்கப்பட்டிருந்த சமயத்திலிருந்து இரண்டாம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு எஸ்றா எருசலேமுக்கு திரும்பி வந்த பின் ஆசாரியத்துவம் சுத்திகரிக்கப்படுவது வரையான காலமாகும். (எஸ்றா 1:1, 7:7, 10:17; சங். 102:20)

☀ எரேமியா 25:8-13 வரை எரேமியாவினால் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அப்படியே எஸ்றா புத்தகத்தில் நிறைவேறியமையை காணமுடிகிறது.

☀ சர்வ வல்லமையுள்ள தேவன் அவருடைய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும்படியாக புறஜாதியான ராஜாவை தெரிந்துகொண்டு (பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ்) அவனுடைய ஆவியில் தேவன் ஏவி பேசுவதை பார்க்கலாம்.

☀ அவன் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன் எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன் என்று அறிவித்தான்.

☀ மூன்று ஆவிக்குரிய தலைவர்களின் கீழ் அவர்கள் திரும்ப இஸ்ரவேலுக்கு வந்தார்கள். 1). செருபாவேல் - தேவனுடைய ஆலயத்தை திரும்ப கட்டினான் (எஸ்றா 1-6 அதிகாரம்) 2). எஸ்றா - தேவனுடைய ஆலயத்தின் வேதபாரகனாக இருந்தான் (எஸ்றா 7-10 அதிகாரம்) 3). நெகேமியா - இடிந்த அலங்கத்தை மறுபடியும் கட்டினான்.

☀ ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் உட்பட கர்த்தருடைய உண்மையுள்ள ஊழியர்கள் ஏறக்குறைய 2,00,000 மீதியானோர் அந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டனர்.

☀ எஸ்றா கி.மு 458-ல் முதலாம் மாதம் நிசான் (யுசடை-8) முதல்; தியதி பாபிலோனிலிருந்து புறப்பட்டு நீண்ட நடைப்பயணம் மேற்கொண்டு கி.மு 458-ல் ஐந்தாம் மாதம் முதல் தேதி (ஆகஸ்டு 4-ம் தியதி ) எருசலேமை அடைந்தார். அதன் தூரம் சுமார் 1448 கிலோ மீட்டர் ஆகும்.

☀ முக்கியமான கதாபாத்திரங்கள் - எஸ்றா, நெகேமியா, கோரேஸ், செருபாவேல், அர்தசஷ்டா.

☀ W.F. ஆல்பிரைட், இருபது வருட தொல்பொருள் ஆராய்ச்சிக்குப் பின் பைபிள் (ஆங்கிலம்) என்றதன் ஆய்வுக்கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறார்: “எரேமியா, எசேக்கியேல், எஸ்றா, நெகேமியா ஆகிய புத்தகங்கள் முற்றிலும் உண்மையானவையே என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியின் அத்தாட்சிகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன. அத்தோடு, சம்பவங்களையும் அவற்றின் வரிசை முறையையும் பற்றிய பாரம்பரிய கருத்தையும் அவை உறுதிப்படுத்தியுள்ளன.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக