நல்லதொரு போராட்டத்தை போராடிய –
🌹 நெகேமியா🌹
☀ “நெகேமியா” புத்தகம் எபிரேய மொழியில் “נחמיה” என்று அழைக்கப்படுகின்றது.
☀ இந்த புத்தகம் கி. மு. 445க்கும் 430க்கும் இடையில் எழுதப்பட்டது.
☀ எபிரேய மொழியில் நெகேமியா என்றால் “கர்த்தரே எனக்கு ஆறுதல்” என்பது பொருள்.
☀ தொடக்கத்தில் எஸ்றா, நெகேமியா புத்தகங்கள் ஒரே புத்தகமாக எஸ்றா என அழைக்கப்பட்டது. பிறகு யூதர்கள் இந்தப் புத்தகத்தை 1,2 எஸ்றா என்று பிரித்தனர். அதற்கும் பிறகு 2 எஸ்றாவுக்கு நெகேமியா என்று பெயரிட்டனர்.
☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 16-வது புத்தகமாக வருகிறது.
☀ “அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்” என்ற ஆரம்பவார்த்தைகளும் இந்தப் புத்தகத்தில் தன்மை சுட்டுப்பெயர் பயன்படுத்தியிருப்பதும் இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் நெகேமியா தான் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன. (நெகேமியா 1:1)
☀ எஸ்றா புத்தகத்தின் முடிவான சம்பவங்களுக்கும் நெகேமியா புத்தகத்தின் ஆரம்ப சம்பவங்களுக்கும் இடையே ஏறக்குறைய 12ஆண்டுகால இடைவெளி உள்ளது.
☀ நெகேமியா, சூசான் என்னும் அரமனையில் அர்தசஷ்டா ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாக இருந்த ஒரு யூதன்.
☀ பானபாத்திரன் என்றால் ராஜாவிற்கு பானத்தை (திராட்சை ரசம்) பரிமாறுகிறவனாகும்.
☀ கி.மு. 475-ல் அர்தசஷ்டா அரியணை ஏறினான் எனவும் கி.மு. 474-ல் அவனுடைய ஆட்சியின் முதல் வருடம் ஆரம்பமானது எனவும் கிரேக்க, பெர்சிய, பாபிலோனிய மக்களின் நம்பத்தக்க சரித்திரப்பூர்வ அத்தாட்சிகள் காட்டுகின்றன.
☀ ஆகவே, அவனுடைய ஆட்சியின் 20-வது ஆண்டு கி.மு. 455 ஆகும்.
☀ நெகேமியா 2:1-8 சுட்டிக்காட்டுகிறபடி, அரசனின் பானப்பாத்திரக்காரனாகிய நெகேமியா, அந்த வருடத்தின் வசந்த காலமாகிய யூத மாதம் நிசானில் எருசலேமையும் அதன் மதிலையும் அதன் வாசல்களையும் திரும்ப புதுப்பித்து கட்டுவதற்கு அரசனிடம் அனுமதி பெற்றார்.
☀ “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவது முதல், மேசியா வருமட்டும்” 69 வார வருடங்கள் அல்லது 483 வருடங்கள் செல்லும் என தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்.
☀ கிறிஸ்து வருடம் 29-ல் இயேசு அபிஷேகம் செய்யப்பட்ட போது இந்தத் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியது. இந்த வருடம் உலக சரித்திரத்தோடும் வேதாகம சரித்திரத்தோடும் ஒத்திருக்கும் ஒன்றாகும். (தானி.9:24-27, லூக்.3:1-3,23)
☀ நெகேமியா புத்தகமும் லூக்கா புத்தகமும் தானியேல் தீர்க்கதரிசனத்தோடு அருமையாக ஒன்றிணைந்து, கர்த்தர் உண்மையான தீர்க்கதரிசனத்தை உரைப்பவர், அவரே அதை நிறைவேற்றுகிறவர் என எவ்வளவு அழகாக காட்டுகின்றன!
☀ நெகேமியா புத்தகத்தின் மிக சிறிய அதிகாரம் 1,
பெரிய அதிகாரம் 7.
☀ மொத்தம் 13 அதிகாரங்களும், 406 வசனங்களும் உள்ளன.
☀ அந்நியரோடு திருமண உறவுகள் (உபா.7:3, நெகே.10:30), கடன்கள் (லேவி.25:35-38, உபா.15:7-11, நெகே.5:2-11), கூடாரப்பண்டிகை (உபா.31:10-13, நெகே.8:14-18) போன்ற நியாயப்பிரமாணத்தில் உள்ள அநேக குறிப்புகள் இதில் உள்ளன.
☀ முக்கியமான கதாபாத்திரங்கள் - நெகேமியா, எஸ்றா, அர்தசஷ்டா.
☀ எருசலேம் “இடுக்கமான காலங்களில்,” அதாவது எதிர்ப்பின் மத்தியில், திரும்ப கட்டப்படும் என்று உரைக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் ஆரம்பமானதை இப்புத்தகம் குறிக்கிறது. (தானி.9:25).
☀ கட்டிடவேலைகள் தொடங்கின நாளிலிருந்து முடியும் நாள் வரை சாத்தான் அனேக பிரச்சனைகளையும் தடைகளையும் கொண்டுவந்தான். ஆனப்போதிலும் நெகேமியா எல்லாவற்றையும் கர்த்தரிடம் அறிக்கையிட்டு ஜெபம் செய்து இன்னும் கடினமாய் செயற்பட்டார்.
☀ யூத ஜனங்கள் இன்னுமதிகமாய் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்ய நெகேமியாவின் பணி முடிமல் தொடர்கிறது.
☀ இந்த புத்தகத்தில் போரட்டம் உண்டு, வெற்றி உண்டு. கிறிஸ்தவ வாழ்வு அலுப்பானது என்று சொல்கிறவர்களுக்கு, இந்த புத்தகம் பல போதனைகளை தருகிறது.
நல்ல பயனுள்ள வரலாற்று தகவல் நன்றி
பதிலளிநீக்குநன்றி
நீக்கு