புதன், 9 டிசம்பர், 2015

ரோமர் - முதன்மை வாய்ந்த நிருபம்

முதன்மை வாய்ந்த நிருபம்

      🌹 ரோமர் 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Romaious” (Letter [Epistle] to the Romans) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 45-வது புத்தகமாக வருகிறது.

☀ இந்நிருபம் பவுல் எழுதிய பிற எல்லா நிருபங்களை விடவும் முதன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

☀ இந்த நிருபம் கிரீஸில் பெரும்பாலும் கொரிந்துவிலிருந்து எழுதப்பட்டதென்பதில் வேதாகம உரையாசிரியர்களுக்கு இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

☀ பவுல் தன் மூன்றாவது மிஷனரி பயணம் முடியும் தறுவாயில் சில மாதங்களை அங்கே கழித்தபோது எழுதியிருக்கலாம். வேதாகமம் சார்ந்த அத்தாட்சி கொரிந்துவை ஆதரிக்கிறது.

☀ கொரிந்து சபையின் ஓர் அங்கத்தினராயிருந்த காயுவின் வீட்டிலிருந்து பவுல் இந்த நிருபத்தை எழுதினார்.

☀ மேலும், அருகிலிருந்த கொரிந்துவின் துறைமுகப்பட்டணமாகிய கெங்கிரேயாவிலுள்ள சபையைச் சேர்ந்த பெபேயாளை சிபாரிசு செய்கிறார். பெபேயாளே இந்த நிருபத்தை ரோமுக்குக் கொண்டு சென்றதாய் தோன்றுகிறது. (ரோ. 16:1, 23; 1 கொ. 1:15).

☀ பவுல், தன் ஆரம்ப வார்த்தைகளில் அவர், ‘விசுவாசத்தின் மூலமான கீழ்ப்படிதலை’ யூதரல்லாதவருக்குப் போதிக்க கிறிஸ்துவால் தெரிந்துகொள்ளப்பட்ட அப்போஸ்தலன் என தன்னை அடையாளம் காட்டுகிறார்.

☀ பரிசேயனாய் இருந்து இப்போது அப்போஸ்தலனாய் மாறின இவரை வேதாகமத்தின் 14 புத்தகங்களை எழுதும்படி பரிசுத்த ஆவியானவர் ஏவினார்; அவற்றில் முதலாவதே ரோமர் புத்தகம்.

☀ ரோமர் புத்தகத்தை பவுல் எழுதி முடிப்பதற்குள், ஏற்கெனவே இரண்டு நெடுந்தூர பிரசங்க பயணங்களை வெற்றிகரமாய் முடித்துவிட்டார், மூன்றாவது பயணமும் முடியும் தறுவாயில் இருந்தது. இதற்குள்ளாக, பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட வேறு ஐந்து கடிதங்களையும் எழுதியிருந்தார்.

☀   தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் இரண்டாம் நிருபங்கள், கலாத்தியர், கொரிந்தியருக்கு எழுதின முதலாம் இரண்டாம் நிருபங்கள் ஆகிய ஐந்து நிருபங்களே அவைகள்.

☀ எனினும், தற்போது நம் கைகளிலுள்ள வேதாகமங்களில் ரோமர் மற்ற எல்லா கடிதங்களுக்கும் முன்பு வருவது பொருத்தமாய் உள்ளது. ஏனெனில் பவுல் பிரசங்கித்த யூதர், யூதரல்லாதவர்கள் ஆகிய இரு சாராருக்குமான புதிய சமத்துவத்தை இது விரிவாய் விவாதிக்கிறது.

☀ பவுல், தம்முடைய போதனையைக் குறித்தும் தம் அப்போஸ்தலப் பணியைக் குறித்தும் தெளிவான கண்ணோட்டத்தை ரோமிலுள்ள விசுவாசிகள் பெறவேண்டும்; தாம் அவர்களைச் சந்திக்கும்முன் அவர்கள் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களைக் கைவிட வேண்டும் என்றெல்லாம் எண்ணி அவர் இந்நிருபத்தை எழுதியதாகத் தெரிகிறது.

☀ 16-ஆம் அதிகாரத்தில் 26 பேரைப் பவுல் வாழ்த்துகிறார். இவர்கள் பவுல் சென்றிராத ரோம சபையின் உறுப்பினர்களாக இருக்க முடியாது; எபேசில் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

☀  இவ் 16-ம் அதிகாரம், இந்நிருபத்தை எடுத்துச்சென்ற பெபேயாள், செல்லும் வழியில், எபேசிலிருந்த பணியாளர்களிடம் கொடுக்க வேண்டிய வாழ்த்து மடலாக இருக்கலாம். அது காலப்போக்கில் ரோமர் நிருபத்துடனே இணைக்கப் பெற்றிருக்க வேண்டும்.

☀ 1:17-இல் பவுல் ரோமர் நிருபத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்; விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.

☀ மொத்தம் 16 அதிகாரங்களும், 433 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 8-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 13-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ ரோமருக்கு எழுதிய இந்தப் புத்தகமும் பவுலின் வேறு எட்டு நிருபங்களும் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46) எனப்படும் கையெழுத்துப்பிரதிகளின் தொகுப்பில் காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD