செவ்வாய், 5 ஜூலை, 2016

யோவான் 3:3 ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நீங்கள் மறுபடியும் பிறந்து வீட்டீர்களா? அப்படியென்றால் என்ன என்கிறீர்களா?

மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக இருப்பது என்பது எதைக் குறிக்கிறது?                           

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வேதாகமத்தின் சிறந்த பகுதி யோவான் 3:1-21 ஆகும். ஆலோசனை சங்கத்தில் ஒரு உறுப்பினராகவும் (யூதர்களை ஆளுகை செய்பவர்களில் ஒருவன்), பிரபலமான பரிசேயராகவும் இருந்த நிக்கோதேமுவிடம் இயேசு கிறிஸ்து பேசிக் கொண்டிருந்தார். நிக்கோதேமு இராத்திரி வேளையிலே இயேசுவிடம் வந்தான். இயேசுவிடத்தில் கேட்கும்படி நிக்கோதேமுவிடம் கேள்விகள் இருந்தன.

இயேசு கிறிஸ்து நிக்கோதேமுவிடம் பேசும்பொழுது, “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்கு சொல்கிறேன்” என்று சொன்னார். “அதற்கு நிக்கோதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படி பிறப்பான்? அவன் தன் தாயின:் கர்ப்பத்தில் இரண்டாம் தரம் பிரவேசித்து, பிறக்கக்கூடுமோ? என்றான். இயேசு பிரதியுத்தரமாக, ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டானென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உனக்கு சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்” என்றார். (யோவான் 3:3-7)

‘மறுபடியும் பிறத்தல்’ என்கிற பதம் எழுத்தின்படி ‘மேலிருந்து பிறத்தல்” என்பதைக் குறிக்கிறது. நிக்கோதேமுவுக்கு ஒரு உண்மையான தேவையிருந்தது. ஆவிக்குரிய மாற்றம் எனப்படும் இருதய மாற்றம் அவனுக்கு தேவையாயிருந்தது. புதுப்பிறப்பு, மறுபடியும் பிறந்தவர்களாக இருத்தல் என்பது விசுவாசிக்கிற ஒரு நபரிடம் நித்திய வாழ்வு உட்செலுத்தபடும் தேவனுடைய ஒரு செயல் ஆகும் (2கொரிந்தியர் 5:17, தீத்து. 3:5, 2பேதுரு 1:3, 1யோவான் 2:29; 3:9; 4:7; 5:1-4,18). இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உள்ள விசுவாசத்தின் மூலமாக “தேவனுடைய பிள்ளைகள் ஆகுதல்” என்கிற கருத்தையும் “மறுபடிப் பிறத்தல்” என்பது குறிப்பதாக யோவான் 1:12,13 கூறுகிறது.

“ஒருவன் ஏன் மறுபடியும் பிறப்பது அவசியமானதாக இருக்கிறது?” என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இயற்கையாகவே வரும். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்த்தார்” என்று எபேசியர் 2:1ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். ரோமருக்கு எழுதும்போது, ரோமர் 3:23ல் அப்போஸ்தலன் எழுதியதாவது, “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களானார்கள்.” ஆகவே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படிக்கும், தேவனோடு ஒரு உறவைப் கொள்ளும்படிக்கும், மறுபடியும் பிறத்தல் ஒரு நபருக்கு அவசியமாகிறது.

இது எப்படி நடக்கும்? “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல” என்று எபேசியர் 2:8,9 ஆகிய வசனங்கள் குறிப்பிடுகிறது.. ஒருவன் “இரட்சிக்கப்படும்பொழுது”, அவன் அல்லது அவள் மறுபடியும் பிறக்கின்றனர், ஆவியில் புதுப்பிக்கப்படுகின்றனர். மேலும் புது பிறப்பின் உரிமையினால், இப்போது தேவனுடைய ஒரு பிள்ளையாக இருக்கின்றனர். சிலுவையில் தாம் மரித்தபோது பாவத்திற்கான விலைக்கிரயத்தை செலுத்தி தீர்த்த ஒருவரகிய, இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது, என்பது ஆவிக்குரியப் பிரகாரமாக “மறுபடியும் பிறத்தல்” ஐக் குறிக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், புது சிருஷ்டியாயிருக்கிறான்” (2கொரிந்தியர் 5:17).

இதுவரை இயேசு கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசியாமல் இருந்திருந்தால், ஆவியானவர் உங்கள் இருதயங்களில், இப்பொழுது ஏவினால் அதற்கு நீங்கள் ஒப்புக் கொடுப்பீர்களா? நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது. மனந்திரும்புதலுக்கான ஜெபத்தைச் செய்து, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இன்று மாறுவீர்ககளா? “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும், தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1:12, 13).

இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, மறுபடியும் பிறக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. “தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். நான் மன்னிக்கப்பட முடியும். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி!
ஆமென்!

நகை அணியலாமா?

பைபிளில் பல பெண்கள் நகை அணிந்து இருந்தனர் என்று எழுதப்பட்டு இருக்கிறது. வேதாகம காலத்தில் அணிந்து இருந்தார்கள்.
பழைய ஏற்பாடு & புதிய ஏற்பாடு  காலங்களில் அணிந்து இருந்தனர். தேவனின் கட்டளையை மீறும் போது கழற்றிப்போட்டார்கள்.
என்ன அணிகலனை அணிந்து இருந்தாங்க என்பதை கீழே படிக்ககவும்.

பைபிளில்  நகை – அணிகலன் பற்றி எழுதப்பட்டுள்ள வசனங்கள்.

எசக்கியேல் 16:11-13,17

உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,
12  உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்..

13  இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய்.

17  நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி,

[ Ezekiel 16:11-13, 17 NKJV
I adorned you with ornaments, put bracelets on your wrists, and a chain on your neck. And I put a jewel in your nose, earrings in your ears, and a beautiful crown on your head.

Thus you were adorned with gold and silver, and your clothing was  of fine linen, silk, and embroidered cloth. You ate pastry  of fine flour, honey, and oil.

You were exceedingly beautiful, and succeeded to royalty. You have also taken your beautiful jewelry from My gold and My silver, which I had given you, and made for yourself male images and played the harlot with them.]

யாத்திராகமம் 33 : 4  துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
5  ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார்.
6  ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.

ஏசாயா 3 : 16
கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
18  அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,
19  ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும்,
20  சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,

21  தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
22  விநோத வஸ்திரங்களையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
23  கண்ணாடிகளையும் சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துபோடுவார்.
24  அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும் கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.

1 பேதுரு 3 : 3
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,
4  அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
5  இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்.

ஆதியாகமம் 24 : 30
அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.
35  கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார்.
53  பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.

http://www.bible-archaeology.info/jewelry.htm

வேதாகமத்தில் உள்ள ஆண் மற்றும் பெண் தீர்க்கதரிசிகள்

வேதாகம தீர்க்கதரிசிகள்

வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை, ஆனால் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள்.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் – சுவிசேஷகர்கள் கர்த்தரின் உள்ளத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். கர்த்தர் உரைத்ததை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
பெண் தீர்க்கதரிசிகள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ளனர். எல்லா தீக்கதரிசிகளும் நிறைவாய் இதில் அடங்கி உள்ளார்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

பழைய ஏற்பாட்டில் 1239 தீர்க்கதரிசனங்களும்,

புதிய ஏற்பாட்டில் 578 தீர்க்கதரிசனங்களும்,

மொத்தமாக 1817 உள்ளன.

இது சம்பந்தமான வசனங்கள் 8352 ஆகும்.

இவையெல்லாம் வேத அறிஞர்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டவை. மொத்த தீர்க்கதரிசிகள் 80க்கும் மேற்பட்டவர்கள். இதில் பெரும்பான்மை தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன. முதலில் நாம் தீர்க்கதரிசனம் பற்றி அறிய வேண்டியது…….

2 பேதுரு 1:21
“தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.”

இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்க்கு ஆதாரமாக ஆவியானவர் அப்போஸ்தலர். யோவானிடம் சொல்லுவதை கேளுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 10 : 11
” அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்ல
வேண்டும் என்றான்.”

மேலும் பவுலின் எச்சரிப்பை பாருங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:20
“தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாது இருங்கள்.

தீர்க்கதரிசிகள் பட்டியல் :

• ஆரோன் (யாத்ரா 7: 1)

• ஆபேல் (லூக்கா 11: 50-51)

• ஆபிரகாம் (ஆதி 20: 7)

• அகபு (அப்போஸ் 21: 10; 11: 27-28)

• ஆகூர் (நீதி 30: 1)

• அகியா (1 இராஜா 11: 29;14:2,8)  (2நாளாக 9: 29)

• ஆமோஸ் ( ஆமோஸ் 1: 1, 7: 12- 15)

• ஆசாப் ( 2 நாளா 29:30); (மத் 13:35); (சங்கீ 78: 2)

• அசாரியா ( 2 நாளா 15: 1- 8)

• பாலாம் (எண் 23, 24)

• காய்பா (யோவான் 11: 49-52)

• தாவீது (சங் 16: 8-11)(அப் 2: 25-30)

• தானியேல் (தானி 12:21)(மத் 24: 15, மாற்கு 13: 14)

• எபேசு சீடர்கள் (அப் 19:6)

• எல்தாத் (எண் 11:26)

• எலியா (1 இராஜா 18: 22, 36)
                 ( 1 இராஜா 17: 1)

• எலியேசர் ( 2 நாளா 20: 37)

• எலிசா ( 1 இராஜா 19:6, 2
                   இராஜா 9:1, 6: 12)

• எசக்கியேல் (எசக் 6: 1-2, 11:
                             4-5, 13:2,17)

• ஏனோக்     ( யூதா 1: 14)

• காத்      (1 சாமு 22: 5),
          (சாமு 24:11)(1 நாளா 21: 9)

• ஆபாகூக் ( ஆபாகூக் 1: 1, 3: 1)

• ஆகாய் (ஆகாய் 1: 1, 3, 12,
                    2:1,10)  (எஸ்ரா 5: 1)

• அனானி (2 நாளா 16: 7-10; 19: 2)

• ஓசியா (ஓசியா 1: 1)

• இத்தோ (சகரியா 1: 1)
                   (2 நாளா 13:22, 9:29)

• ஏமான் ( 1 நாளா 25: 5)

• ஏசாயா ( 2 இராஜா 19: 2)(மத் 3: 3)

• யாக்கோபு   (ஆதி 49: 1)

• யகாசியேல் ( 2 நாளாக 20:14-17)

• எதுத்தூன் ( 2 நாளாக 35: 15)

•யெகூ (1 இராஜா 16: 17, 12)

• எரேமியா (2 நாளா 36: 12,21),
                      (ஏரே 20: 1-2; 25: 2)

• இயேசு (மத் 13: 57; 21: 11)(லூக் 24: 19)

• யோவேல் (யோவேல் 1: 1) (அப் 2: 16)

• யோவான்ஸ்நானன்
      (லூக்கா 7: 26-28; 1:76)
      (மத் 14: 15)

• யோவான் (வெளி 1: 1)

• யோனா (2 இராஜா 14:25)
                   (மத் 12: 39;16:4)

•யோசேப்பு    (ஆதி 37: 5-11)

• யோசுவா (1 இராஜா 16: 34)

• யூதா பர்னபா (அப் 15:32)

• மல்கியா (மல்கி 1: 1)

• மேதாத் (எண் 16: 26)

• மீகா (மீகா 1: 1) (எரேமி 26: 18)
            (மத்தேயு 2: 5-6)

• மிகாயா (1 இராஜா 22: 7-8)

• மோசே (உபா 34: 10; 18: 18; (அப் 3: 22-23)

• நாகூம் (நாகூம் 1: 1)

• நாத்தான் (2 சாமு 7: 2)
                      (1 இராஜா 1: 10)

• ஒபேதியா (ஒபேதி 1: 1)

• ஓபேத்     (2 நாளா 28: 9)

• யூதாவிலிருந்து தீர்க்கதரிசிகள்
(1இராஜா 13: 1- 3)
(2 இராஜா 23:17-18)

• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
(1 இராஜா 20: 13-14)

• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
– இரண்டாம் முறை
    (1 இராஜா 20: 35-42)

• அமாசியாவிற்க்கு அனுப்பின
தீர்க்கதரிசிகள்
   ( 2 நாளா 25:7-9)

• அமாசியாவிற்க்கு அனுப்பின.
தீர்க்கதரிசிகள் – 2ம் முறை
    (2 நாளா 25:7-9)

• ஏலிக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
(1 சாமு 2: 27-36)

• இஸ்ரவேலுக்கு அனுப்பின.
தீர்க்கதரிசிகள்
      ( நியாதி 6: 7-10 )

• எலியாவை அனுப்பி ஏகூவை
அபிசேகித்த தீர்க்கதரிசி (2 இராஜா 9: 1-10)

• எலிசாவுக்கு தீர்க்கதரிசனம் உரைத்த. தீர்க்கரிசிகள்
     (2 இராஜா 2: 3-5)

• சாமுவேல் (1 சாமு 3: 20; 9:
         18-19)  (அப் 13:20)

• சவுல் & மற்றவர்கள் (1 சாமு
        10: 5-6, 10-13; 19: 20- 24)

• இஸ்ரவேலின் 70 மூப்பர்கள்
    (எண் 11: 25)

• செமாயா (2 இராஜா 12: 22)
     (2 நாளா 12:5,7,15)

• சீலா (அப் 15: 32)

• சிமியோன் ( லூக்கா 2: 25-35)

• சாலமோன்
      ( சங்கீதம் 72: 7,10-11,17)

• இரண்டு சாட்சிகள்
      (வெ. விசே 11: 3,6,10)

• உரியா (எரேமியா 26: 20)

• சகரியா [யோவான்ஸ்நானன் தந்தை]    (லூக்கா 1: 67)

• சாதோக் (2 சாமு 15: 27)

• சகரியா (சகரியா 1: 1)
                   (எஸ்ரா 5: 1; 6: 4)

• சகரியா (யோய்தாவின் குமாரன்)   (2 நாளா 24: 20)

• செப்பானியா (செப் 1: 1)

• மத்தேயு

• மாற்கு

• லூக்கா

• பவுல்

• பேதுரு

• யாக்கோபு

• யூதா

பெண் தீர்க்கதரிசிகள் :

• மிரியம் (யாத் 15: 20)

• தெபோராள் (நியாதி 4: 4)

• உல்தா (2 இராஜா 22: 14)

• ஏசாயாவின் மனைவி (ஏசா 8: 3)

• அன்னாள் ( லூக்கா 2: 36-38)

• பிலிப்பின் 4 மகள்கள் (அப் 21: 8-9)

• ராக்கேல் ( ஆதி 30:24)

• அன்னாள் (1 சாமு 2: 1- 10)

• அபிகாயில் (1 சாமு 25: 28-31)

• எலிசபெத் (லூக்கா 1: 41-45)

• இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள் (லூக்கா 1: 46- 55)

தீர்க்கதரிசி குழுக்கள் :
• 1 இராஜா 18: 4,13

• 2 இராஜா 23 :2

• அப் 11 :27

• அப் 13: 1

• யூத மத தல்முத் ( யூத மத குடியுரிமை
& சடங்குகள்) சாராளையும் எஸ்தரையும் தீர்க்கரிசினிகளாக இணைத்திருக்கிறார்கள்.

சிலர் பெண் தீர்க்கதரிசிகள் பொய் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள், அவர்கள் :

• நொவாதியாள் (நெக 6: 14)

• யேசபேல் (வெ.விசே 2: 20)

பின்வரும் காலங்களில் உங்களது குழந்தைகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் – மூப்பர் கனவு காண்பார்கள், வாலிபர் தரிசனம் காண்பார்கள் என்று யோவேல் தீர்க்கதரிசி  என்று உரைத்திருக்கிறார். தீர்க்கதரிசிகள் எண்ணிக்கை இப்போது அதிகமாகியிருக்கிறதும் நிரூபணம் ஆகிவிட்டது.

யோவேல் 2
28 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29 ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.”

ஆகவே தீர்க்கதரிசி என்பவன் கர்த்தரால் தேர்ந்து எடுக்கப்பட்டு கர்த்தரால் அருளப்பட்ட மனுசனின் எதிர்கால செய்தியை பேசுபவனே ஆவான்.

நன்றி தமிழ்மணி

கிறிஸ்தவம் என்றால் என்ன?

கிறிஸ்தவம் என்றால் என்ன?
இயேசுவின் போதனையை அடிப்படையாய் கொண்டு இயேசுவே கிறிஸ்து என்று வெளிப்படையாக அல்லது பகிரங்கமாக அறிக்கை செய்வது "கிறிஸ்தவம்" அல்லது "கிறிஸ்தவன்" என்று "வெப்ஸ்டர்" என்ற வேத விளக்கவுரை விளக்கம் அளிக்கிறது.

"கிறிஸ்தவம்" மூன்று முறை புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது (அப். 11:26, 26:28) 1பேதுரு.4:16) இயேசு கிறிஸ்துவை பின்பற்றினவர்களுக்கு "கிறிஸ்தவர்கள்" என்று அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. இது கேளிக்கையாய் வழங்கப்பட்ட பெயர். இதன் உண்மையான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்த கூட்டம்" அல்லாத கிறிஸ்துவை "பின்பற்றுகிற கூட்டம்" "கிறிஸ்தவம்" என்ற வார்த்தை மறுபிறப்பு அடையாமல், பெயருக்கு ஆலயம் செல்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களாளே அதன் மேன்மைக்கு பாதிப்புண்டானது சபைக்கு செல்வது, நல்லவர்களாய் ஜீவிப்பது, சபையில் பணிவிடைகள் செய்வது நம்மை கிறிஸ்தவனாக மாற்றாது.

திருச்சபைக்கு செல்வதினால் கிறிஸ்தவனாய் மாறமுடியாது. திருச்சபையில் அங்கம் வகிப்பதாலும், தவறாமல் சபைக்கு செல்வதாலும் கிறிஸ்தவனாக முடியாது (தீத்து 3:5) சொல்கிறது. நம்முடைய நீதியின் கிரியையினால் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தினால் நம்மை இரட்சித்திருக்கிறார். உண்மை கிறிஸ்தவன் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் (யோ 1:12) உண்மை கிறிஸ்தவன் தேவபிள்ளையாய் மாறி, அவருடைய குடும்பத்தின் அங்கமாய் மாறவேண்டும். உண்மை கிறிஸ்தவனின் அடையாளம் மற்றவர்களை நேசிக்கிறவனும், தேவ வார்த்தைக்கு கீழ்படிந்தவனுமாய் இருக்க வேண்டும் (1யோ2:4, 2:10).

திங்கள், 4 ஜூலை, 2016

ஏன் தானியேல் ஜெபத்திற்கு பதில் கிடைக்க 21நாள் ஆனது?

தானியேல் 10:11-21

   "அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்."
"அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்."
பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.
இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.
"அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்."
"அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என்வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்."
"ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன்."
"அப்பொழுது மனுஷரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி,"
"பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்."
"அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்."
சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.

          இவ்வேத பகுதியில் உலகப் பேரரசுகளுக்கான, கண்ணுக்கு புலனாகாத பிரபுக்களின் போராட்டாங்களைப் பற்றி வாசிக்கிறோம். சாத்தானின் படையானது தீய வல்லமையுள்ள அதிபதிகளை வல்லரசுகளின் சார்பில் வானமண்டலங்களில் நிறுத்தி வைத்திருப்பதாக வாசிக்கிறோம். தானியேலின் காலத்தில்

*பெர்சியாவின் பிரபு இருந்தான் (10:13,20)*

*கிரேக்க அதிபதி வர இருந்தான் (10:20)*

தானியேலுக்காக செய்தி கொண்டு வந்த தூதனை பெர்சிய எல்லைக்குள் நுழைய விடாதபடி பெர்சிய பிரபு 21 நாட்கள் தடுத்து நிறுத்தியிருந்தான்.
அதன்பின் அந்த தூதனுக்கு உதவியாக இஸ்ரவேலின் அதிபதியாக தேவனால் நிறுத்தப்பட்டிருந்த மிகாவேல் வந்த பின்புதான் பெர்சியப் பிரபு வழிவிலகி இடங்கொடுத்தான் (10:21, 12:1) .
ஏனெனில் மிகாவேல் மிகவும் வலிமை படைத்த தூத தளபதியாவர். இவர் பெரிய அதிபதி என்று தானியேல் 12:1லும், பிரதான தூதன் என யூதா 9லும் வாசிக்கலாம். தூதர்கள் நடுவில் இத்தகைய அதிகார வட்ட அமைப்பு உண்டென்பதை பல வேதபகுதிகளும் குறிப்பிடுகின்றன.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...