செவ்வாய், 18 ஜூன், 2019

ஞாயிறு ஆராதனை- என்ன செய்ய வேண்டும்?

ஞாயிறு ஆராதனை-  என்ன செய்ய வேண்டும்?
__________________________

_நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்ளுவேன் (சங்கீதம் 5:7)._

*1. ஆராதனைக்கு ஆயத்தப்படுங்கள்.*
ஆராதனைக்கு செல்லுவதற்கு முன்பதாகவே அதற்கான ஆயத்தங்களை செய்யுங்கள். ஆராதனைகளுக்காகவும்,  அதை நடத்தும் ஒவ்வொருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். புதிய ஆத்துமாக்களை அழைத்துவர திட்டமிடுங்கள்.

*2. தவறாமல் வாருங்கள்.*
தவிர்க்க முடியாத காரணத்தை தவிர, ஆராதனைக்கு எக்காரணத்தைக் கொண்டும் வர தவறாதீர்கள். “எந்தவொரு வேலையும் அவர் ஆலயம் செல்லுவதிலிருந்து தடுத்தது இல்லை” என்று முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாசிங்டனை பற்றி கூறப்படுகிறது.

*3. சீக்கிரமாய் வாருங்கள்.*
ஆராதனைக்கு காலம் தாழ்த்தி,  அவசர அவசரமாக வருவது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உகந்தது அல்ல. ஆலயத்திற்கு சரியான நேரத்திற்கு வரும்போது கர்த்தரை நீங்கள் கனம்பண்ணுகிறீர்கள்.

*4. முழு குடும்பத்தையும் அழைத்து வாருங்கள்* .
ஆராதனை நேரம் என்பது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் மட்டும் செல்லக்கூடிய சிறப்பு கூடுகை அல்ல. “நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவா கூறுவதை நினைவுகூருங்கள்.

*5. கூடுமானவரை முன்வரிசையில் அமருங்கள்* .
பின்வரிசைகளை தாமதமாய் வருபவர்களுக்கும், குழந்தையை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு விட்டு விடுங்கள்.

*6. பயபக்தியாய் இருங்கள்.*
ஆராதனை ஸ்தலம் என்பது திரையரங்கமோ அல்லது பொழுதுபோக்கிற்கான இடமோ இல்லை. நீங்கள் ஆராதனைக்கு வருவது கர்த்தரை ஆராதிப்பதற்காகவே தவிர, சிரிப்பதற்கோ, மற்றவர்களோடு பேசிக் கொண்டிருப்பதற்கோ அல்ல. உங்கள் போனை அணைத்து வைக்க வேண்டும் அல்லது சைலென்ட் மோடில் வையுங்கள். ஆராதனை வேளையில் கர்த்தருடைய பிரசன்னம் மிகவும் பயபக்திகுரியது.

*7. பரிவுடன் நடந்து கொள்ளுங்கள்.*
வரிசையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை உள்ளே செல்லுங்கள் என்பதை தவிருங்கள். வயதானவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் வசதியான இருக்கைகள் கிடைக்க உதவுங்கள்.

*8. உற்சாகமாய் பங்கு பெறுங்கள்.*
ஆராதனையில் உற்சாகமாக ஈடுபடுங்கள். பிரசங்க நேரத்தில் கவனமாய் கவனியுங்கள்,  குறிப்பெடுங்கள். அச்சிடப்பட்ட வேதாகமத்தை கொண்டு வர மறக்காதீர்கள். நன்றாய் கைதட்டி பாடுங்கள்.  பார்வையாளராய் இருக்காதீர்கள். ஆராதனை செய்பவர்களாய் இருங்கள்.

*9. புதிதாய் வருபவர்கள் மேல் நோக்கமாயிருங்கள்.*
அவர்கள் நம்முடைய சிறப்பு விருந்தினர்கள். உங்கள் வீடுகளில் உங்கள் விருந்தினர்களை எப்படி உபசரிக்கிறீர்களோ அப்படி உபசரியுங்கள்.

*10. உற்சாகமாக  கொடுங்கள்.*
உற்சாகமாய் கொடுக்கிறவர்களிடத்தில் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார். இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள். உங்கள் காணிக்கை கர்த்தருக்குரியது என்பதை நினைவுக்கூறுங்கள். கர்த்தருடைய சமூகத்திற்கு வெறும் கையாக வர வேண்டாம் என்று வேதம் கூறுகிறது.

*11. முடிந்தவுடன் ஓடாதீர்கள்.*
ஆலயத்தில் தீ பிடித்தது போல ஆராதனை முடிந்தவுடன் ஓடாதீர்கள். மற்றவர்களிடம் நட்புடன் பேசுங்கள். குறைந்தது மூன்று முதல் ஐந்து பேருக்காவது கைக்குலுக்கி செல்லுங்கள். தனிமையாக நிற்பவர்களை கவனித்து விசாரியுங்கள்.

*12. தவறாமல் பங்குபெறுதல்.*
சபையில் உள்ள சிறு சிறு குறைகளை பார்த்து சபைக்கு வராமல் இருப்பதை நிறுத்தாதீர்கள். பூரணமான சபை என்று ஒன்றுமில்லை. நாம் அனைவரும் பூரணத்தை நோக்கி கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

*சபை என்பது ஒரு குடும்பம்*. “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” யோவான் 13:35.
_________________________

ஞாயிறு, 2 ஜூன், 2019

கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம் நித்தம் நித்தம் வாஞ்சிக்கும் சந்தோஷம்

கர்த்தர் வாசம் பண்ணும் பரலோகம்
நித்தம் நித்தம் வாஞ்சிக்கும் சந்தோஷம்//
நான் தேடும் அந்த நல்ல தேசம் //
தொட்டால் இன்றும் என்றும் சுக வாசம்//

1 தங்கமயமான எந்தன் தேவன் முகத்தை
உற்று உற்றுப் பார்த்து நானும் பூரிப்படைவேன்//
அங்கமெல்லாம் சொக்க வைக்கும் அந்த அழகே
ஆவலோடு தொட்டு நானும் முத்தமிடுவேன்

2 பன்னிரெண்டு வாசல்களின் முத்தை எடுத்து
என் மன்னவனின் கழுத்திலே மாலை போவேன்
இன்னும் அந்த நட்சத்திரம் அங்கே போகிறேன் //
நேசர் முகம் மட்டும் அங்கே பிரகாசிக்குமே

3 கண்ணீர் இல்லா அந்த தேசம் நானும் ஏகுவேன்
என் கண்ணாளனை கண்டு கண்டு அக மகிழ்வேன்//
கோடாகோடி தூதரோடு வானவீதியில்//
பரிசுத்தர் பரிசுத்தர் என்று பாடுவேன்

Priya yesu raju nu ne chuchi na chaalu. Tamil பிரியா யேசு ராஜு நு நே சுசி நாசாலு. Inba Yesu Raja Vai Naan Parthal Pothum இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும். Telugu & tamil

பிரியா யேசு ராஜு நு நே சுசி நாசாலு
மஹிமாலோ நேனாஎனதோ உண்டே சாலு //

நித்ய மைனா மோக்‌ஷ குருஹமு நந்து சேரி
பக்துல கும்புலோஹ ஷின்சில சாலோ

1 யேசுநி  ரக்த மந்து கடுகாபடி
வாக்யம்சே    நித்யம் பட்ர பரசபடி//
நிஷ்கலங்க  பரிசுதுலதோ பேதன் நேனு
பங்காரு வீதுலலோ திருகீதனு

2 முண்ட்ல மகு டம்பைன தலனு சுசி
சுவர்ன  கீரிதம்பெட்டி ஆனந்திந்துன் //
கொரடதொ கொட்டபடினா விகுன்சுசி
பிரதியொக்க காயமுனு முதடிதன்

3 ஆஹா ஹா  பூரா யெப்புடு ம்ரொகுதுந்தோ
ஆஹாநா  ஆசா யெபுடு தீருதுந்தோ//
தன்ரினா கன்னீடீனி துடசினெபுடோ
ஆஷாதோ வேசி உண்டே ந ஹ்ருதயம்

Priya yesu raju nu ne chuchi na chaalu
mahimaalo nenayanatho unte chaalu… ||2||
Nithyamaina moksha gruhamu nandhu cherii bakthula gumpulo harshinchina chaalo – priya yesu –

1.Yesuni rakthamandhu kadugaabadi-
vakyamche nithyam badra parachabadi
nishkalanka parishudhulatho pedhan nenu -||2||
bangaaru vidhulalo therigedhanu – ||2|| – priya yesu –

2.Mundla makutambaina thalanu chuchi –
swarna keeritambetti aanandhinthun
koradatho kottabadina veep chuuchi ||2||
prathiyokka gayamunu mudhadedhan ||2|| – priya yesu –

3 Ahaa aa buura yepudu mroguthundho –
ahaa na aasa yapudu theeruthundho
thandri na kannetini chudachunepudo… -2-
aasatho vechi unde na hrudhayam…… -2- – priya yesu –

Tamil version

Inba Yesu Raja vai Naan Parthal Pothum – இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

Inba iyeasu raajaavai naan paarththaal poadhum
Magimaiyil avaroadu naan vaazhnthaal poadhum (2)
Niththiyamaam moatcha veettil saerndhaal poadhum
Allaelooyaa koottaththil naan magizhndhaal poadhum (2)

1. Yaesuvin raththathaalae meetkappattu
Vasanamaam vaeliyaalae kaakkappattu (2)
Karaithirai atra parisuththaroadu
Aezhaiyaan pon veedhiyil ulaaviduvaen (2)

2. Thoodhargal veenaigalai meettum poadhu
Niraivaana jeya koasham muzhangum poadhu (2)
Allaelooyaa geetham paadi kondu
Anbaraam yaesuvoadu agamagizhvaen (2)

3. Mul kreedam sooddappatta thalaiyai paarppaen
Porkreedam sooddi naanum pugazhndhiduvaen (2)
Vaarinaal adippatta muthugai paarththu
Ovvoru kaayangalaal muththam seivaen (2)

4. Ennullam nandriyaal niraindhidudhae
Endhanin baakkiya veettai ninaikkaiyilae (2)
Allaelooyaa aamen allaelooyaa
Varnikka endhan naavu poadhaadhaiyaa (2)

5. Aahaa! ekkaalam endru muzhangidumoa
Aezhai en aaval endru theerththidumoa (2)
Appaa! en kanneer endru thudaikkiraaroa
Aavalaai aengidudhae enadhullamum (2)

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...