புதன், 11 ஏப்ரல், 2018

என் பெலனான கர்த்தரே

என் பெலனான கர்த்தரே
உம் வல்லமை தாருமே
கழுகு போல நான் செட்டை விரித்து
உயர பறப்பேனே -2

ஆமேன் அல்லேலூயா -4

1
சத்துவம் இல்லாமல் அடைக்கலத்தில்
என்னையும் தெரிந்துக்கொண்டீர்
பேசிட நாவில்லை என்று சொன்னென் என்னையும் பாட வைத்தீர் -2
இயேசுவின் விருப்பம் செய்திடவே
அர்பனித்தேன் என்னை உம் கரத்தில்

2
தேவன் என் வெளிச்சமும்
இரட்சிப்புமே
பயமின்றி வாழ்ந்திடுவேன்
ஜீவனின் பெலனும் அவர்தாமே
யாருக்கும் அஞ்சிடேனே -2
கன்மலை கோடை என் அடைக்கலமே
களிக்கூர்வேன் தினம் அகமகிழ்வேன் -2

7 சபை குறித்த பாடல்


வெளிப்படுத்தினாரே தேவன் வெளிப்படுத்தினாரே
உன் ஜீவன் காக்கவும்
என் ஜீவன் மீட்கவும் வெளிப்படுத்தினாரே -2

அவர் இருந்தவரும் இருக்கிறவரும்
வருகிறவருமே
அவர் இருந்தவராய் இருக்கிறேன் என்றவரே -2

ஆமேன் ஆலேலூயா
அல்பா ஒமேகா ஆலேலூயா
ஆமேன் அல்லேலூயா
அல்பா ஒமேகா
காதுள்ளவன் கேட்கட்டும் நீ ஜெயம் கொள்ளுவாயா
1
எபேசுவே கேள் ஆதி அன்பை விட்டாய்
ஆதி அன்பைக்கொண்டு மனம் திருந்த மாட்டாயா -2
2
சிமிர்னாவே கேள் உனக்கு பாடுகள் உண்டு
பயப்படாதே மரணம் வரையும் உண்மையாய் இரு -2
3
பெர்கமுவே கேள் நீ விக்கிரகம் வெருத்திடு
மனம் திரும்பு அவர் சீக்கிரமாய் உன்னிடம் வருவார் -2
4
தியத்தீராவே கேள் உன் கிரியை அரிவாய்
உனக்குள்ளதை நீ வருமளவும் பற்றிக்கொண்டிரு -2
5
சர்தையே கேள் நீ விழித்துக்கொண்டிரு
திருடனைப்போல் அவர் வருவதை நீ அறியாயே -2
6
பிலதெல்பியா கேள் அவர் வசனம் கை கொண்டால்
திறந்த வாசல் அவர் உனக்கு முன்னே வைத்துள்ளார் -2
7
லவோதேக்கியா கேள் கர்த்தர் உன்னை நேசிக்கிறார்
கடிந்துக்கொண்டு சிட்சை செய்யும்போது
மனம் திரும்ப மாட்டாயா -2

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...