செவ்வாய், 24 மார்ச், 2020

அதியாகமம்

அதியாகமம் 

இந்த நூல் மோசேயினால் எழுதப்பட்டது என்பதனை நாம்  அறிந்து கொள்ளலாம்.

ஆதியாகமம்(Genesis) என்ற சொல் கிரேக்க மொழியாகும். தொடக்கம்(Origin) என்பது இதன் பொருளாகும். ஆதியாகமத்தின் முதலாம் வார்த்தை எபிரேயு மொழியிலிருந்து “ ஆதியிலே”(In the beginning) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொடக்கமும் முடிவில்லாத இறைவனைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றின் தொடக்கத்தையும் கூறுகிறது. ஆனால் முடிவு இங்கே இல்லை இதன் உண்மை என்னவென்றால் இறைவன் மனிதனுக்கு வெளிப்படுத்தும் எல்லாம் எதிர்கால வெளிப்படும் படிப்படியாக கூட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆதியாகமம்  நூலில் சாத்தான் ஒரு சிறப்பு பகைவனாக காணப்படுகிறான். அவனின் பிரியமான தாக்குதல் விளம்பரப்படுத்தப்பட்டு இருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை ஏனெனில் தான் இறைவனின் பகைவன் என்றும் மனித குலத்துக்கு எதிரி அவன் என்றும் தன்னை இந்த நூலில் வெளிப்படுத்துகிறான் அவனுடைய அறிவை இந்த நூலில் முன் கூறுகிறது. அவனுக்கு உண்டாகும் தண்டனையையும் இன்னும் தெளிவாக விளக்குகிறது.

ஆதியாகமத்தின் செய்தியும் பொருளும்.

ஆதியாகமம் இறைவன் செயலாற்றுகிறார் என்பதை காட்டுகிறது நாம் வாழும் உலகத்தையும் மக்களையும் படைத்தவர் அவர் உண்டாக்கின அனைத்தும் நல்லவையாகவே விளங்கின. ஆனால் மக்களுக்கு மட்டும் அவர் முழு உரிமை தந்திருந்தார். மக்கள் அவருக்கு கீழ்ப்படியாமையைக் தெரிந்து கொண்டனர். அதன் பயனாக நாம் அவரிடம் இருந்து பிரிந்து உறவு நீங்கி புதியவர் ஆனோம். இந்த உலகமும் துன்பத்தையும் மரணத்தையும் அறிந்தது. ஆனால் இறைவன் மக்களை அப்படியே விட்டுவிடவில்லை . நோவா ஓடு ஒரு புதிய தொடக்கத்தை உண்டாக்கினார் தேவன் ஆபிரகாமை தெரிந்துகொண் டார் .அவன் சந்ததியின் மூலமாக எல்லா மக்கள் இனத்தையும் காப்பாற்றும் திட்டத்தை தொடங்கினார். 

ஆதியாகமத்தின் முக்கிய பாத்திரங்கள்.
ஆதாமும் ஏவாளும், காயீனும் ஆபேலும், நோவா, ஆபிரகாமும் சாராளும், லோத்து, ஈசாக்கு, ரெபெக்காள், யாக்கோபு, ஏசா, ராகேல், லேயாள், யோசேப்பு,அவன் சகோதரர்கள்.

ஆதியாகமம் தொடக்கங்களின் நூலாக இருக்கிறது.
1.ஆதி.1:1–25 உலகத்தின் தொடக்கம்
2.  ”       1:26–2:25 மனித குலத்தின் தொடக்கம்
3.  ”    3:1–7 உலகத்தில் பாவத்தின் தொடக்கம்.
4.  ”    3:8–24 இரட்சிப்பு உறுதிமொழியின் தொடக்கம்.
5.    “   4:1–15 குடும்ப வாழ்வின் தொடக்கம்.
6.     “   4:16.9:29 மனிதன் உண்டாக்கின நாகரீகத்தின் தொடக்கம்.
7.    ”    10–11 உலக நாடுகளின் தொடக்கம்.
8.     “    12–50 எபிரெய மக்களின்  தொடக்கம்.
( ஆதாம் இறைவனோடு தொடங்கினான். கீழ்படியாமை மூலமாக விழுந்துபோனான்
 ஆதி 3 ஆம் அதிகாரம்).

ஆதியாகமம்2000 ஆண்டு செய்திகளை நமக்குத் தருகிறது. கடவுளின் தொடங்கி யோசேப்பின் மரணத்தோடு முடிகிறது.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...