வெள்ளி, 30 டிசம்பர், 2016

*மகா உபத்திரவம்

    *மகா உபத்திரவம்*

ஏழு முத்திரைகள் உடைக்கப்படுதல்: 

1. அந்திக்கிறிஸ்து வெளிப்படல் 

2. அராஜகம்

3. பஞ்சம்

4. நாலிலொரு பங்கு மக்கள் கொல்லப்படுதல் 

5. ரத்த சாட்சிகள் 

6. பூமியதிர்ச்சிகள் 

7.  ஏழு எக்காளங்கள்  ஊதப்படுதல்          
      👇🏾👇🏾
       1.மரங்கள் - பசும்புல் எரிந்து போகுதல்

       2. கடல் ரத்தமயமாவது - கடல் ஜீவன் மூன்றிலொரு பங்கு செத்துப்போகும் - கப்பல் சேதமாகும் 

       3. மூன்றிலொரு பங்கு ஆறுகள் & நீரூற்றுகள் கசக்கும் - மனிதர்கள் இறப்பார்கள் 

       4. சூரியன், சந்திரன்,  நட்சத்திரங்கள் அதனதன் நேரத்தில் மூன்றிலொரு பங்கு ஒளி கொடுக்காது. இருளடையும்.

       5. பாதாளக்குழிகள் திறக்கப்படும், அதிலிருந்து வரும் புகை சூரியனையும் வானத்தையும் அந்தகாரப்படுத்தும், பின் தேளுக்கு ஒத்த வெட்டுக்கிளி குதிரை மாதிரி வந்து 666 முத்திரை பதித்தவர்களை கொட்டும். 5 மாதத்திற்க்கு நடக்கும். சாக மாட்டார்கள்.

       6. குதிரை சேனைகளில் தூதர்கள்    

அக்கினி -  புகை - கந்தகத்தால் பூமியின் மூன்றிலொரு பங்கு மக்களை அழிவார்கள்.

    7. சாத்தானும் அவனைச்சேர்ந்த (வானத்திலே நடந்த யுத்தத்தில்) தூதர்களும் தாளத்தள்ளப்பட்டார்கள்.

       7 கலசங்கள் ஊற்றப்படுதல் : 👇🏾

              1.  666 முத்திரை பதித்தவர்களுக்கும் விக்கிரக வழிபாட்டுக்காரர்களுக்கும் புண்கள் உண்டாகும்.

              2. கடல் செத்தவனைப்போல்  ரத்தமயமாவது - கடல் உயிரினங்கள் எல்லாம் இறந்து போகும்.

              3. நதிகள் & நீரூற்றுகள் இரத்தமயமாகும் - பரிசுத்தவான்களையும் தீர்க்கதரிசிகளையும் கொன்று ரத்தத்தை கண்டவர்கள் - குடிக்கும் தண்ணீர் அது.

              4. சூரியன் மீது கலசம் ஊற்றப்படுதல் - தீயினால் மனுஷர்கள் அழிவு

              5. அந்திக்கிறிஸ்து (மிருகத்தின்) மீது ஊற்றப்படுதல் - அந்திக்கிறிஸ்து ராஜ்யம் அழிதல் 

              6. எப்பிராத்து நதி மீது ஊற்றி நதி வறண்டு போதல் - கிழக்கு தேச படைகள் வர இஸ்ரவேலுக்கு ஆதரவாக வர தண்ணீரை வறண்டு போக செய்தல். அந்திக்கிறிஸ்துவும் சாத்தானும் கள்ளத்தீர்க்கதரிசியும் யுத்தத்திற்க்கு ராஜாக்களை சேர்ப்பார்கள். 

              7. மகா பாபிலோன் விழுந்தது - விக்கிரக ஆவியுடயவளும் வேசித்தன ஆவியுடையவளும் உலகத்தை மோசம் போக்கின ஆவியுடையவளுமான ஸ்திரீ இவள்.

வியாழன், 29 டிசம்பர், 2016

நாம் யாரை பாஸ்டர் என்று அழைக்க வேண்டும்?

கேள்வி - நாம் யாரை பாஸ்டர் என்று அழைக்க வேண்டும்?
இன்றைக்கு அப்படி சொல்பவரை குறித்து உங்கள் கருத்து?

பாஸ்டர்(pastor) என்றால் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
Mat 11:15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.
Rev 3:6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
இன்றைக்கு கையில் பைபிள் எடுத்தவர்கள் எல்லாம் தங்களை பாஸ்டர் என்ற அழைத்துக் கொள்ளுவதை பார்த்து இருப்பீர்கள்.அநேக ஊழியக்காரர்களும் தங்களை பாஸ்டர் என்று அழைத்துக் கொள்ளுவதை விரும்புகிறார்கள், ஆனால் புதிய ஏற்பாட்டு வேத வாக்கியத்தில் இந்த பாஸ்டர் என்ற வார்த்தை ஒரே ஒரு முறைதான் வந்து இருக்கிறது
Eph 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.
Eph 4:11 And he gave some, apostles; and some, prophets; and some, evangelists; and some, pastors and teachers;
இந்த வசனத்தில் மேய்ப்பர் என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் பாஸ்டர் என்று மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.
இந்த மேய்ப்பன்(pastor) என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் எப்படி மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள்
Act 20:17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
Act 20:17 And from Miletus he sent to Ephesus, and called the elders of the church.
இந்த வசனத்தில் மேய்ப்பர் என்ற மூப்பர்(elder) என்று பெயர்க்கப்பட்டுள்ளது
Act 20:28 Take heed therefore unto yourselves, and to all the flock, over the which the Holy Ghost hath made you overseers, to feed the church of God, which he hath purchased with his own blood.
Act 20:28 ஆகையால், உங்களைக்குறித்த
ும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொ
ண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.
பாஸ்டர்(pastor) (மூப்பர்) என்ற வார்த்தை இந்த இடத்தில் கண்காணிகள் (overseers) என்று மொழி பெயர்க்கப்பட்டள்ளது
1Ti 3:1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
1Ti 3:1 This is a true saying, If a man desire the office of a bishop, he desireth a good work.
அதே மேய்ப்பன்( என்ற வார்த்தை இந்த பகுதியில் கண்காணி(bishop) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பாருங்கள் பாஸ்டர்(pastor,மேய்ப்பன்), மூப்பர்(elder), கண்காணி(bishop, overseer) போன்ற அனைத்து வார்த்தையும் ஒரே கர்த்தருடைய பணியைத்தான் குறிப்பிடுகிறது.
இந்த பாஸ்டருக்கான(pastor, elder, bishop, overseer) தகுதிகள் என்ன?
பரலோகத்தின் பிதாவானவர் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு அதற்கான தகுதியைக் கொடுத்து இருக்கிறார்.
பாஸ்டர் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்களுக்கு இந்த எல்லா தகுதிகளும் இருக்க வேண்டும்
1Ti 3:1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
1Ti 3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
1Ti 3:3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமா
யிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
1Ti 3:4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக
்கவேண்டும்.
1Ti 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால்
, தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
1Ti 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
1Ti 3:7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக
்கவேண்டும்.
Tit 1:5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
Tit 1:6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
Tit 1:7 ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனு
க்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்ப
டாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவ
னும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனுTit 1:7 ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,
Tit 1:8 அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
Tit 1:9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்
கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகி
றவனுமாயிருக்கவேண்டும்.
பாருங்கள் பாஸ்டருக்கான தகுதிகளில் அவர் திருமணம் ஆனவராக இருக்கவேண்டும். அவருக்கு பிள்ளைகள்(பன்மை) இருக்கவேண்டும், மேலும் மேற்சொன்ன எல்லா தகுதிகளும் இருக்க வேண்டும்
அதனால் தான் அப்போஸ்தலனாகிய பவுல்(திருமணம் செய்யவில்லை) தன்னை மூப்பர்(elder) என்றோ பாஸ்டர்(pastor,மேய்ப்பன்) என்றோ கண்காணி((bishop, overseer.பிஷப்) என்றோ தன்னை அழைக்காமல் தன்னை கர்த்தருடைய ஊழியக்காரன்(அடிமை) என்றும் சகோதரன் என்றே தன்னை அழைத்துக் கொண்டார்.
பாஸ்டர்(pastor) எப்படி தெரிந்து எடுக்கப்பட வேண்டும்?
பாருங்கள் பாஸ்டர்(pastor,மேய்ப்பன்), மூப்பர்(elder), கண்காணி(bishop, overseer) இந்த வார்த்தைகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் ஒருமையில் பயன்படுத்தப்படவில்லை எல்லா வார்த்தைகளும் பன்மையில்(ஒன்று
க்கு மேற்பட்டவர்கள்) வார்த்தையில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய ஏற்பாட்டில் உள்ள சபைகளில் பாஸ்டர்(மூப்பர்) என்பவர் இல்லை பாஸ்டர்கள்(மூப்பர்கள்) என்று ஒன்று மேற்பட்டவர்கள் தான் இருந்து இருக்கிறார்கள். இன்றைக்கு வளர்ந்த சபைகளில் 1தீமோ 2;1 -7 தீத் 1:5-9 வசனங்களில் உள்ள தகுதிகள் யாருக்கு இருக்கிறதோ அவர்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள
ை பாஸ்டர்களாக(மேய்ப்பர்கள். மூப்பர்கள். கண்காணிகள்) தெரிந்து எடுக்கலாம். இதில் ஏதாவது ஒரு தகுதி குறைந்தாலும் அவர்கள் பாஸ்டர்களாக(pastor,மேய்ப்பன்.(
மூப்பர்,elder,) (கண்காணி,bishop, overseer) நியமனம் செய்யக்கூடாது.
தெரிந்து எடுக்கும் பாஸ்டர்களை சபையானது போஷிக்க வேண்டும்
1Ti 5:17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
சபையின் ஊழியரும்,சபையின் விசுவாசிகளும் தெரிந்து எடுக்கப்படும் பாஸ்டர்களுக்கு(
pastor,மேய்ப்பன்.(மூப்பர்,elder,) (கண்காணி,bishop, overseer) கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்
Heb 13:17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
ஆகையால் இந்த தகுதிகள் இல்லாதவர்கள் கிறிஸ்துவின் ஊழியத்தை செய்யக்கூடியவர்கள்

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...