செவ்வாய், 28 மார்ச், 2023

பவனி பாடல்கள் தொகுப்பு / குருத்தோலை ஞாயிறு பாடல்கள் / palm Sunday songs

பவனி பாடல்கள் தொகுப்பு / PALM SUNDAY SONGS
மத்தேயு 21:9 முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
பாடல் 1
பவனி செல்கின்றார் ராசா நாம் பாடிப் புகழ்வோம் நேசா 
அவனிதனிலே மறிமேல் ஏறி  ஆனந்தம் பரமானந்தம்

1. எருசலேமின் பதியே சுரர் கரிசனையுள்ள நிதியே
அருகில் நின்ற அனைவரும் போற்றும் அரசே எங்கள் சிரசே 

2. பன்னிரண்டு சீஷர் சென்று நின்று பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத

3. குருத்தோலைகள் பிடிக்க பாலர் கும்பல்கும்பலாக நடக்க
பெருத்த தோணியாய் ஓசன்னாவென்று போற்ற மனம் தேற்ற 

4.மங்கள ஓசை ஒலிக்க மாந்தர் ஏசுவை யார் என்று கேட்க 
இறைவன் பெயரால் போற்றப் பெறும் ராஜன் - வேதநாதன்

பாடல் 2
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.

2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

3. பாவமதைப் போக்கவும் இப்பவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5.வீதியெங்கும் ஓசை கேட்டு ஆனந்தத்தில் திளைத்தார்
ஆவல் மேவும் பவனியோடு நம்மில் கோலம் காணுவோம்.

6. போகும் பாதையாதுவென்று நாடாதிருப்போரையும்
இடுக்கத்தின் வாசலிலே பயணம் செய்ய ஏகுவோம்.

7. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் திரியேகரைப் போற்றுவோம்.

பாடல் 3
தாவீதின் மைந்தனுக்கே ஓசன்னா  தாரணி வந்தவர்க்கே ஓசன்னா 
பிதாவின் சுதனுக்கே ஓசன்னா  பரிசுத்த ஆவிக்கு ஓசன்னா 
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா -3

1.மரிமேல் வருபவர் மாசற்றவர்  மகிபனுக்கே ஓசன்னா 
மணம் குளிர பாடிடுவோம்  மன்னவர்கே ஓசன்னா

2.எருசலேம் வீதியிலே பவணிவருபவர் ஸ்கோதிரிக்கப்படத்தக்கவர்
எந்நாளும், மகிழ்ந்தே பாடிடுவோம்  உன்னதத்தில் ஓசன்னா

3.மரக்கிளைகள் தறித்தே பாதைகளை நிரப்பி மேலாடைவிரித்திடுவோம் 
மன்னாதி மன்னன் மாதேவன் ஏசுவுக்கு  உன்னகத்தில் ஓசன்னா

பாடல் 4
ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜெ
மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜெ ஜெ

1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் 
கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார்.

2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே 
பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார்.

3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் 
சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார்.

4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே 
மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே.

5. ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்
ஏந்தி நின்று ஆடிப்பாடிச் சென்ற சிறுவரே.

6.ஆண்டவருக் கேற்ற மறி நானும் ஆவேனே
தாண்டவம் ஆடி அவரை ஈண்டு போற்றுவேன்

பாடல் 5
ஓலைக் கரங்களில் ஓசன்னா சாலை நெடுகிலும் ஓசன்னா
தாவீதின் மகனே ஓசன்னா உன்னதம் தனிலே ஓசானா

மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்
பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்
விடியல் வேந்தனை வரவிடுங்கள்
வாழ்வை நமக்குத் தரவிடுங்கள்

அடிமை நிலையை மாற்றப் பிறந்தவர்
அன்பின் அரசர் இவர் தானோ ?
எளிமை நிலையை தோளில் சுமந்த
விண்ணின் மகனும் இவர் தானோ ?

மரியின் மகனாய் பிறந்தாரோ
மறியின் முதுகில் இருந்தாரோ
மனிதம் சுமந்து திரிந்தாரோ
மரணம் வருதல் அறிந்தாரோ

ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்து
அரசின் அரசை வரவேற்போம்
எபிரே யத்துச் சிறுவர் போலே
குருத்து ஓலைகள் அசைத்திடுவோம்

இருளில் ஒளியாய் நடந்தாரோ
எங்கும் ஒளியா திருந்தாரோ
விண்ணின் வாழ்வைத் துறந்தாரோ
பாவம் மறையத் தெரிந்தாரோ

பாடல் 6
கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட பாலர்கள்
ஓசன்னா பாடும் கீதம்  காதில் வந்து கேட்குதோ

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று சொல்லி 
ஆடினர் பாடினர் கூடினர் தேடினர்

1.யாருமே ஏரிடாத குருகுரு கழுதை 
தாருமே ஆண்டவர்க்கு என்று சீடர் கேட்டார்
நீருமே தேவை ஐயா ஆண்டவர்க்கு என்றுமே -2
சேருமே வாருமே நாளுமே தினம் தினம்

2.கர்த்தரின் நாமத்தினால் வருகிற ராஜாவாம்
நித்யரும் ஸ்தோத்தரிக்கப்பட்டவரும் இவர்தாம்
பரலோகில் சமாதானம் உன்னதத்தில் மகிமை -2
பாடியே போற்றியே வாழ்த்தியே புகழ்ந்தனர்

3.எருசலேம் எருசலேம் ஏன் இந்த அலட்சியம்
உருகி நிற்கிறேனே நான் உனக்காக நித்தமும்
இந்த நாளில் (இந்நாளில்) சமாதானம் பெற்றிட நினைப்பாயா -2
இல்லாவிடில் அழிவும் கேடும்

பாடல் 7
வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்

1.திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்

2.அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்
அதமக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்

3.சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்

4.இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்
நீதிக்கவசம் கையாடுவோம் வசம்

5.விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்
அதை மேலுயர்த்துவோம்

பாடல் 8
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்

1.வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே

2.ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு நாம் அலகையை வென்று விட்டோம்

3.காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்தோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

4.கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம்

பாடல் 9
யெகோவா நிசி யேகோவா நிசியை போற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே – அல்லேலூயா

1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா?
யூத சிங்கம் யுத்த சிங்கமே – யெகோவா

2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல வீரரே – யெகோவா

3. எதிரி வெல்லம் போல ஏறி வருகின்றான்
இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா?
கர்த்தர் நாமம் வல்ல நாமம் – யெகோவா

4. ஆவியில் நிறைந்த ஜெபம் செய்வோமே
ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே
ஆர்ப்பரித்து அலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை வெல்வோமே
கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ – யகோவா

5. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவ தேவ சேனை அல்லவோ? – யகோவா

பாடல் 10
யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
உமக்கே ஆராதனை
யெகோவாயீரே தேவைகளை சந்திப்பீர்
உமக்கே ஆராதனை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா

1. ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைத்தவரே ஆராதனை
ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே
ஜெபத்தின் வீரரே ஆராதனை

2. அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை
அன்பின் ராஜனே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே ஆராதனை

3. சர்வ வல்லவரே ஆராதனை
சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை
சாத்தானை ஜெயித்தவரே சாவை வென்றவரே
சர்வ சிருஷ்டிகரே ஆராதனை

பாடல் 11
ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர்
ஓசான்னா தாவீதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. தாவீது அரசரின் புத்திரரே ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப் புகழ் அடைந்தவரே எம்
தேவனே தேவனே வருவீரே - ஓசான்னா

2. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் போதனரால் புகழப்பட்டீர் 
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதிப் பிதாவிடம் பதவி பெற்றீர்

3.மரித்தவர் பலருமே உயிர்பெற்றார் - ஒரு
மனமுடை விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சோதரன் பெற்றார் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே

4.யூதேயா நாட்டில் புகழ் பெற்றீர் - எம்
யூத ராஜனாய் முடிபெற்றீர் 
எருசலேம் நகர்தனிற் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசரே அரசாள்வீர்

5. பாவிகளைத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் பொறுக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே

6. கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே

7. உலகமே நுமது அரிய வேலை - எம்
உயிருமே நுமது மா புதுமை
உலகத்தை யாண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே

பாடல் 12
போலா கிறிஸ்து மஹாராஜுக்கு ஜெ
போலா போலா போலா சாரே போலா

1. யேஷு சி பிரிதி லைபரி-3
 யேஷு சி சக்தி லைபரி-3
 யேசு சே ஆனந்த் லைபரி-3

2. யேசு சி க்ருபா லைபரி-3
 யேசு சே சமர்த் லைபரி-3
 தியாச்சா அபிஷேக லைபரி-3

பாடல் 13
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே

1.அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

2.துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை   கர்த்தர் நம்முடனே

3யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமில்லை கலக்கமில்லை  மீட்பர் நம்முடனே

தாவீதின் மைந்தனுக்கே  ஓசன்னா
உலகத்தின் ராஜாவுக்கே  ஓசன்னா
இயேசு மகா ராஜாவுக்கே  ஓசன்னா
தாவீதின் குமாரனுக்கு  ஓசன்னா
இஸ்ரவேலின் ராஜாவுக்கு   ஓசன்னா
இயேசு கிறிஸ்துவுக்கு  ஓசன்னா
கழுதையின் மேல் பவனி வந்தவர்க்கு  ஓசன்னா
உலகத்தின் பாவத்தை போக்க வந்தவர்க்கே  ஓசன்னா
நம்மை வழிநடத்து ஏசு ராஜாவுக்கு  ஓசன்னா
உன்னதத்திலே  ஓசன்னா
போலா கிறிஸ்து மகா ராஜ் கீ  ஜே

ஞாயிறு, 26 மார்ச், 2023

ஈசன் நமக்காய் மனிதனாய் உதித்தார்

1. ஈசன் நமக்காய் மனிதனாய் உதித்தார்;
உலகத்தின் பாவத்தை போக்கிடவே;
நேச மா மரியா மக்தலேனா
ஈசனை பெற்ற பாக்கியம் அடைந்தாள்’.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,

2. அன்பு காண் மரியா மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலே னா.
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-

3. உண்மை யென்ற சிலுவையிற் கட்டி,
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்
வண்மைப் பேருயிர் – யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியா மக்தலே னா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.

live poda website

https://vdo.ninja/

நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருளநமக்கொரு பாலன் பிறந்தார்

நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருள
நமக்கொரு பாலன் பிறந்தார்

அனுபல்லவி:
மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திட
ஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம

சரணம்:
1.சகலமும்  படைத்திட்ட சர்வ வல்லோன்
இகமதில் பிறந்தது விந்தையன்றோ!
நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார்
ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார்
தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில்
அவரின்றி வாழ்வே இல்லை-தினம்
அனுமதியார் ஒரு தொல்லை-தேவ
அன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு

2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன்
கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்!
வானவரோடும் மேய்ப்பர்களோடும்
கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்.
மாற்றிடுவார் பவரோகம்-நம்மை
செய்திடுவார் சிங்காரம்-தினம்
சுமந்திடுவார் நம்பாரம்-நம்
வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு
ஸ்வரங்கள் 
1.ஸா ரீ  கா மா  ப த நி - நமக்கொரு 
2.ரீ மா பா ரீ  நீ ரீ  ஸா ... நி ரி ம ப த நி - நமக்கொரு 
3.கா க  கா கா க கா .....க ரி ச நி  நீ ரி கா பா மா கா ....
   கா க கா கா க காப ...க ரி ச நி   நீ ரி  கா  ப ம ப  கா ...
   நீ ரி கா பமப மா ...... ரீ ம பா  நீ தா பா 
   நீ  ரி கா ம ப த பா ....ரீ  ம  பா ச^  நி த பா - த நி சா^  
  நமக்கொரு  பாலன் பிறந்தார் ........                      
                                                            
4. சாச பாப மாம காக ரி க ரி ச [ சாரிகா] {கா பா சா^  }
    காக நீநி பாப  மாம ரிகரிநி    [ நீபாமா]  {ரீ^  சா^  தா }
    சாச  பாப மாம காக ரிகரிச [காமாபா] {சா^  தா நீ }
    காக  நீநி பாப காக    ரிகரிநி[பாகாமா]  {நீ சா^  ரீ^  }
^ சா ச சா சா சா நி ரி ச நீ தா ...மா ம தா  நீரி  நிரி க ரி நீ .....
கரிச நீத பமகா ... ரி சா நி   தபமகரி ....ச நீ தா பமகரி 
க ம பா ......... ச ரி  கா .....(3)
ச ரி க ம ப த நீ ...ரி க ம ப த நீ ச ...க மப த நீ ச ரீ ....
ச ரி க ம ப த நீ ....ரி க ம ப த நி ச ... க ம ப த நீ ச 
சரிகம பதநி   ரிகமப தநிச  கமபதநீசரீ ......... 
க ரி சநீத   ரி ச நீதப    ச நீ த பமக......
க ரி ச நீ த     ரி ச நீ த ப   ச நீ த ப ம   க ம ப த நீ ச - நமக்கொரு ..........

பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்

பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
பாரிடை பிறந்தவரே…
பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்
தரணியில் பிறந்தவரே… (2)

1. மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்
வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)
தேவ குமாரா தாவீதின் மைந்தா
தாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே
– பரிதி

2. கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்
பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)
மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்
மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே
– பரிதி

துள்ளித்துள்ளி ஓடி வந்தோம் சின்ன பாலகா

துள்ளித்துள்ளி ஓடி வந்தோம் சின்ன பாலகா 
சின்ன பிள்ளை எங்கள் நெஞ்சில் வந்துதித்த வா 

தீர்க்கண் முன்னுரை படியே வந்த எங்கள் வானவா 
தீய சாத்தானை மிதிக்க மானிடராய் வந்தவா? 
சேர்ந்து நாங்கள் பாடிடுவோம் தூய ஆவி தந்த வா 
சோர்ந்திடாமல் எங்கள் உள்ளமதிநிலே தங்கவா.

 மாடடை கொட்டிலையே மாளிகையாய் கொண்டவா
 பசும்பெல்லாம் தரையை பஞ்சனையாய் கண்டவா
 பொன் போலம் துபவர்கத்தால் ஞானியர் வனங்கவா 
விண்வெளி நட்சத்திரத்தை வானிலே பதித்த வா 

நள்ளிரா வேலையிலே மந்தையர் மகிழவா 
ஆடிப்பாடி தெய்வத்தூதர் ஆரவாரம் செய்யவா 
ஆரிராரோ பாடி அன்னை மரியும் தாலாட்டவா 
முன்னறிந்து முன்னணியில் மஞ்சம் கொண்ட மன்னவா 

ஆனந்தமாய் குடி வந்தோம் அல்லேலுயா பாடுவோம் 
அற்புதர் இயேசுவின் தூய ஆவியில் நிரம்புவோம் 
பொற்பரனை உந்தனுக்கே ஸ்தோத்திர பாடல் பாடுவோம். 
பாத்திரமான காணிக்கையாய் உள்ளத்தை படைக்கிறோம்

ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி 20 23

ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி 20 23 
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 23 
ஹால ஹால ஹால ஹால ஹல்லேலூயா 
ஜாலி ஜாலி ஜாலி

1.பஞ்சங்கள் பட்டினி இனி இல்லையே 
நெஞ்சங்களில் இயேசு இனி இருப்பாரே 
துன்பங்கள் பறந்து ஓடிவிடுமே 
ஜாலி ஜாலி ஜாலி 

2.நோய்கள் நொடிகள் ஒழிந்திடுமே 
நோயற்ற வாழ்வுகள் தந்திடுவாரே 
கண்களில் கண்ணீர்கள் இனி இல்லையே 
கன்னிமை போல இயேசு இருப்பாரே

ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி 20 23 
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 23 
ஹால ஹால ஹால ஹால ஹல்லேலூயா 
ஜாலி ஜாலி ஜாலி

தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே

1. தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உந்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர் (2)

மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன், என் முழு இதயத்தோடு (2)
என் கர்த்தர் நல்லவர், மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் (2)

2. வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்( தேவ )
ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே (2)

3. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர் (2)

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமேவெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே
வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே
வயல்வெளி காடாக எண்ணப்படுமே
பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்தோடுமே

வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்
காடு வெளி களித்து செழிக்கும்
லீபனோனின் மகிமை வருமே
கர்மேல் சாரோன் அழகு பெறுமே - வனாந்திரம்


தளர்ந்த கைகளை திடப்படுத்தி
தள்ளாடும் கால்களை பெலப்படுத்தி
திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்
பதில் அளிக்க தேவன் வருவார் -வனாந்திரம்


குருடர்களின் கண்கள் காணுமே
செவிடர்களின் செவிகள் கேட்குமே
முடவன் மானைப் போல துள்ளுவான்
ஊமையன் நாவும் பாடுமே - வனாந்திரம்


மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே
நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே
ஆசீர்வாத மழைபொழியுமே - வனாந்திரம்

எல்லாம் பார்த்துக் கொள்ளும் யெகோவா தெய்வம் நீரே

எல்லாம் பார்த்துக் கொள்ளும் 
யெகோவா தெய்வம் நீரே 
என்னை சுகமாக்கும் 
யேகோவா ரப்பா   நீரே

உன் வஸ்திரத்தை தொட்ட போது 
மகிமை புறப்பட்டதே 
உம் வல்லமையினால் பெரும்பாடுள்ள 
வியாதி நீங்கி போனதே

மரித்துப்போன லாசருவை  
உயிரோடு எழுப்பினரே 
கெட்டுப்போன 
சரிரத்தையும் உயிர்ப்பிக்க வல்லவரே


கட்டப்பட்ட மனிதர் எல்லாம் 
கட்டவிழ்த்து விடுவித்தீரே 
காயப்பட்ட இருதயத்தை 
குணமாக்கி மகிழ்வித்தீரே

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்இயேசுவின் நாமமே

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம்
இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே – 2

இயேசு நாமமே
ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)

அல்லேலூயா ஒசன்னா
அல்லேலூயா ஆமென் (2)

1. பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமே
நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே

2. சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்ரு கோட்டைகளை தகர்த்தெறிந்திட்டதே
கிறிஸ்தேசுவின் நாமமே

3. சரீர வியாதிகளைக் குணமாக்குதே
இயேசுவின் நாமமே
தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே

voice removel website

https://vocalremover.org/

கண்டாலும் எத்ற வெல்யகருண என்மேல் ச்சொரிஞ்சு

ஹா கண்டாலும் எத்ற வெல்ய
கருண என்மேல் ச்சொரிஞ்சு
ச்சங்கு பிழிஞ்சேடுத்தென்
கரகள் கழுகி நன்னாய் - 2
ஆலொழிஞ வீடுபொல்
இருந்நென்டே ஆயுசினே
ராஜா கோலாஹலம் கொண்டு
நிரச்சு ஜீவிப்பிசே 

ஆனந்தத்தோடே ஆடும் என் கால்கள்
ஆனந்தத்தோடே ஆடும் - 2

கூடே நடந்ந கூட்டர் 
பாதி வழி விட்டுட்டோடி
சங்கடத்தால் ஸ்தம்பிச்சு
ஒட்டபெட்டு போய்ந்நாளும் - 2
சந்த்ய இங்ஙள் விலாபம்
வந்நு நிழல் முடியாலும்
ராவிலே ஆனந்தமென் 
கண்ணின் மும்பில் விளையாடும்

ஆனந்தத்தோடே ஆடும் என் கால்கள்
ஆனந்தத்தோடே ஆடும் - 2

பூகோலம் உண்டாகுமுன்பே
தானென்னே அறிஞ்சென்னே
பண்டு பண்டு பண்டேஎன்
பேரு ச்சொல்லி விளிச்சென்னே - 2
பொண்ணு தம்புரான் தண்டே
கோடா கோடி தூதருமாய்
என்னே தன்னோடுகூடே 
கொண்டு போகான் வருந்நென்னே 

ஆனந்தத்தோடே ஆடும் என் கால்கள்
ஆனந்தத்தோடே ஆடும் -




Ha! Kandaalum ethra vallya karuna enmel chorinju
Changu pizhinjeduthen karakal kazhuki nannay
Aalozhinja veedupol irunayentayusiney 
Raja kolahalam kondu nirachu jeevippichey!

Aanandathodey aadum en kaalkal anandathodeyadum
Aanandathodey aadum en kaalkal anandathodeyadum

Koodey nadanna kootar paathi vazhi vittatodi
Sangadathal sthambichu ottapettu poyennlum
Sandhyingal vilaapam vannu nizhal moodiyalum
Raviley aanandamen kannin munbil vilayadum

Aanandathodey aadum en kaalkal anandathodeyadum
Aanandathodey aadum en kaalkal anandathodeyadum

Boogolam undakkumumbey thaneney arinjenney
Pandu pandu pandey en Peru cholli vilichenney
Ponnu thamburan thantey koda kodi dootharumayi
Enney thannodukoodey kondupokan varunnaney!

Aanandathodey aadum en kaalkal anandathodeyadum
Aanandathodey aadum en kaalkal anandathodeyadum

கிராம ஊழிய

எல்லாரும் இயேசு கிட்ட வாங்க
ஓ மனிதனே நீ எங்கே போகிறாய்
உனக்கொருவர் இருக்கிறார்
வா வா இயேசுவண்டை வா
அண்ணே என் பொன்ணணே
வருவாய் தருனம் இதுவே

உள்ளத்தில் இருந்து ஆராதனைஉணர்வே உமக்கு ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே உமக்கே ஆராதனை – 4 1. ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர் ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனிலே வாசம் செய்பவர் சேராபீன் தூதர் போற்றும் மிகவும் பெரியவர் 2. நீர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர் அண்டினோரை அன்பாய் என்றும் நேசிக்கின்றவர் உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ உம் அன்பை எண்ணி பாடாத மனிதருண்டோ3. என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில் புதியதோர் ஆரம்பம் எனக்குத் தந்தவர் நான் நினையாத வழிகளில் கொண்டு வந்தவர் நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன்

உள்ளத்தில் இருந்து ஆராதனை
உணர்வே உமக்கு ஆராதனை  

ஆராதனை ஆராதனை 
உமக்கே உமக்கே ஆராதனை – 4 

1. ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர் 
ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர் 
சேரக்கூடா ஒளிதனிலே வாசம் செய்பவர் 
சேராபீன் தூதர் போற்றும் மிகவும் பெரியவர் 

2. நீர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர் 
அண்டினோரை அன்பாய் என்றும் நேசிக்கின்றவர் 
உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ 
உம் அன்பை எண்ணி பாடாத மனிதருண்டோ

3. என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில் 
புதியதோர் ஆரம்பம் எனக்குத் தந்தவர் 
நான் நினையாத வழிகளில் கொண்டு வந்தவர் 
நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன்

கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட பாலர்கள்ஓசன்னா பாடும் கீதம் காதில் வந்து கேட்குதோ

கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட பாலர்கள்
ஓசன்னா பாடும் கீதம் 
காதில் வந்து கேட்குதோ

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று சொல்லி 
ஆடினர் பாடினர் கூடினர் தேடினர்

1.யாருமே ஏரிடாத குருகுரு கழுதை 
தாருமே ஆண்டவர்க்கு  என்று சீடர் கேட்டிட்டார்
நீருமே தேவை ஐயா ஆண்டவர்க்கு என்றுமே -2
சேருமே வாருமே நாளுமே தினம் தினம்

2.கர்த்தரின் நாமத்தினால் வருகிற ராஜாவாம்
நித்யரும் ஸ்தோத்தரிக்கப்பட்டவரும் இவர்தாம்
பரலோகில் சமாதானம் உன்னதத்தில் மகிமை -2
பாடியே போற்றியே வாழ்த்தியே புகழ்ந்தனர்

3.எருசலேம் எருசலேம் ஏன் இந்த அலட்சியம்
உருகி நிற்கிறேனே நான் உனக்காக நித்தமும்
இந்த நாளில் (இந்நாளில்) சமாதானம் பெற்றிட நினைப்பாயா -2
இல்லாவிடில் அழிவும் கேடும்

சிறுவர் பாடல்

டும் டும் டும் மேளங்கொட்டி ஜிங் ஜிங்னு கிட்டார் மீட்டு கர்த்தர் யேசு புகழ்பாட முடியாது
அத்தனை பெறியவர் நம் இயேசு ராஜனே அன்பினில் சிறந்தவர் நம் அன்பின் தேவனே

அவரை பாடிடு அவரை போற்றிடு 
அவரை புகழ்ந்திடு அவரே பெரியவர்



அன்பா இருப்போம் நாம் அன்பாய் இருப்போம் 
ஒருவரில் ஒருவர் அன்பாய் இருப்போம் 
சண்டை போடாமல் கிண்டல் கேலி செய்யாமல் 
ஒருவரில் ஒருவர் அன்பாய் இருப்போம் 

பரிசுத்த வேதத்தில் ஏசு சொன்னதை  கேட்போம் 
யோவான் 15:12ல் சொல்லிருக்கிறார் நான் உங்களில் அன்பாய் இருப்பது போல 
ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள்


உதட்டினிலே பாசம் 
உள்ளே வெறும் வேஷம்
நண்பன் போல காட்டிடுவர் நாட்டிலே உண்டு
நாவின் கீழே விஷமிருக்கும் 
பார்த்து நீ பழகு

உண்மையற்ற போலியான உலகம் தானடா
சுயநலமாய் வாழும் மனித கூட்டாம் தானடா
நயமாய் பேசும் நரி இருக்கும் மயங்கிவிடாதே
தேவன் உன்னை காத்திடுவார் கலங்கிவிடாதே


: இயேசுவின் பின்னே நானும் போகிறேன் 
சாத்தானே உனக்கி டாட்டா 2
நீ இயேசுவின் முன்னே சோட்டா 
அது எனக்கு தெரிஞ்சது லேட்டா
இப்போ என்ன கேட்டா 
நான் இயேசுவின் பிள்ளை ஆமா






என் தேவைகளை சந்திப்பவர் நீரே
என் சூழ்நிலையை மாற்றுபவர் நீரே
என் காயங்களை ஆற்றுபவர் நீரே

யெகோவா தேவன் நீரே
எல்ஷடாய் தேவன் நீரே

அல்லேலூயா பாடு 
ஆனந்தமாய் பாடு
இயேசு ராஜாதி ராஜாவை கொண்டாடு

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட தாரகம் நீரல்லவோ

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட
   தாரகம் நீரல்லவோ (3)

        அனுபல்லவி

   தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
   இயேசு நாயகன் நீரல்லவோ

        சரணங்கள்

1.    இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல்
   திரு சமுகமளிப்பேன் என்றீரே  (3)
   நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு
   விரைந்து எழுந்திடுவீரே           -        பெலமளி

2.    அதிசயமானவர் என்பதுமது பெயர்
   அதிசயம் விளங்கச் செய்யுமே  (3)
   இது சமயம் உமது இதயம் விரும்புவதை
   இறைவா விளங்கச் செய்யுமே     -        பெலமளி

3.    பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து
   தாகமுடன் அண்டிட  (3)
   நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று
   நாதனைப் பின் சென்றிட           -

4.கலங்காதே சிறுமந்தையே என்ற நல்லுரை
பலமாயுரைக்க வேணுமே
நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து
அலகை அடக்க வேணுமே - பல

5. வழி நடத்திட எம்மை வல்லமையுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மைக் காருமே - பல

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே

எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு - என்னை

நான் எந்த நிலமையில் இருந்தாலும்
நான் மனரம்மியமாய் இருக்கின்றேன்
பட்டினியாய் இருந்தாலும் பரிபூரண மடைந்தாலும்
தாழ்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும்
போதிக்கப்பட்டேன் நான் - என்னை

என் தேவன் யெகோவோ யீரே
என் தேவை யாவையும் தருவாரே
தமது ஜஸ்வரியதின்படியே 
எனது குறையை நிறைவாக்கும்
இயேசுவை விசுவாசித்தே தேவ
மகிமையைக் காண்பேன் நான் - என்னை

நான் சோம்பலின் அப்பம் புசியாமல்
நான் சோர்ந்து தரித்திரம் அடையாமல்
உற்சாகமாய் நான் உழைத்திடுவேன் உண்மை ஊழியம் செய்திடுவேன்
தேவனை அதிகாலை தோறும்
தேடிக் கண்டடைவேன் நான் - என்னை

நான் கார்த்தருக்குக் காத்திருந்தே
நான் புதுப்பெலனை அடைந்திடுவேன்
கழுகுபோல செட்டைகளை
அயடித்து நானும் எழும்பிடுவேன்
நடந்திட்டாலும் ஒடினாலும்
சோர்ந்திட மாட்டேன் நான் - என்னை

என் இயேசு சீக்கிரம் வருவாரே
நான் அவருக்காகவே காத்திருப்பேன்
அவனவன் கிரி யைபடியே 
அவர் அருளும் பிரதிபலனே
அண்டவர் வரும்போது தம்முடன்
கொண்டு வருவாரே - இயேசு - என்னை

சனி, 25 மார்ச், 2023

தேவனுடைய நாமங்கள்:

தேவனுடைய நாமங்கள்:

♦யேகோவா ஏலோகிம் |  சிருஷ்டி கர்த்தர்    (ஆதியாகமம் 2:4)
♦யோகோவா ஏல் எலியோன் |      உன்னதமான தேவனாகிய கர்த்தர்    (ஆதியாகமம் 14:22)
♦யோகோவா அடோனாய் |      கர்த்தராகிய ஆண்டவர்     (ஆதியாகமம் 15:2)
♦யோகோவா ஏல் ஒலாம்     சதாகாலமுள்ள தேவன்     (ஆதியாகமம் 21:33)
♦யோகோவா யீரே |   காண்கின்ற தேவன்   (ஆதியாகமம் 22:14)
♦யோகோவா ராஃபா |     பரிகாரியாக கர்த்தர்     (யாத்திரயாகமம்15:26)
♦யோகோவா நிசி |     வெற்றிதரும் கர்த்தர்    (யாத்திரயாகமம் 17:15)
♦யோகோவா மெக்காதேஷ் |    பரிசுத்தமாக்கும் கர்த்தர்   (யாத்திரயாகமம் 31:13)
♦யோகோவா ஷாலோம்  |  சமாதான கர்த்தர்    (நியாயாதிபதிகள் 6:24)

♦யோகோவா ஷாபாத் |    நியாயம் செய்யும் கர்த்தர்   (நியாயாதிபதிகள் 11:27)      ♦ யோகோவா சபயோத்  |    சேனைகளின் கர்த்தர்       (1 சாமுவேல் 1:13)

♦யோகோவா சிட்கேனு  |  நீதியுள்ள கர்த்தர்     (எரேமியா 23:6)
♦யோகோவா ரூபா  |     மேய்ப்பராகிய கர்த்தர்     (சங்கீதம் 23:1)
♦யோகோவா ஒசேனு  |   உண்டாக்கின கர்த்தர்      (சங்கீதம் 95:6)
♦யோகோவா கிப்போர்  |   பராக்கிரமமுள்ள கர்த்தர்     (ஏசாயா 42:13)
♦யோகோவா ஷம்மா |     இருக்கும் கர்த்தர்    (எசேக்கியேல் 48:13)
♦ஏல் டிப்பில்லா  |  ஜெபம் கேட்கும் தேவன்   (சங்கீதம் 66:20)
♦ எல் ரோயீ |
     காண்கின்ற தேவன்   (ஆதியாகமம் 16:13)
 ♦ ஏல் ஆமென்  |    சத்திய தேவன்     (ஏசாயா 65:16)
♦ஏல் நாசா |     மன்னிக்கும் தேவன்     (சங்கீதம் 99:8)
  ஏல் காரோப் |  சமீபமான தேவன்   (எரேமியா 23:23)
♦ ஏல் ஷடாய் | சர்வ வல்லமையுள்ள தேவன்  (ஆதியாகமம் 17:1)
♦எபினேசர்  |  போதுமான தேவன்     (1 சாமுவேல் 7:12)
♦இம்மானுவேல்  |  தேவன் நம்மோடுள்ளார்  (மத்தேயு 1:23)

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...