டும் டும் டும் மேளங்கொட்டி ஜிங் ஜிங்னு கிட்டார் மீட்டு கர்த்தர் யேசு புகழ்பாட முடியாது
அத்தனை பெறியவர் நம் இயேசு ராஜனே அன்பினில் சிறந்தவர் நம் அன்பின் தேவனே
அவரை பாடிடு அவரை போற்றிடு
அவரை புகழ்ந்திடு அவரே பெரியவர்
அன்பா இருப்போம் நாம் அன்பாய் இருப்போம்
ஒருவரில் ஒருவர் அன்பாய் இருப்போம்
சண்டை போடாமல் கிண்டல் கேலி செய்யாமல்
ஒருவரில் ஒருவர் அன்பாய் இருப்போம்
பரிசுத்த வேதத்தில் ஏசு சொன்னதை கேட்போம்
யோவான் 15:12ல் சொல்லிருக்கிறார் நான் உங்களில் அன்பாய் இருப்பது போல
ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள்
உதட்டினிலே பாசம்
உள்ளே வெறும் வேஷம்
நண்பன் போல காட்டிடுவர் நாட்டிலே உண்டு
நாவின் கீழே விஷமிருக்கும்
பார்த்து நீ பழகு
உண்மையற்ற போலியான உலகம் தானடா
சுயநலமாய் வாழும் மனித கூட்டாம் தானடா
நயமாய் பேசும் நரி இருக்கும் மயங்கிவிடாதே
தேவன் உன்னை காத்திடுவார் கலங்கிவிடாதே
: இயேசுவின் பின்னே நானும் போகிறேன்
சாத்தானே உனக்கி டாட்டா 2
நீ இயேசுவின் முன்னே சோட்டா
அது எனக்கு தெரிஞ்சது லேட்டா
இப்போ என்ன கேட்டா
நான் இயேசுவின் பிள்ளை ஆமா
என் தேவைகளை சந்திப்பவர் நீரே
என் சூழ்நிலையை மாற்றுபவர் நீரே
என் காயங்களை ஆற்றுபவர் நீரே
யெகோவா தேவன் நீரே
எல்ஷடாய் தேவன் நீரே
அல்லேலூயா பாடு
ஆனந்தமாய் பாடு
இயேசு ராஜாதி ராஜாவை கொண்டாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக