ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஜெபம் - ஜெபம் - ஜெபம்

ஜெபம் - ஜெபம் - ஜெபம் 

ஆவியோடும் கருத்தோடும்
ஜெபம் பண்ணுங்கள்.
-1 கொரிந்தியர் 14 :15

இகக்கட்டுக்களில் இன்னும் ஜெபம் பண்ணுங்கள்.
- சங்கீதம் 141:  5

துக்கத்தில் இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள். 
- சங்கீதம் 39: 1- 3

தேவசித்தத்தின்படி ஆகக்கடவது என்று 
ஜெபம் பண்ணுங்கள்.
-மத்தேயு.26:42

எல்லா நகரங்களும் கூடி எல்லா மக்களும் ஆர்வமாய் ஒருமுகமாய் தேசத்திற்க்காக உபவாசம் இருந்து ஜெபம் பண்ணுங்கள். 
- 2 நாளாகமம் 20: 1- 24

அதிகாலையில் ஜெபம் பண்ணுங்கள்.
-மாற்கு.1:35

பெற்றுக்கொள்வோம் என்ற விசுவாசத்தோடு ஜெபம்  பண்ணுங்கள்.
மாற்கு.11:24

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; 
-மத்தேயு 26:41

ஜெபம் பண்ணுவதில் ..... இடைவிடாமல் தரித்திருங்கள்
 - அப்போஸ்தலர் 6 :4 

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 
-1 பேதுரு 4 :7 

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் (ஜெபம்) மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. 
-யாக்கோபு 5 :16 

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். 
-கொலோசெயர் 4 :2 

பெண்கள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், 
தன் தலையை மூடிக் கொள்ளுங்கள்.
-1 கொரிந்தியர் 11 :13  

மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது     எப்போதும் சந்தோஷத்தோடே ஜெபம்  பண்ணுங்கள்.
-பிலிப்பியர் 1 :4 

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து ஜெபம் பண்ணுங்கள்.
-பிலிப்பியர் 4 :6 

ஒருவர்பேரில் உண்டான அவரவர் குறையை மன்னித்து ஜெபம் பண்ணுங்கள்.
-மாற்கு 11:25

கூட்டமாய், கூடி ஜெபம் பண்ணுங்கள்.
-லூக்கா 1:10

தனிமையான இடத்தை தேர்ந்தெடுத்து ஜெபம் பண்ணுங்கள்.
- மாற்கு 6: 46 

சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள்.
-லூக்கா.18:1.

அதிக ஊக்கத்தோடு ஜெபம்பண்ணுங்கள்.
-லூக்கா.22:44

ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.
-ரோமர்.12:12. 

சபைக்காக சபையினருக்காக ஜெபம் பண்ணுங்கள். பவுல் செய்தார். 
(எபே 3:14-21)

பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்து ஜெபம் பண்ணுங்கள்.
-எபேசியர் 6:18

ஆவியிலே ஜெபம் பண்ணுங்கள்.
எபே.6:18

எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
-1தீமோ.2:1

உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். 
- மத்தேயு 5:44

நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற 
உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; 
-மத்தேயு 6:6

நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; 
-மத்தேயு 6:7

நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் 
என்று விசுவாசியுங்கள்..
-மாற்கு 11: 24

கடைசி காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். 
- மாற்கு 13: 33

★நீங்கள் இரண்டு பேரோ மூன்று பேரோ ஜெபிக்கும்போது கர்த்தர் உங்கள் நடுவிலே இருக்கிறார். 

★இயேசு கிறிஸ்து முழு இரவும் ஜெபித்தார்.

★தானியேல் தன் சிறிய வயதிலும் தினம் மூன்று வேளை ஜெபிக்கிறவராய் இருந்தார். 

★அன்னாள் என்ற மனுஷி (ஏழு வருடம் கணவருடன் வாழ்ந்து (விதவையானவர்) எண்பத்துநாலு வயதிலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். (லூக்கா 2: 37)

ஜெப வீரர்கள் : 

★பவுல் தன் ஊழியம் முழுவதிலும் விசுவாசிகளுக்காகவும் ஊழியர்களுக்காவும் சபைக்காகவும் 69 வயது வரை ஜெபித்துக்கொண்டே இருந்தார். ஜெப வீரராய் இருந்தார். (எபே 3: 14- 21)

★யோசேபாத் ராஜாவும் இஸ்ரவேலின் எல்லா நகர மக்களையும் கூட்டி ஜெபித்தார். (2 நாளா 20)
யோசேபாத்தும் ஜெப வீரரே. 

★ சாத்ராக் - மேஷாக் - ஆபேத் நேகோ மூன்று பேரும் நெபுகாத்நெசர் சிலையை வணங்க முடியாது என உறுதியாய் இருந்தார்கள். அக்கினி சூளையில் போட்டும் எரியாதபடி கர்த்தர் காப்பாற்றினார். இவர்களும் ஜெப வீரர்களே.

நன்றி 
எனது அனுதின ஜெபம்

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...