ஞாயிறு, 29 மார்ச், 2015

ஓசன்னா பாடுவோம் ,ஏசுவின் தாசரே



ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!
சரணங்கள்
1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.

2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

3. பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.

சிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்


1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34

2.இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  லூக்கா 23 :43

3. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27

4. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மத்தேயு 27:46,  மாற்கு 15:34, சங்கீதம் 22:1

5. தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:28

6. எல்லாம் முடிந்தது.யோவான் 19:30

7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...