ஞாயிறு, 31 மே, 2020

குறைவு இல்லை - யாருக்கு

குறைவு இல்லை - யாருக்கு
------------------------------------------------
1) கர்த்தரை தேடுகிறவர்களுக்கு - சங் 34:10

2) கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு - சங் 34:9

3) உண்மையுள்ளவனுக்கு - தானி 6:4

4) கர்த்தர் யாருடன் இருக்கிறாரோ அவர்களுக்கு - உபா 2:7

நீதிமான் செய்ய வேண்டிய காரியங்கள்

நீதிமான் செய்ய வேண்டிய காரியங்கள்

1) பாடி மகிழ வேண்டும் - நீதி 29:6

2) கர்த்தருக்குள் களி கூற வேண்டும் - சங் 33:1

3) கர்த்தருடைய நாமத்தை துதிக்க வேண்டும் - சங் 140:13

4) ஜெபிக்க வேண்டும் - சங் 34:17

5) மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் - நீதி 21:26

6) தேவனோடு சஞ்சரித்து கொண்டு இருக்க வேண்டும் - ஆதி 6:9

7)  மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் - 1 சாமு 24:17

வெள்ளி, 29 மே, 2020

"பாவம் செய்தேன்" இந்த வார்த்தைகளை சொன்னது யார் யார் ?

"பாவம் செய்தேன்" இந்த வார்த்தைகளை சொன்னது யார் யார் ?


1) பார்வோன் - யாத் 9:27

2) பிலேயாம் - எண்ணா 22:34

3) ஆகான் - யோசுவா 7:20

4) சவுல் - 1 சாமு 15:24

5) யூதாஸ் - மத் 27:4

6) தாவீது - 2 சாமு 12:13

புதன், 27 மே, 2020

செய்

செய்

1) தர்மஞ் செய் - மத் 6:3

2) பிதாவின் சித்தப்படி செய் - மத் 7:21

3) நன்மை செய் - லூக் 6:35

4) சொன்னபடி செய் - லூக் 10:27,28

5) நினைவு கூறும்படி செய் - லூக் 22:19

வேதத்தில் உள்ள கெட்ட கிரியைகள்

வேதத்தில் உள்ள கெட்ட கிரியைகள்



1) பிசாசின் கிரியைகள் - 1 யோ 3:8

2) செத்த கிரியைகள் - எபி 6:1

3) அக்கிரம கிரியைகள் - 2 பேது 2:8

4) அந்தகாரத்தின் கிரியைகள் - ரோ 13:12

5) துர்க்கிரியைகள் - 2 யோ 1:11

6) அருவருப்பான கிரியைகள் - சங் 14:1

7) மாம்சத்தின் கிரியைகள் - கலா 5:19

8) பொல்லாத கிரியைகள் - யோ 3:19

திங்கள், 25 மே, 2020

வேதத்தில் உள்ள நல்ல கிரியைகள்

வேதத்தில் உள்ள நல்ல கிரியைகள்
 
1) விசுவாசத்தின் கிரியை - 1 தெச 1:2

2) நற்கிரியைகள் - 2 பேது 2:12

3) சகலவித நற்கிரியை - 2 கொரி 9:8

4) நீதியின் கிரியை - தீத்து 3:5

5) கைகளின் கிரியை - யோபு 1:10

6) தேவனுடைய கரத்தின் கிரியை - யோபு 27:11

7) தேவனுக்கேற்ற கிரியைகள் - யோ 6:28

8) கர்த்தருடைய கிரியை - 1 கொரியா 15:57

9) சுயகிரியை - கலா 6:4

10) ஆதியில் செய்த கிரியைகள் - வெளி 2:5

வேதாகமத்தில் குருட்டாட்டம் பிடித்த 9 நபர்கள்

வேதாகமத்தில் குருட்டாட்டம் பிடித்த 9 பேர் ?

1.சோதோமின் ஜனங்கள்(ஆதி . 19 : 11 )
  
2. ஈசாக்கு (ஆதி:27:1)

3. யாக்கோபு(ஆதி . 48 : 10)

4. சிம்சோன் (நியா .16:21)

5. ஏலி (1சாமு:4:15)

6. அகியா (1ராஜா:14:4)

7. சீரியர்கள் (2ராஜா:6:18, 20)

8. சிதேக்கியா(2ராஜா:25:7)

9. சவுல்(அப்:9:3-9,18)

ஏழு வார்த்தைகள் தியானம்

ஏழு வார்த்தைகள் தியானம்




முதலாம் வார்த்தை தியானம்

1. இயேசு சிலுவையில் முழுமையான மனிதர் - பிதாவே மன்னிப்பை அருள முடியும் - ஆகவே இச்செபம்
2. பாவத்தை உணர்த்துவது பரிசுத்த ஆவியானவரே - ஆகவே அறியாமல்தான் செய்தார்கள்
3. இன்றும் நமக்காக வேண்டுதல் செய்கிற கர்த்தர் நமக்கு உண்டு


 இரண்டாம் வார்த்தை தியானம்

1. தன்னை உணர்ந்த கள்வன்
2. இரட்சகரை கண்ட கள்வன்
3. தான் தங்குமிடத்தை அறிந்திருந்த கள்வன்


 மூன்றாம் வார்த்தை தியானம்

1. நம்மை காண்கிற கர்த்தர்
2. நம் தேவைகளை அறிந்திருக்கிற ஆண்டவர்
3. பாரத்தை பகிர்ந்தளித்த இயேசு


 நான்காம் வார்த்தை தியானம்

1. தெய்வீக தொடர்பை அறுத்த காரிருள்
2. பாரமான சர்வ லோக பாவம் அழுத்திய காரிருள்
3. அனைத்துலகத்தின் / சர்வ சிருஷ்டிகளின் கதறுதலின் காரிருள்
- ஆனாலும் விடியற்கால  வெளிச்சமுண்டு; நீதியின் சூரிய வெளிச்சமுண்டு; நம் மேல் உதிக்கும் வெளிச்சமுண்டு; கவலை வேண்டாம்


 ஐந்தாம் வார்த்தை தியானம்

1. எல்லாவற்றையும் அறிந்திருந்த இயேசு - துவக்கம் to முடிவு
2. வேதவாக்கியங்களை நிறைவேற்ற வாஞ்சையாயிருந்த இயேசு
3. அனைத்துலக மக்களின் சரீர தேவைகளை அறிந்திருந்த இயேசு
- அனைத்து தேவைகளையும் அவரே பூர்த்தி செய்வார்


 ஆறாம் வார்த்தை தியானம்

1. யாராலும் சொல்ல முடியாத வார்த்தை
2. யாராலும் நிறைவேற்ற முடியாத வாழ்க்கை
3. மன்னிப்பு, இரட்சிப்பு, கடமை, பரிதவிப்பு, சரீர உபாதைகள் அனைத்தையும் சிலுவையில் முடித்தார்


ஏழாம் வார்த்தை தியானம்

1. ஜெபத்தில் ஆரம்பித்து ஜெபத்தில் முடித்த இயேசு
2. 12 ம் வயதில் 'பிதாவுக்கடுத்தவைகளில்' எருசலேமில் ஆரம்பித்தவர் எருசலேமிலே ஒப்படைக்கிறார்
3. எல்லாம் பிதாவின் கரங்களிலிருந்தே வருகிறது (யாக். 1:17) - நமக்கு வேண்டியதும் அவரிமே உண்டு

பழைய ஏற்பாட்டில் தொழுநோய் பிடித்த 9 பேரை குறித்தக் குறிப்புகள் தருக?

பழைய ஏற்பாட்டில் தொழுநோய் பிடித்த 9 பேரை குறித்தக் குறிப்புகள் 


1.மோசே.   யாத் 4:6

2.மிரியாம். எண் 12:10

3.நாகமான். 2இரா 5:1

4.கேயாசி. 2இரா 5:27

5.சாமாரியாவிலுள்ள 4 குஷ்டநோயாளிகள். 2இரா 6:18

6. உசியா  (அரசர்). 2 இரா 15:5

வேதத்தில் உள்ள முயற்சிகள்

வேதத்தில் உள்ள முயற்சிகள்

1) சரீர முயற்சி : 1 தீமோ 4:7

2) போஜன பதார்த்தங்களினால்  - எபி 13:9

3) கிரியைகளினால் செய்யும் முயற்சி - யாக் 2:22

4) பகுத்தறியத்தக்க முயற்சி - எபி 5:14

5) தேவபக்திக்கேதுவான முயற்சி - 1 தீமோ 4:7

சண்டை வரக் காரணங்கள்

சண்டை வரக் காரணங்கள்


1) வாயின் வார்த்தைகள் - சங் 31:20

2) கோபம் - நீதி 15:18

3) மாறுபாடு உள்ளவனால் - நீதி 16:28

4) விவாதங்களால் - நீதி 17:14

5) குடிகாரனால் - நீதி 23:29,30

6) கோள் சொல்கிறவனால் - நீதி 26:20

7) மேட்டிமை/ஆணவம்/பெருமையினால் - 1 தீமோ 6:4

8) தர்க்கங்களால் - 2 தீமோ 2:23

9) வாக்கு வாதங்களால் - தீத்து 3:9

10) இச்சைகளினால் - யாக் 4:1

11) வாது பிரியனால் - நீதி 26:21

12) கோபத்தை கிண்டி விடுவதால் - நீதி 30:33

சண்டை

சண்டை


1) மாம்ச சுபாவம் - கலா 5:20

2) மனைவியின் சண்டைகள் ஒயாத ஒழுக்கு - நீதி 19:13

3) ஊழியக்காரன் சண்டை பண்ணாதவனாக இருக்க வேண்டும் - 1 தீமோ 3:3

4) ஒருவனோடும் சண்டை பண்ணக் கூடாது - தீத்து 3:2

5) நீடிய சாந்தம் உள்ளவன் சண்டையை அமர்த்துகிறான் - நீதி 15:28

யாருக்கு நன்மை

யாருக்கு நன்மை

1) உத்தமமாய் நடப்பவர்களுக்கு - சங் 84:11

2) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு - சங் 31:19

3) மனுபுத்திரருக்கு முன்பாக கர்த்தரை நம்புகிறவர்களுக்கு - சங் 31:19

4) கர்த்தரை தேடுகிறவர்களுக்கு - சங் 34:10

5) தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுகிறவர்களுக்கு - எபேசி 6:2,3

6) நல்லவர்களுக்கு - சங் 125:4

7) இருதயத்தில் செம்மையானவர்களுக்கு - சங் 125:4

உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

1) கர்த்தர் பாதுகாக்கிறார் - சங் 31:23

2) பூரண ஆசிர்வாதம் கிடைக்கும் - நீதி 28:20

5) அநேகத்தின் மேல் அதிகாரி - மத் 25:23

7) பலன் அளிப்பார் - 1 சாமு 26:23

8) கர்த்தர் சமீபம் - சங் 145:18

9) பிழைக்கவே பிழைப்பான் - எசேக் 18:9

10) ஊழியத்துக்கு அழைப்பு கிடைக்கும் - 1 தீமோ 1:12

தாயை என்ன செய்யக்கூடாது

தாயை என்ன செய்யக்கூடாது


👉 *நீதிமொழிகள் 15:20* 
அலட்சியம்பண்ணக்கூடாது

👉 *நீதிமொழிகள் 23:22* 
அசட்டைபண்ணக்கூடாது

👉 *எரேமியா 22:7* 
அற்பமாய் எண்ணக்கூடாது

👉 *நீதிமொழிகள் 1:8; 6:20* 
போதகத்தைத் தள்ளக்கூடாது

👉 *நீதிமொழிகள் 19:26* 
துரத்திவிடக்கூடாது

👉 *நீதிமொழிகள் 20:20* 
தூஷிக்கக்கூடாது

👉 *நீதிமொழிகள் 28:24* 
கொள்ளையிடக்கூடாது

👉 *நீதிமொழிகள் 30:11* 
சபிக்கக்கூடாது

👉 *ஏசாயா 45:10* 
ஏன் பெற்றாய் என்று கேட்கக்கூடாது

வேதாகமத்தில் 15 கேள்வி பதில்கள்

வேதாகமத்தில் 15 கேள்வி பதில்கள்

1. சமாதானத்திற்கு அனுப்பப்படும்  பறவையைப் போல் புலம்பினேன்👑
*எசேக்கியா = ஏசாயா 38:14*

2. புதுபெலன் அடையும் பறவையின் இறகுகளைப் போல என் தலைமயிர் மாறியது👑
*நேபுகாத்நேச்சார் = தானி4:33*

3. புழுப்புழுத்து இறந்தேன்👑
*ஏரோது = அப்போ 12:23*

4. மனிதர்களால் அல்ல குளவிகளால் தோற்றோம்👑
*எமோரிய இரு இராஜா = யோசுவா 24:12*

5. வயதான காலத்தில் நடக்க உதவும் உறுப்பில் வியாதி எனக்கு👑
*ஆசா = 1இரா15:23 , 1கொரி 15:23*

6. நீட்டிய என் கையை மடக்கக் கூடாமல் தேவன் நிறுத்தினார்👑
*யெரொபெயாம் = 1இரா 13:4*
*யோசுவா = 8:26*

7. கர்த்தரின் வீட்டைப் புதுப்பித்தேன் நான்👑
*யோவாஸ் = 2நாளா 24:4-12*

8. விவசாயத்தில் ஈடுபாடு கொண்டன் நான்👑
*உசியா = 2நாளா 26:10*
*காயின் = ஆதி 4:2*
*நோவா = ஆதி 9:20*


9. குடலில் தீராத வியாதி கொண்டு விரும்புவாரில்லாமல் இறந்தேன் நான்👑
*யோராம் = 2 நாளா 21:15-19*

10. கர்த்தருடைய சமுகத்தில் ஊழியம் செய்பவர்களை கொன்று போடக் கூறினேன்👑
*சவுல் = அப் 9:1*
*1 சாமு22:18*

11. சீஷர்களின் எண்ணிக்கை வயதில் ராஜாவான நான் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டேன்👑
*மனாசே= 2இராஜா 21:1, 2 நாளா 33:11*

12. எனது பாவத்தால் என் பிள்ளை வியாதிபட்டுக் கேவலமாயிருந்தது👑
*தாவீது = 2சாமு 12:15*

13. கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவன் நான்👑
*சாலொமோன் = 1 இராஜா 4:32*

14. ஓரெழுத்து மட்டுமே எனது பெயர்👑
*சோ = 2 இராஜா17:4*

15. என்னைப்போல ஒருவன் எனக்கு முன்னரும் இல்லை எனக்குப் பின்னரும் இல்லை👑
*எசேக்கியா = 2இரா18:5*
*சாலொமோன் =1இராஜா 3:10-12*
*யோசியா = 2 இராஜா 23:23-25*

கண்ணியில் இருந்து தப்ப வழி

கண்ணியில் இருந்து தப்ப வழி

1) கர்த்தருக்கு பயப்பட வேண்டும் - நீதி 14:27

2) ஞானவான்களுடைய போதகத்தை கேட்க வேண்டும் - நீதி 13:14

3) நற்சாட்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் - 1 தீமோ 3:7

4) ஜசுவரியவான்களாக விரும்ப கூடாது - 1 தீமோ 6:9

5) வாயை (வார்த்தைகளை) காத்துக் கொள்ள வேண்டும் - நீதி 18:7

உண்மை - நமது ஜிவியத்தில் எங்கெல்லாம் காணப்பட வேண்டும்

உண்மை - நமது ஜிவியத்தில்  எங்கெல்லாம்  காணப்பட வேண்டும்  → 1/50


1) பணத்தில் - 2 இராஜ 12:15

2) வரவு செலவு கணக்கில் - 2 இராஜ 12:15

3) உள்ளத்தில் - சங் 51-6

4) வேலையில் - மத் 25-23

5) கொஞ்சத்தில் - லூக் 16-10

6) உலக பொருளில் - லூக்  16-11

7) ஊழியத்தில் - எபேசி  6-21

8) சபையில் - எபி 3-5

9) சிந்தனையில் - பிலி 4-8

10) பேச்சில் - சகரியா  8-16

11) கர்த்தர் முன்பு - 2 இராஜ 20:3

12) ஆராதனையில் - யோ 4-24

13) ஜெபத்தில் - சங் 145-18

14) வேத வசனங்களை கடை பிடிக்கிறதில் - எசேக் 18-9

15) பிறர் விஷயத்தில் - லூக் 16-12

16) நியாயம் செய்வதில் - நீதி 29-14

17) தேவ வார்த்தையை சொல்வதில் - ஏரே 23-28

18) இரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதில் - நீதி 11-13

19) கிரியைகளில் - 1 யோ 3-18

20) கிரியைகளில் - 1 யோ 3-18

21) எங்கும் - எபி 3-5

22) எல்லாவற்றிலும்  - 1 தீமோ 3-11

23) மரணபரியந்தம் - வெளி  2-10

24) அநேகத்தில் - லூக் 16:10

25) மனதில் - 2 சாமு 22:24

26) உடன்படிக்கையில் - சங் 78:37

உண்மையுள்ளவர்கள்

உண்மையுள்ளவர்கள்


1) மோசே - எண்ணா 12:7

2) ஆபிரகாம் - நெகே 9:8

3) தானியேல் - தானி 6:4

4) பவுல் - 1 தீமோ 1:12

5) தீகிக்கு - எபேசி 6:21

6) தீமோத்தேயு - 1 கொரி 4:17

7) எப்பாப்பிரா - கொலோ 1:7

8) ஒநேசிமு - கொலோ 4:9

9) சில்வானு - 1 பேது 5:12

10) அந்திப்பா - வெளி 2:13

இல்லாவிட்டால்

இல்லாவிட்டால்

1) இரத்தம் சிந்துதல் *இல்லாமல்* பாவமன்னிப்பு இல்லை - எபி 9:22

2) விசுவாசம் *இல்லாமல்* தேவனை பிரியப்படுத்த முடியாது - எபி 11:6

3) பரிசுத்தம் *இல்லாமல்* தேவனை தரிசிக்க முடியாது - எபி 12:14

4) கிரியைகள் *இல்லாத* விசுவாசம் செத்தது - யாக் 2:26

5) அன்பு *இல்லாவிட்டால்* நான் ஒன்றுமில்லை - 1 கொரி 13:2

6) சிட்சை *இல்லாவிட்டால்* பிள்ளைகள் இல்லை - எபி 12:8

7) *என்னையல்லாமல்* (இயேசு) உங்களால் ஒன்றும் செய்ய முடியாது - யோ 15:5

ஒருவருக்கொருவர் செய்யக்கூடாது

ஒருவருக்கொருவர் செய்யக்கூடாது→

1) விரோதமாக பேசக்கூடாது - யாக் 4:11

2) பொய் சொல்லக் கூடாது - லேவி 19:11

3) விரோதமாக முறையிடக் கூடாது - யாக் 5:9

4) விற்றாலும், வாங்கினாலும் அநியாயம் செய்யாதிருங்கள் - லேவி 25:14

5) பகைக்க கூடாது - தீத்து 3:3

6) கடித்து பட்சிக்க கூடாது - கலா 5:15

7) அழிக்கபடாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் - கலா 5:15

8) கோபம் மூட்டாதிருங்கள் - கலா 5:26

9) பொறாமை கொள்ளாதிருங்கள் - கலா 5:26

10) வழக்காடக் கூடாது - 1 கொரி 6:7

ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது

ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது


1)  உதவி செய்ய வேண்டும் - 1 பேது  4:10

2) பக்தி விருத்தி உண்டாகும்படி செய்யுங்கள் - 1 தெச 5:11

3) பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள் - ரோ 16:16

4) குற்றங்களை அறிக்கையிட வேண்டும் - யாக் 5:16

5) ஜெபம் பண்ண வேண்டும் - யாக்5:16

6) தேற்றுங்கள் - 1 தெச 4:18

6) ஒருவருடைய கால்களை ஒருவர் கழூவுங்கள் - யோ 13:14

7) ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க  வேண்டும் - கலா 6:2

8) தாங்க வேண்டும் - கொ 3:13

9) புத்தி சொல்ல வேண்டும் - எபி 3:13

10) கிழ்படிய வேண்டும் - எபேசி 5:21

11) ஒருவரை ஒருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணகடவர்கள் - பிலி 2:3

12) ஜக்கியமாயிருங்கள் - 1 யோ 1:7

13) அன்பினாலே ஊழியம் (உதவி) செய்யுங்கள் - கலா 5:13

14) கவனியுங்கள் (நல்ல காரியங்கள்/நல்ல குணங்கள) - எபி 10:24

பிழைப்பிர்கள்

பிழைப்பிர்கள்

1) மனந்திரும்புங்கள் அப்பொழுது பிழைப்பிர்கள் - எசேக் 18:32

2) தேடுங்கள் அப்பொழுது பிழைப்பிர்கள் - ஆமோஸ் 5:4

3) வேத வசனத்தினால் பிழைப்பிர்கள் - உபா 8:3

4) ஆவியினால் சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பிர்கள் - ரோ 8:13

5) பேதமையை விட்டு விலகுங்கள் அப்பொழுது பிழைப்பிர்கள் - நீதி 9:6

6) வசனத்தை கைக் கொண்டால் பிழைப்பிர்கள் - நீதி 4:4

7) விசுவாசத்தால் பிழைப்போம் - யோ 11:25

பூமியை சுதந்தரிப்பார்கள் யார் ?

பூமியை சுதந்தரிப்பார்கள் யார் ?

1) கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் - சங் 37:34

2) கர்த்தருடைய வழியைக் கைக்கொள்ளுகிறவர்கள் - சங் 37:34

3) நீதிமான்கள் - சங் 37:29

4) கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் - சங் 37:22

5) சாந்தகுணமுள்ளவர்கள் - சங் 37:11

6) கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் - சங் 25:12,13

நானோ (சங்கீதத்தில்)

நானோ (சங்கீதத்தில்)

1) வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன் - சங் 119:70

2) முழு இருதயத்தோடு கற்பனைகளைக் கைக்கொள்ளுவேன் - சங் 119:69

3) ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் - 109:2-4

4) யாக்கோபின் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன் - சங் 75:4-9

5) எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருந்து மேன்மேலும் துதிப்பேன் - சங் 71:14

6) தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவ மரத்தை போல இருக்கிறேன் - சங் 52:7,8

7) நீதியில் உம்முடைய முகத்தை தரிசிப்பேன் - சங் 17:14,13

8) என் உத்தமத்தில் நடப்பேன் - சங் 26:11

9) உம்மை நம்பியிருக்கிறேன் - சங் 31:14

10) சிறுமையும் எளிமையுமானவன் - சங் 70:5

சிந்தனையில் இருக்க வேண்டியது

சிந்தனையில் இருக்க வேண்டியது→

1) தாழ்மை - நீதி 11:2

2) ஆவியின் சிந்தனை - ரோ 8:6

3) கிறிஸ்துவில் இருந்த சிந்தனை - பிலி 2:5

4) பரம அழைப்பின் சிந்தனை - பிலி 3:14,15

5) கிறிஸ்து இயேசுவுக்குள்ளான சிந்தனை - பிலி 4:7

6) தேவனுக்கு ஏற்ற சிந்தனை - மத் 16:23

7) ஏக சிந்தனை - ரோ 12:16

8) முழு சிந்தனையுடன் கிறிஸ்துவில் அன்பு கூற வேண்டும் - லூக் 10:27

9) உண்மையுள்ளவைகள், ஒழுக்கமுள்ளவைகள், நீதியுள்ளவைகள், கற்புள்ளவைகள், அன்புள்ளவைகள், நற்கீர்த்தியுள்ளவைகள், புண்ணியம், புகழ் எதுவோ - பிலி 4:88

பொருளாசையின் தீயவிளைவுகள்

பொருளாசையின் தீயவிளைவுகள்

1) பொருளாசை இருந்தால் பரிதானம் (லஞ்சம்) வாங்குவோம் - 1 சாமு 8:3

2) பொருளாசைக்காரன் நியாயத்தை புரட்டுவார்கள் - 1 சாமு 8:3

3) கர்த்தரை மறக்க செய்யும் - எசேக் 22:12

4) இடுக்கண் செய்வான் - எசேக் 22:12

5) சகோதர அன்பை பிரிக்கும் - ஆதி 13:10,11

6) தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பது இல்லை - 1 கொரி 6:10

7) கர்த்தர் கோபம் கொள்வார் - ஏசா 57:17

8) பொருளாசைக்காரன் தன் வீட்டை கலைக்கிறான் - நீதி 15:27

9) உயிரை வாங்கும் - நீதி 1:19

கீழ்க்கண்ட வீண் காரியங்கள் நமக்கு கூடாது

கீழ்க்கண்ட வீண் காரியங்கள் நமக்கு கூடாது→
1) வீண் வார்த்தை - மத் 12:36
2) வீண் பெருமை - பிலி 2:3
3) வீண் புகழ்ச்சி - கலா 5:26
4) வீண் ஓட்டம் - பிலி 2:14
5) வீண் பிரயாசம் - பிலி 2:14
6) வீண் தேவபக்தி - யாக் 1:26
7) வீண் நடத்தை - 1 பேது 1:18
8) வீண் ஜெபம் - மத் 6:7
9) வீண் பேச்சு - தீத்து 1:10
10) வீண் காணிக்கை - ஏசா 1:13
11) வீண் சிந்தனை - எபேசி 4:17

பொருளாசை அடைந்தவர்கள்

பொருளாசை அடைந்தவர்கள்



1) லோத்து - ஆதி 13:10
2) ஆகான் - யோசுவா 7:16-25
3) கேயாசி - 2 இராஜா 5:20-17
4) ஜசுவரியவான வாலிபன் - லூக் 18:18-23
5) யூதாஸ் - லூக் 22:3-6
6) அனனியா, சப்பினாள் - அப்போ 5:1-17
7) தேமா - 2 தீமோ 4:10

பனைமரம் = நீதிமான்கள்

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 
சங்கீதம் 92:12

பனைமரம் = நீதிமான்கள்

பனைமரம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்

1) பனைமரம் வனாந்திரத்தில் இருந்தாலும் அதின் இலைகள் பச்சையாக இருக்கும். ஏற்ற காலத்தில் கனி கொடுக்கும். (நான் தோட்டத்தில் இல்லை வனாந்திரத்தில் இருக்கிறேன் கனி கொடுக்க முடியாது என்று கூறுவதில்லை) = அது போல நாம் வனாந்திரத்தில் (உலகம்) இருந்தாலும் கனி கொடுக்க வேண்டும் (கலா 5:22,23)

2) பனை மரத்துக்கு ஆணி வேர் கிடையாது (ஆணி வேர் பூமியை இறுக பற்றி கொள்ளூம் வேர்) = அது போல நாமும் உலகத்தானாக ஜிவிக்காதபடி இருக்க வேண்டும் (யோ 17:14)

3) பனை மரத்துக்கு கிளைகள் கிடையாது = பக்க வழியாக தோன்றுகிற ஆசைக்கு,  இன்பத்துக்கு நாம் இடம் கொடுக்க கூடாது (எபி 12:1) 

4) பனை மரத்த்தின் வெளிப்பகுதி கறுப்பாக இருக்கும் = உலகத்தில் நமக்கு உள்ள பாடுகளினால் நாமும் அழகற்றவர்களாய் இருக்கிறோம் (ஏசா 53:2 இயேசு பாடுகளினால் அழகற்றவராக காணபட்டார்)

5) பனை மரத்தின் வெளிப்பகுதி கடினமாக இருக்கும் = பாவத்திற்கு விரோதமாக நாம் கடினமாக இருக்க வேண்டும். உலக அசுத்தங்கள் நமக்குள் புகாதபடி நாம் போராட வேண்டும் (எபி 12:4)

6) பனை மரத்தின் உட்பகுதி மிருதுவாக இருக்கும் = இது இரக்கம்,  நன்மை செய்யும் சுபாவத்தை காட்டுகிறது

7) பனை மரத்தின் எல்லா பாகமும் மனிதனுக்கு பயன் படுகிறது = நாமும் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். 

8) பனைமரம் பலமான காற்று அடித்தாலும் கிழே விழாது. உறுதியாக இருக்கும் (தென்னை, பாக்கு மரம் பலமான காற்று அடித்தால் கிழே விழுந்து விடும்) - நீதிமான் உபத்திரவம், சோதனை போன்ற காற்று அடித்தாலும் உறுதியாக இருப்பான். பின் வாங்கி போக கூடாது.

9) பனை மரம் வானத்தை பார்த்து வளர்கிறது = நாமும் வருகையை எதிர்பார்த்து ஜிவிக்க வேண்டும் (லூக் 21:28)

பொருளாசை

பொருளாசை:

1) இருதயத்தில் இருக்க கூடாது - எசேக் 33:31

2) இருதயத்தில் இருந்து புறப்பட்டு வரும் - மாற் 7:20-22

3) பொருளாசையை வெறுக்க வேண்டும் - யாத் 18:21

4) பொருளாசையை வெறுத்தால் தீர்க்க ஆயுசு - நீதி 28:16

5) பொருளாசையை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - லூக் 12:15

6) பொருளாசையை உண்டு பண்ணும் அவயங்களை அழித்து போட வேண்டும் - கொலோ 3:5

7) பொருளாசைக்காரனுடன் கலந்திருக்க கூடாது - 1 கொரி 5:11

8) பொருளாசைக்காரனுடன் புசிக்க கூடாது - 1 கொரி 5:11

9) பொருளாசையினால் நிரப்பபடக் கூடாது - ரோ 1:29

10) நீ பொருளாசை உள்ளவன் என்று மற்றவர்கள் சொல்லக் கூடாது - எபேசி 5:3

திங்கள், 11 மே, 2020

சங்கீதமும், பஞ்சாகமமும்

சங்கீதமும், பஞ்சாகமமும்

சங்கீத புஸ்கத்திலுள்ள
150 சங்கீதங்களையும் , எபிரெய மொழியில் ஐந்து பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 

மோசே எழுதிய பஞ்சாகமம் போன்று சங்கீத புஸ்தகத்தையும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.. 

*அவையாவன:* 

1.ஆதியாகம சங்கீதம் ( 1 முதல் 41 வரையுள்ள சங்கீதங்கள் ) = 41

2.யாத்திராகம சங்கீதம் ( 42 முதல் 72 வரையுள்ள சங்கீதங்கள் ) = 31 

3.லேவியராகம சங்கீதம் ( 73 முதல் 89 வரையுள்ள சங்கீதங்கள் ) = 17 

4.எண்ணாகமம் சங்கீதம் ( 90 முதல் 106 வரையுள்ள சங்கீதங்கள் ) = 17

5.உபாகம சங்கீதம் 107 முதல் 150 வரையுள்ள சங்கீதங்கள்) = 44

*1) ஆதியாகம சங்கீதம் (1 - 41)*
இந்த சங்கீதங்களில் மையக் கருத்தாயிருப்பவன் மனுஷனே . துவக்கம் முதல் முடிவு வரையிலும் மனுஷனுக்குத் தேவைப்படும் . தெய்வீக ஆலோசனைகள் இந்த சங்கீதங்களில் இடம் பெற்றுள்ளன .
- ஆதியாகமத்தைப் போன்றே , ஆதியாகம சங்கீதமும் மனுக்குலத்தின் மீது தேவனுடைய ஆசீர்வாதத்துடன் துவங்குகிறது . மனுஷன் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால் ஆசீர்வாதம் பெறுவான். (ஆதியாகமம் 1 - 2 ஒப்பிடவும் சங்கீதம் 1 )
இதைத் தொடர்ந்து மனுஷனுடைய வீழ்ச்சியும் கீழ்ப்படியாமையும் இடம் பெறுகிறது ( ஆதியாகமம் 3 - 11 ஒப்பிடவும் சங்கீதம் 2 - 15 )
கிறிஸ்துவின் மூலமாக மனுக்குலத்திற்கு கிடைக்கக்கூடிய மீட்பின் நம்பிக்கையுடன் ஆதியாகமும் ஆதியாகம் சங்கீதமும் முடிவு பெறுகிறது . (ஆதியாகமம் 12 - 50 ஒப்பிடவும் சங்கீ தம் 16 - 41 )
ஆதியாகம சங்கீதத்தின் கடைசி வசனம் சங்கீதம் 41 :13 ஆமென் , ஆமென் என்று கூறி முடிவு பெறுகிறது .

*2) யாத்திராகம சங்கீதம் (42 - 72)*
இந்த சங்கீதங்களின் மையக் கருத்து இஸ்ரவேல் தேசம் . இஸ்ரவேலின் அழிவு , மீட்பர் , மீட்பு ஆகியவை இவற்றில் இடம் பெற்றுள்ளன .

தேவனுடைய வல்லமையான கிரியைகளும் மீட்பும் இதைத் தொடர்ந்து வருகிறது . ( யாத்திராகமம் 4 - 15 ஒப்பிடவும் சங்கீதம் 44 - 50 )
இதைத் தொடர்வது இஸ்ரவேலரின் பின்மாற்றமும் , எதிரிகளிடம் தோல்வியுறுவதும் , அதனால் ஏற்படும் உபத்திரவங்களும் ஆகும் . (யாத்திராகமம் 16 - 27 ஒப்பிடவும் சங்கீதம் 51 - 55 )
இஸ்ரவேலுக்காக தேவன் நடப்பிக்கும் மீட்பின் கிரியை , அவர்கள் மீது தேவனுடைய ஆளுகை ஆகியவற்றுடன் இந்தப் புஸ்தகம் முடிவு பெறுகிறது . ( யாத்திராகமம் 19 - 40 ஒப்பிடவும் சங்கீதம் 56 - 72 )
யாத்திராகமம் சங்கீதம் ஆமென் , ஆமென் என்று கூறி ( சங்கீதம் 72 : 19 ) நிறைவு பெறுகிறது..

*3) லேவியராகம சங்கீதம் (73 - 89)*
இந்த சங்கீத புஸ்தகத்தின் மையக்கருத்து தேவனுடைய பரிசுத்தஸ்தலமும் , தேவனையும் மனுஷனையும் குறித்த இதன் நோக்கமும் .
மனுஷனுக்கு தேவன் வெளிப்படுத்தும் பரிசுத்த ஸ்தலம் , தேவனோடு ஐக்கியமாக இருப்பதன் அவசியம் ஆகியவற்றை விளக்கி இப்புஸ்தகம் ஆரம்பமாகிறது . ( லேவியராகமம் 1 - 7 ஒப்பிடவும் சங்கீதம் 73 - 83 )
தேவனுக்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு , மீட்கப்பட்டோர் தேவனுக்கு முன்பாக நடந்து கொள்ளவேண்டிய விதம் , தேவனோடு வைத்திருக்க வேண்டிய ஐக்கியம் ஆகியவற்றை இந்த சங்கீத புஸ்தகம் தொடர்ந்து விவரிக்கிறது . ( லேவியராகமம் 8 - 27 ஒப்பிடவும் சங்கீதம் 84 - 49 ) .
இந்தப்புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு சங்கீதமும் தேவனுடைய பரிசுத்தஸ்தலத்தைப் பற்றியும் , இத்துடன் மனுஷனுக்கு இருக்கவேண்டிய தொடர்பு பற்றியும் விவரிப்பது , இப்புஸ்தகத்தின் தனிச் சிறப்பு ஆகும் . 
மற்ற சங்கீத புஸ்தகங்களைப் போலவே , லேவியராகம சங்கீதபுஸ்தகமும் ஆமென் , ஆமென் ( சங்கீதம் 89 : 52 ) என்று கூறி நிறைவு பெறுகிறது..

4) எண்ணாகம சங்கீதம் ( 90 - 106 )
இந்த சங்கீத புஸ்தகத்தின் மையக் கருத்து பூமியிலுள்ள இஸ்ரவேலரும் புறஜாதி ஜனங்களும் . மனுக்குலத்திற்கு தேவனைத் தவிர வேறு நம்பிக்கை இல்லை . மனுஷன் இந்த உலகத்தில் ஜீவிக்கும்போது நல்ல ஜீவியத்தையும் நல்ல உலகத்தையும் நாடி தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் .
இஸ்ரவேலரின் பிரயாணம் வனாந்தரத்தில் ஆரம்பமாயிற்று . இதில் அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டார்கள் . ( எண்ணாகமம் 1 - 8 ஒப்பிடவும் சங்கீதம் 90 } |
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவனுடைய பிரமாணமும் வருங்காலத்திற்குரிய கட்டளைகளும் கொடுக்கப்பட்டன . ( எண்ணாகமம் 9 - 14 ஒப்பிடவும் சங்கீதம் 91 - 94 ) . இஸ்ரவேலர்கள் இளைப்பாறுதலை எதிர்பார்த்தார்கள் ( எண்ணாகமம் 15 - 26 ஒப்பிடவும் சங்கீதம் 95 - 1001

இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவனுடைய பிரமாணமும் வருங்காலத்திற்குரிய கட்டளைகளும் கொடுக்கப்பட்டன . ( எண்ணாகமம் 9 - 14 ஒப்பிடவும் சங்கீதம் 91 - 94 ) . இஸ்ரவேலர்கள் இளைப்பாறுதலை எதிர்பார்த்தார்கள் ( எண்ணாகமம் 15 - 26 ஒப்பிடவும் சங்கீதம் 95 - 100 )

5) உபாகம சங்கீதம் (107 - 150 )
இந்தப் புஸ்தகத்தின் மையக்கருத்து தேவனும் அவருடைய வார்த்தையும் ஆகும் . தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால் மனுக்குலத்திற்கும் , இஸ்ரவேலுக்கும் , தேவனுடைய வாசஸ்தலத்திற்கும் , பூமிக்கும் , முழு மனுக்குலத்திற்கும் எல்லா ஆசீர்வாதங்களும் உண்டு ( உபாகமம் 8 : 31)
கீழ்ப்படியாமையினால் மனுஷனுக்கு வருத்தம் வந்தது . இஸ்ரவேல் சிதறிப் போயிற்று . தேவாலயம் அழிந்து போயிற்று . பூமியில் பாடுகள் உண்டாயிற்று . தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதினால் மட்டுமே இந்த சாபங்களை அகற்றமுடியும் .
இந்த சங்கீத புஸ்தகத்தில் உட்பிரிவு எதுவும் இல்லை . தேவனுடைய வார்த்தையைப் போல , இந்தப் புஸ்தகம் பரிபூரணமாக முழுமையானது.!!..

*#ஆமென்!!*
*#அல்லேலூயா!!!*

வேதாகமத்தில் நான் யார்

வேதாகமத்தில் நான் யார்

வேதத்தில் நடந்த காரியங்களை சம்பவங்களை கொடுத்துள்ளோம். அவைகள் யாரை குறிக்கிறது என சொல்லவும்.  (வேத வசனத்தோடு)

1⃣👑 சமாதானத்திற்கு அனுப்பப்படும்  பறவையைப் போல் புலம்பினேன்👑
*எசேக்கியா = ஏசாயா 38:14*

2⃣👑புதுபெலன் அடையும் பறவையின் இறகுகளைப் போல என் தலைமயிர் மாறியது👑
*நேபுகாத்நேச்சார் = தானி4:33*

3⃣👑புழுப்புழுத்து இறந்தேன்👑
*ஏரோது = அப்போ 12:23*

4⃣👑மனிதர்களால் அல்ல குளவிகளால் தோற்றோம்👑
*எமோரிய இரு இராஜா = யோசுவா 24:12*

5⃣👑வயதான காலத்தில் நடக்க உதவும் உறுப்பில் வியாதி எனக்கு👑
*ஆசா = 1கொரி 15:23*

6⃣👑நீட்டிய என் கையை மடக்கக் கூடாமல் தேவன் நிறுத்தினார்👑
*யோசுவா = 8:26*

7⃣👑கர்த்தரின் வீட்டைப் புதுப்பித்தேன் நான்👑
*யோவாஸ் = 2நாளா 24:4-12*

8⃣👑 விவசாயத்தில் ஈடுபாடு கொண்டன் நான்👑
*காயின் = ஆதி 4:2*
*நோவா = ஆதி 9:20*

9⃣👑குடலில் தீராத வியாதி கொண்டு விரும்புவாரில்லாமல் இறந்தேன் நான்👑
*யோராம் = 2 நாளா 21:15-19*

1⃣0⃣👑 கர்த்தருடைய சமுகத்தில் ஊழியம் செய்பவர்களை கொன்று போடக் கூறினேன்👑
*சவுல் = 1 சாமு22:18*

1⃣1⃣👑சீஷர்களின் எண்ணிக்கை வயதில் ராஜாவான நான் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டேன்👑
*மனாசே= 2இராஜா 21:1, 2 நாளா 33:11*

1⃣2⃣👑எனது பாவத்தால் என் பிள்ளை வியாதிபட்டுக் கேவலமாயிருந்தது👑
*தாவீது = 2சாமு 12:15*

1⃣3⃣👑கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்தவன் நான்👑
*சாலொமோன்*

1⃣4⃣👑ஓரெழுத்து மட்டுமே எனது பெயர்👑
*சோ = 2 இராஜா17:4*

1⃣5⃣👑என்னைப்போல ஒருவன் எனக்கு முன்னரும் இல்லை எனக்குப் பின்னரும் இல்லை👑
*சாலொமோன் =1இராஜா 3:10-12*
*யோசியா = 2 இராஜா 23:23-25*

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...