புதன், 4 டிசம்பர், 2019

Christmas song 2022. கிறிஸ்மஸ் பாடல் வரிகள்

மரியின் மைந்தனாய் மன்னிலே தோன்றினார் 
மலர்கள் சிரிக்க மனங்கள் களிக்க

பண்பாடும் உள்ளங்களே 
தேவ பாலனை பாடுங்களே பாவங்கள் நீங்கவே

தென்றல் காற்று தாலாட்ட
தேடும் அன்பு சீராட்ட
வானத்தின் தலைவன் வையகம் வந்தார்
காரிருள் நீக்கும் பேரொளியாக உலகினில் வந்த ஒளிசுடரே

பாலன் வாழ்வு நமக்காக 
பாடும் உள்ளம்உமக்காக
சேவையின் வடிவாய் சிலுவையைத் தாங்கி 
நேர்மையைக் காட்டும் நேர் வழியாக
நெஞ்சினில் வாழும் நாயகணே

துதித்து துதித்து பாடுங்கள்
தேவ பாலனை போற்றுங்கள்
துதி முழக்கம் செய்திடுங்கள்
தூய பாலனை வாழ்த்திடுங்கள்
அல்லேலூயா இறைவன் மனிதனானார்
அல்லேலூயா இயேசு பாலன் பிறந்தார்
ல ல ல ல ல லா. .... ஒ ஒ ஒகோ

1.வானம் பூமி படைத்தவரே
மேன்மை துறந்து பாரில் வந்தார்
ஏழைக்கோலமாய் மாட்டுத் தொழுவினில்
தாழ்மை ரூபமானார்
கன்னிமைந்தனாய் கருணை தேவனாய்
கர்த்தர் இயேசு பிறந்தார்

2.பாவம் சாபம் நீக்கிடவே
பாரில் அன்பு நிலைத்திடவே
குருடர் பார்த்திட, ஊமை பேசிட
முடவர் ஓடியாட
இருளில் வாழ்பவர் ஒளியைக் காணவே
இயேசு பாரில் பிறந்தார்


தேவ புத்திரன் வந்தார் பூலோகத்தில்
ராஜ ராஜன் பாலகனாய் -2
ஆடுவோம் பாடுவோம்
பாட்டுக்கள் நாம் பாடுவோம்
தேவராஜன் …
இந்த பூவில்…
கன்னிமாதாவின் கோமகனாய் -2

1.காத்திருந்த அந்த ஜெனம்
கண்டது ஆச்சர்ரிய விந்தை -2
அன்பு கோண்டவராம் என்
இயேசு ராஜன்
பூலோகம் ரட்சிக்க வந்தார் – 2

2. என்னை தேடி என் தெய்வம்
என்னினில்லானந்தம் தந்து -2
தேவாதி தேவன் என்
இயேசு ராஜன்
இருளில் பேரொளியாய் -2


அன்பே மனித உருவமாய்
அவதரித்தார், நம்மில் பிறந்தார்
என்றும் இம்மானுவேலராய்
தோன்றினார், நம்மில் வாழ்கின்றார்

அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்
அல்லேலூயா அல்லேலூயா (2)

Verse 1:
வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்
அந்த மகிமை இருளை நீக்கியது
நம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவே
அந்த ஒளியை நமக்காய் தந்தாரே
அவர் அன்பை ருசித்த நாமும்
அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம்

Verse 2
நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவே
அவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரே
மண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்
மனிதனாய் நிற்க செய்தாரே
அவர் கிருபை பெற்ற நாமும்
அவர் ராஜ்யத்தை கட்டிட உதவி செய்வோம்



இனிமை நிறைந்த இரவு 
இருளும் குளிரும் உறவு
இறைவன் இயேசு வரவு
இகத்தில் கொண்ட பரிவு 

ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ் ஹாப்பி ஹாப்பி -4

1.மன்னவன் விண்ணகம் துரந்தவராய்
இந்த மண்ணில் உதித்தார் பாலகனாய் 2
ஏசாயா வாக்கு நிறைவேறும் இன்று
ஈசாயின் அடி மரம் துளிர்த்ததுவே 2

விண்ணில் தூதர்கள் கானம் பாடிட
மண்ணில் மானிடர் அன்புகொண்டிட
தேவன் வானிலே மகிமையாகிட 
பாலன் பிறந்தார்

3.காவினில் பிறந்த பாவமதை
தன் சாவினில் அறுத்து வாழ்வு தர
மெய்பரும்  ஆனார் ஆயரும் காண
மாவேந்தர் இயேசு பிறந்தாரே


ராஜாதி ராஜன் இவர்தான்
புவி வந்தாலும் மன்னன் இவர்தான் 2
மண்மீது சாபத்தை தீர்த்திடவே
மாசற்ற ஜோதியாய் வந்துதித்த
மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம்

1.கர்த்தாதி கர்த்தனே இளந்தளீரே 
வந்தனம் வந்தனமே
சர்வேச நாதனே சர்குனனே
சுந்தர நாயகனே
உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே
இறைமகன் இயேசுவே
மனுகுலம் போற்றும் மகிமையின் நாதன் 
உம்பாதம் பணிந்திடுவோம்

2.அருள் நேசர் வரவால் அகமகிழ்வோம்
அன்புடன் உள்ளத்திலே
அதிகாலை பொழுதில் தொழுதிடவே ஆலயம் சென்றிடுவோம்
வானில் பறவைகள் காணம் பாடிட வினையின் ராகமே
பனித்துளி மின்னும் மலர்களின் வாசம்
இல்லத்தில் புது மனமே

சின்னஞ்சிறு மலரே சித்திரை பூந்தளிரே 
உன்னை அள்ளி அணைப்பேன் 
எந்தன் நெஞ்சுக்குள் வாராயோ 2

1.வானத்தின் மேகமாய் வறட்சியைப் போக்கி ட
மழையென வாராயோ
பாரினை தாங்கிட தீமைகள் போக்கிட அன்பினை தாராயோ 2
தேவனும் நீயன்றோ  எங்கள் தேவனும் நீயன்றோ
தேசங்கள் மீட்டிட பாலனாய் பிறந்த தேவனும் நீயன்றோ

2.விண்ணுக்கு மைந்தனாய் மண்ணுக்கு வேந்தனாய் வந்தவர் நீயன்றோ
கண்ணுக்கு காவியம் விண்ணுக்கு ஓவியம் என்பவதானன்றோ
பாலகன் நீயன்றோ இயேசு பாலன் நீயன்றோ
பாரினில் வாழ்ந்திடும் பாலகர் வாருங்கள் என்றவர் நீரன்றோ


பெத்தலையிலே சத்திரத்திலே
மன்னன் இயேசு பிறந்தார்2
அல்லேலூயா அல்லேலூயா 2
அல்லேலூயா 3ஆமென்

1.வானாதி வானங்களே போற்றிப்பாடுங்கள்
தூதர் சேனைகளே துதித்து பாடுங்கள் 2
துக்கம் இல்லை இனி துயரம் இல்லை
என்றென்றும் ஆனந்தமே 2

2.வானத்திலே நட்சத்திரம் வழி காட்டுதே
ஞானி மூவர் தேடி வந்து வனங்கினரே 2
வெள்ளைப்போலம் தூபவர்கம் பொன்னைக் கொடுத்தார்களே

3. தூதர்கள் சேனையெல்லாம் துதி பாடுதே
மேய்பர்கள் செய்தி கேட்டு தேடினரே 2
இயேசுவைக் கண்டு தொழுகின்றாரே
ஆனந்த சந்தோஷமே 2

கர்த்தர் பிறந்தார் பாடுங்கள்
கதிரவன் உதித்தார் போற்றுங்கள் 
அல்லேலுயா ஆர்ப்பரிப்போம் 
ஆனந்த நாளை கொண்டாடுவோம் 
பாவவினை உலகினில் நீங்கிடவே 
அதிசய பாலன் இயேசு பிறந்தாரே

1.ஆதாம் ஏவாள் செய்த பாவம் 
அதனாலே வந்த சாபம்
யாவும் நீக்கி வந்ததாலே
யாக்கோபின் ஓர் வெள்ளி உதித்தது வே

2.தீர்க்கன் சொன்ன வார்த்தை எல்லாம் 
இவ்வளவாய் நிறைவேற 
தேவமைந்தன் இயேசு ராஜன் 
தாழ்மையாய்  உலகில் பிறந்தாரே

சின்ன ஊர்தான் அது பெத்தலகேமில் தான் 
மன்னன் இயேசு பாலனாக பிறந்துவிட்டாரு 

1.மாடி இல்ல மெத்தை இல்ல புல்லணை இல்ல 
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டுத்தொழுவில
சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஆட்களும் இல்லை 
சொந்தத்தில் வந்துவிட்டார் கவலையே இல்லை

2.சேதி சொல்ல யாரும் இல்ல தேவதூதர் தான் 
வழிகாட்ட யாரும் இல்ல நட்சத்திரம்தான் 
துதிபாடி தூதர் கூட்டம் சூழ்ந்து நிற்கையில
மன்னன் இயேசு பிறந்துவிட்டார் மனு உருவினிலே


கிறிஸ்மஸ் பிறந்ததே 
உள்ளம் மகிழுதே ஆடுவோம் நாங்கள் பாடுவோம் 
இறைமகன் இயேசு இன்று பிறந்தார்

1.இருளில் வாழும் மாந்தர் 
பாவம் போக்கிட ஒளியாய் வந்தார் 
அளவில்லாத மீட்பை நமக்கு அளித்திட தானே பிறந்தார் 
ஆவின் குடியில் மாட்டுத்தொழுவில் 
ஏழை கோலமாய் அவர் வந்தார் 
கந்தைத் துணியில் முன்னணியில் 
கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார்
ஹேப்பி  கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்

குளிர் வாடை வீசும் நேரம் 
நடுவானில் தூதர் கூட்டம் 
மண்ணிலே மேசியா 
பிறந்த செய்தி கூறினார் 

விண்ணில் மகிமை 
மண்ணில் சமாதானம் 
மானுடர் மேல் பிரியமே 

1.மந்தை மேய்ப்பரே புது காணம் பாடுங்கள் 
விந்தை காணவே விரைந்தேகி செல்லுங்கள் 
மேசியா இயேசு பிறந்தார் 
மேன்மைகள் யாவும் துறந்தார் 
மாட்டுத்தொழுவில் தவழ்கிறார்
_--------------------
பணிவிழும் இரவினில் இயேசு  
மண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசு 
வானத்தில் விண் தூதர் பாட 
அந்த காணத்தில் விண்மீன்கள் ஆட 

1.கனிவாக மண்ணோடு பாட 
எங்கும் குளிர் வாடை இதமாக வீச
சுகமாக ராகங்கள் சேர 
ஓடி வா தென்றலே 
மலரே மலரே மலர்ந்திடு 
மகிழும் மனமே தந்திடு

2.ஒளி வீசும் அழகான தோற்றம் 
அவர் கேட்கின்றார் உந்தன் மனமாற்றம் 
எண்ணத்தில் வேண்டாம் தடுமாற்றம் 
ஓடி வா நெஞ்சமே 
பரிசுத்தர் பாதத்தில் வந்திடு 
பணிவுடன் உள்ளத்தை தந்திடு

---------------
இசை மழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள்
 
1.வான்மலர்தான் இப்புவியிலே 
மலர்ந்திடதே நம் வாழ்வில் இன்று 
நமக்காய் பிறந்தார் பாசம் கொண்டு 
வாழ்வின் மீட்பின் பாதையிலே

2.மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமை என்றே கண்டோமே இன்று 
விடிவெள்ளியாகவே தேவபாலன் 
தாழ்மை தாங்கி அவதரித்தார்

----------+++++
சத்திரத்தை தேடி வாருங்க 
சந்தோஷமாய் ஆர்ப்பரித்து ஒன்று கூடுங்க 
சாலேமின் ராஜனையே பார்க்க வாருங்கள
மேலாக ராஜன் இவர் மேன்மை விட்டு வந்தாரே 
பூலோக மாந்தரின் பாவம் நீக்க வந்தாரே 
மகிமையின் ராஜனிவர் மகத்துவ தேவனிவர் 
மண்ணின் மீட்பரிவர் மனுவுருவானார்

1. காட்டுக்குள்ளே பாட்டு கேக்குது 
கேட்டு கேட்டு ஆயர் கூட்டம் பாட்டு பாடுது 
ஆடுகளும் துள்ளி துள்ளி தலையை ஆட்டுது 
வாருங்கள் மேய்ப்பரே நாம் பெத்தலகேம் செல்வோம் 
வானம் விட்டு பூமி வந்த மேசியாவை காணுவோம் 
பெத்தலையின் சத்திரத்திலே 
மாடடையும் குளிரினிலே 
மரியன்னை மடிதனிலே 
மன்னனை கண்டார்

2. உன்னை மீட்க இயேசு வந்தாரே 
பாரிலே என்னை மீட்க இயேசு வந்தாரே 
பாரிலே நம்மை மீட்க இயேசு வந்தாரே 
மாசில்லா பாலனை போற்றி போற்றி பாடுவோம் 
மாறிடா அன்பினை உலகமெங்கும் சொல்லுவோம் 
இவரே இரட்சகராம் இவரே வல்லவராம் 
இவரே பரிசுத்தராம் என்றே பாடுவோம்

-------++++++++
 ஆராரோ ஆரிரரோ ஆராரோ 
ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ

ராசாதி ராசா எங்க மகராசா 
இந்த ஏழைகளை ஆளவந்த இயேசு ராசா
மனசெல்லாம் சந்தோஷம் பொங்குதுங்க
சின்னஞ்சிறுசெல்லாம் சங்கீதம் பாடு துங்க

1. பூ போல முகமுங்க அத 
பார்த்தாலே அழகுங்க 
சகிக்காத இடமுங்க அங்க 
பொறந்தாரு மகனுங்க 
கதிதானோ ஏனுங்க 
கதை எல்லாம் கேளுங்க

வானிலிருந்து நம் தேவன் 
இயேசு பாலகனாய் பிறந்தார் 
பாவ மனிதர் நலம் வாழ 
இங்கு மானிடனாய் பிறந்தார் 
ஆரிரரோ ஆராரோ

1.வாழும் மனிதர் பாவங்களை 
தோளில் சுமக்க பிறந்தாரே 
தேவ உலக வாழ்வு தனில் 
நாமும் பிறக்க பிறந்தாரே 
உலகில் பிறந்தார் நீதியின் ராஜா 
தீர்ப்பும் தருவார் சாரோனின் ரோஜா

விண்ணில் தூதன் தோன்றி டவே 
மண்ணில் மாற்றி சிறந்திடவே 
மன்னன் தேவன் உதயமானார் 
தேவபாலன் மகிமை ஆனார்

1.மாமரி மடி மீதிலே 
மாடடையும் குடில் நாடியே -மன்னன் 

2.வான்வெளி வழிகாட்டவே 
ஞானியர் மூவர் நாடவே -மன்னன்

அசைந்தாடும் தென்றல் 
இசையோடு சேர்ந்து 
திசையெங்கும் ஒலிக்கின்றது 
மழலை தவழும் 
அழகில் நீ மனமும் 
மகிழ்ந்துன்னை தாலாட்டுது -பாலா

1.மரியன்னை மடியில் 
மந்தையின் தொழுவில் 
பிறந்தரே இயேசு தேவா 
உம் குடில் நாடி 
ஓடோடி வந்தேன் 
பாலா நீ துயில் கொள்ளுவாய் 

2.பனி தூவும் ராவில் 
பாழும் இவ்வுலகில் 
பயம் நீக்க வந்தாயன்றோ 
பூ மெத்தை இல்லை 
புல் மெத்தை தானே 
பாலா நீ துயில் கொள்ளுவாய்
----------------

வெள்ளி ஒன்று 
புது வெள்ளி ஒன்று வானத்திலே தோன்றியதே 
அது நல்ல செய்தி ஒன்று கூறிடுதே 
யூதருக்கு ராஜா பிறந்தார் என்று 
யூகித்தார் சாஸ்திரிகள் உண்மை அதே 

1.தங்க கட்டி கொண்டு வரலாமா 
தங்க பாலனுக்கு பரிசாகத் தரலாமா 
வாரும் வாரும் அதை தாரும்  தாரும் 
மிக நல்ல பரிசு அதுவே 
மங்கா புகழ் மன்னவனையே 
சங்கீதம் பாடி தொழுதிடுவோம் 

2.தூபவர்க்கம் கொண்டு வரலாமா 
தூய பாலனுக்கு பரிசாக தரலாமா 
வாரும் வாரும் அதை தாரும்  தாரும்
மிக நல்ல பரிசு அதுவே 
மங்காப் புகழ் மன்னவனையே 
சங்கீதம் பாடி தொழுதிடுவோம்



அந்த மாலை காற்றினில் கீதம் 
அது தூதர்கள் பாடிடும் கீதம் 
அதைக் கேட்டு மகிழ்ந்திட நாமும் 
அந்த முன்னனை நோக்கி செல்வோம் 

1.பொன்மாளிகை உமக்கங்கு இல்லை
பசும்புல்லணைதான் பஞ்சு மெத்தை
அன்பு பாலனின் புன்னகை கண்டு 
மண மாளிகை யார் தரவில்லை



ஜெனித்தார் ஜெனித்தார்
எங்கள் ஜெகதல இரட்சகனே
உதித்தார் உதித்தார்
எங்கள் உயர் மனுவேலனே

1.கந்தைகள் அணிந்தவரே
பாவ கந்தைகள் அகற்றிடவே
சொந்த குமாரனாய் சொந்தம் பாராட்டியே
விந்தையாக ஜெனித்தார்

2.உன்னதம் துறந்தவரே
எம்மை உன்னதராக்கிடவே
கண்மணி பாலனாய் கனி வினையகற்ற
கன்னியின் மடியிலுதித்தார்

3.வானம் திறந்திடவே
வான சேனைகள் துதித்திடவே
ஞானியர் தேடிட இடையர் வாழ்ந்திட
இனிய தேவன் பிறந்தார்

தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கங்கள் முடிவதில்லை
இரட்சண்ய வார்த்தையே இரட்சகர்
இயேசுவே இகத்தின் மீது ஜெனித்தார்

மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)
ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய!

1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன

2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்

3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய

ஸ்திரியின் வித்தாய் வந்தவர்
தாவீதின் வேரானவர்
தீர்க்கன் சொன்ன மேசியா
வாக்குத்ததமானவர் - 2

பாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்தாரே - 4

1.நம்மை மீட்க மண்ணிலே
தேடி வந்த இரட்சகர்
என்றும் நம்மில் வாழவே
இம்மானுவேலானாரே - 2

2.சாபங்கள் யாவும் போக்கவே
வியாதிகள் எல்லாம் நீக்கவே
என்றும் மகிழ்ந்து வாழவே
இரட்சகராக பிறந்தாரே - 2

3.கரங்களை தட்டி பாடுவோம்
கவலையை மறந்து துதிப்போம்
என்றும் நம்மோடிருப்பவர்
சகலத்தையும் புதிதாக்குவார் -2

பெத்லகேம் உரினிலே ,மாட்டு தொழுவதிலே
நம் இயேசு பிறந்தரே, பிறந்தரே பிறந்தரே

நம் இயேசு பிறந்தரே, நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தரே பிறந்தரே, புது வாழ்வு தந்திடவே

ஜீவன் தந்திடவே,நம்மை மீட்டிடவே
நாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நாம் இயேசு பிறந்தாரே ,நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,புது வாழ்வு தந்திடவே

தூதர் பாடிடவே ,மேய்ப்பர் போற்றிடவே
நம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே

வானம் போற்றிடவே ,பூமி மகிழ்திடவே
நாம் இயேசு பிறந்தாரே ,பிறந்தாரே பிறந்தாரே
நாம் இயேசு பிறந்தாரே ,உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே ,நம்மை பரலோகம் சேர்த்திடவே


மாமன்னன் மானிடரை மீட்க – மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
மாசற்ற மாணிக்கம் மகிமையைத் துறந்து – மண்ணிலே பிறந்தார்
நம் மனதிலே பிறந்தார்

மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் எண்ணத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் உள்ளத்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் இல்லத்தில் மகிழ்ச்சி மகிழ்ச்சி நம் வாழ்க்கையில்

சிறுமையானவரே எளிமையானவரே
தனிமையானவரே கைவிடப்பட்டவரே
உங்கள் விடிவெள்ளியான யேசு பெத்தலகேமில் பிறந்திருக்கிறார்

துயரப்படுவரே துன்பப்படுவரே
கவலைப்படுபவரே கண்ணீர் வடிப்பவரே
உங்கள் ரட்சகரான யேசு தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்



கிறிஸ்மஸ் வந்தால் கொண்டாட்டமே

ஆடிபாடி மகிழும் நாட்களே

ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே

இயேசுவை கொண்டாட வாங்கவே -லா லா


1. வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

இயேசு இன்று பிறந்ததாலே

நம் வாழ்க்கை மாறுமே புது வழி திறக்குமே

இயேசு இங்கு வந்ததினாலே


2. கொடிய வியாதி பறந்து போகுமே

யெகோவா ரஃபா என்னை தொடுவாரே

விடுவிக்கும் தேவனே மனிதனாக வந்தாரே

என் வாழ்வில் பயமில்லையே


இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு இருப்பாரே

1. பெத்லகேமில் பிறந்தவர் அவர்

பாலகனாய் ஜெனித்தவர் அவர்

இம்மானுவேல் என்னோடு இருப்பாரே

உலகத்தின் ராஜா அவர் தூதர் போற்றும் தேவனவர்


2. மகிமை நிறைந்த தேவனவர்

மகத்துவத்தின் கர்த்தரவர்

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே

சமாதானபிரபு அவர் தன்னை தரும் தகப்பனவர் இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே - இம்மானுவேல்


3. மனிதனாக பிறந்த அவர்

பரலோகத்தை திறந்த அவர்

இம்மானுவேல் என்னோடுயிருப்பாரே

மாம்சமாக வந்த அவர் தமக்குள் வாழும் இயேசு அவர்

இம்மானுவேல் என்னோடு இருப்பாரே



சந்தோஷமான ஒரு செய்தி வந்தாச்சு சங்கீதம் பாட ஒரு காலம் வந்தாச்சு மன்னன் இயேசு மண்ணில் வந்தார் விண்ணின் மைந்தன் வந்துதித்தார் நிலவு இரங்கி மண்ணில் வந்து தவழ்வது போல உலகில் வாழும் குழந்தையாக இயேசு வந்தாரே


1. பனிமழை பூமியெங்கும் தூவும் வேளையில் பாமரர் ஆயர் எங்கும் தூங்கும் காலையில் தேவதூதர் வானிரங்கி துதிகள் சாற்றிட ஸ்தோத்திர புகழ்ச்சி பாட வந்துதித்தாரே


கிறிஸ்மஸ் வந்தாலே கொண்டாட்டம் தான்

புதுபாட்டு நாம் பாட கும்மாளம் தான் பாட்டு பாடலாம் ஆட்டம் போடலாம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடலாம்


1.ஊரெங்கும் கொண்டாட்டம் உலகெங்கும் உற்சாகம்தான் - இந்த வாண வேடிக்கை ரொம்ப ஜோரு ஜோருதான் தூதர் பாடிடும் கிறிஸ்மஸ் பாட்டு சூப்பர்தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் - 2


2.வீதியோரம் கிறிஸ்மஸ் தாத்தா ஜாலியாக வாரார் பாரு கேரல் ரௌண்டில் பாடும் பாட்டை கேளுங்க ஆட்டம் போட்டிடும் நண்பர் கூட்டம் கூட்டமாய் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் - 2



கிழக்கு திசையிலே அந்த சிவந்த வானத்திலே

மாலை பொழுதிலே அந்த மயங்கும் வேளையிலே   - ஓய்

அழகான வெள்ளி ஒன்று செல்லுதே

அது மன்னன் இயேசு பிறந்தசெய்தியை சொல்லுதே


1. விந்தை காணவே வந்த ஞானியார் 

கந்தை துணியிலே மன்னனைக் கண்டார் சிந்தை களிகூறவே உள்ளமெல்லாம் மகிழவே 

காணிக்கைகள் தந்து அவர் பாதம் பணிந்தார் 


2.சாந்த ரூபனே சாக ஜீவனே

சாரோன் ரோஜாவே லீலிபுஷ்பமே 

மின்னுகிற நட்சத்திரமாய் ஒளிதரும் ஜோதியாய் 

உண்மை சொல்ல உலக வாணில் பயணம் போகுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...