புதன், 4 டிசம்பர், 2019

குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2


குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2

வானம் எனும் வீதியிலே
விண்மீன்கள் பந்தலிட்டு
நள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2
கிழக்கு திசையினிலே
குரல் எழுப்பி அறிவித்தது
என் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2)

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2

1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரே
நல்ல மேய்ப்பரை....
தூதர் யாவரும் துதிக்க வந்தனர்
உன்னத தேவனை....-2
உனக்கும் எனக்கும் நிம்மதி தரும் 
நம்பிக்கையின் தேவன்
குறைகள் இல்லாமல்
அன்பு செலுத்தும் நாதன்-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

Happy Christmas Merry Christmas-4

2.மண்ணான உனக்கு தம் சாயலை தந்து
ஜீவன் தந்தவரு....
ஜீவன் தர உனக்காய் மண்ணுலகம் வந்த
நல்ல நல்ல தேவன்....-2
உன்னை மேன்மேலாய்
உயர்த்திய தேவன்
வானத்தின் பலகனியை
உனக்காய் திறந்தவரு-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2

3.மரியின் மைந்தன் பிதா அன்பு குமாரன்
நம் இயேசு தேவன்.....
ஏழை கோலமாய் மாட்டுத்தொழுவத்தில்
நமக்காய் பிறந்தாரு....-2
நானே வழியும் சத்தியம்
ஜீவன் என்றாரே
அப்பாவை நமக்கு
நித்திய ஜீவன் என்றாரே-2

குதூகலம் சந்தோஷமே
இயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2
-வானம் எனும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD