ஞாயிறு, 9 நவம்பர், 2025

சீரார் விவாகம் ஏதேன் காவிலே

சீரார் விவாகம் ஏதேன் காவிலே
நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்றலாசியே
வாராய் சுபம் சேரவே

பல்லவி

நேயனே மகா தூய தேவ தேவனே
சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவுமே ஆசிதா

2. மங்கள மணமகன் ( யாபேஸ்க்கும் )
மங்கள மணமகள் ( பியர்லினிக்கும் )
நேச தேவ தயவாய்
பாசத்துணை சேர்த்துவை – நேயனே

3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
நாடு உயர்ந்த தேவ நூலதைத்
தேடித்துணை கொண்டன்பாய்
நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே

4. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
வாழ்க சுற்றத்தார் அன்பர்
வாழ்க சுபமன்றலும் – நேயனே

Worship cast. Church

தேவனுடைய பெரிதான கிருபையினாலே திருச்சபைக்கான Worship cast. Church presentation உருவாக்கி இருக்கிறோம். இது அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தும் ...