சனி, 12 செப்டம்பர், 2026

ஆரவரதொனியோடு ஆர்பரிக்க செய்து

ஆரவரதொனியோடு ஆர்பரிக்க செய்து 
ஆனந்த சத்ததோடு  ஆடிப்பாட ( அகமகிழ) செய்வாரே

அவர் யூதாவின் ராஜ சிங்கம்
அவர் நாமம் எங்கும் வெல்லும்
தடையெல்லாம் நொடி பொழுதில் தகர்ந்தே போகும்
(மலையெல்லாம் தவிடுபொடி யாகி போகும் )

1.பாலும் வழிந்தோடும் தேனும் புரண்டோடும்
அருமையான சுதந்திரம் கண்டோமே
எதிரியை வீழ்த்திடுவோம் எளிதாய் ஜெயித்திடுவோம்
இன்றே வாக்குகளை சொந்தமாக்க செய்வாரே

தேவன் நமக்கு துனையாய் நிற்பாரே
நன்மையான வாழ்வை தருவாரே

2.அஞ்சிடத் தேவையில்லை கலங்கிடத் தேவையில்லை
தோற்றுப்போக துளியும் வாய்ப்பில்லை
ஆவியின் பட்டயத்தால் யுத்தங்களை வெல்வோமே
வெற்றிக்கொடியை ஏற்றிட செய்வாரே

தேவன் நமக்கு துனையாய் நிற்பாரே
நன்மையான வாழ்வை தருவாரே

Worship cast. Church

தேவனுடைய பெரிதான கிருபையினாலே திருச்சபைக்கான Worship cast. Church presentation உருவாக்கி இருக்கிறோம். இது அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தும் ...