வியாழன், 26 பிப்ரவரி, 2015

வேதாகமம் சிறு குறிப்புகள்

சிறு குறிப்புகள்
பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260

கட்டளைகள்-6,468
முன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,140
மொத்த கேள்விகள்-3,294
நீளமான பெயர்-Mahershalalhashbaz-மகேர்-சாலால்-அஷ்-பாஸ்-(ஏசாயா:8:1)
நீளமான வசனம்-எஸ்தர்:8:9 , வெளிப்படுத்தல் :20:4
சிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்-சங்கீதம் 117
சிறிய அதிகாரம்-சங்கீதம் 117
பெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்-3 யோவான்
எழுதியவர்கள்-40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200 க்கும் மேல்

பழைய ஏற்பாடு உண்மைகள்: மொத்த புஸ்தகங்கள்: 39
அதிகாரங்கள்: 929
வசனங்கள்: 23,114
நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்: யோபு 20
நடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்: ஒபதியா
சிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்:எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்: சங்கீதம்

புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 27
அதிகாரங்கள்: 260
வசனங்கள்: 7,957
நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17
சிறிய புஸ்தகம்: 3 யோவான்
சிறிய வசனம்: யோவான் 11:35
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4
பெரிய அதிகாரம்: லூக்கா 1
பெரிய புஸ்தகம்: லூக்கா.

பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது.

காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது.

பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம்.

பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன.

பழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன.

-தொகுக்கப்பட்டது

பழைய ஏற்பாடு எபிரேயு பாஷையிலும், புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டது. சில புஸ்தகங்கள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டது. பழையேற்பாடு எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050 வருட காலத்தில் எழுதப்பட்டது. பழையேற்பட்டின் சரித்திரக்காலம் கி.மு 4000- கி.மு 400 வரை. பழையேற்பாட்டின் முதல் 5 புஸ்தகங்கள் பஞ்ச ஆகமம் என்று அழைக்கப்படுகின்றது. இப்புஸ்தகங்கள் மோசேயினால் எழுதப்பட்டவையாகும். நாற்பது ஆண்டு வனாந்தர ஜாத்திரையில் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது. எழுதப்பட்ட காலம் 1446- 1406 வரை ஆகும். பஞ்ச ஆகமங்களை தோரா என்று எபிரேய மொழியில் அழைப்பார்கள். வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு 40 ஆசிரியர்களினால் ( ஏறக்குறைய ) எழுதப்பட்டது. இவர்களில் இடையர்கள், இராஜாக்கள், மீனவர்கள், நீதிபதிகள், பிரதம மந்திரி, தீர்க்கதரிசிகள், அரசியல் தலைவர்கள், வரி வசூலித்தவர்கள், மருத்துவர்கள் போன்ற பலநிலைப்பட்டவர்களும் இருந்தனர்.
அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு
உலகிலேயே அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டுள்ள புஸ்தகம் வேதாகமம். இதன் முதல் மொழி பெயர்ப்பு கி.மு 250ல் ஆரம்பமானாது. இன்று நூற்றக்கணக்கான மொழிகளில் வேதாகமும், அதன் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்கள் இன்றும் தொடர்ந்து மொழி பெயர்த்து வருகின்றனர். உலகில் இதுபோல் இன்னொரு புஸ்தகம் இல்லை .

திங்கள், 23 பிப்ரவரி, 2015

வரவேண்டும் தேவ ஆவியே

வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்தில்

ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டுமையா
அனல் மூட்டும்

பலிபீடத்தில் என்னைப் பரனே

பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே

                     பல்லவி

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை

1. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி – கல்வாரியின்

2. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும் – கல்வாரியின்

3. சுயம்மென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர் – கல்வாரியின்

4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தில் கண்டதால் – கல்வாரியின்

Neere Ellam Neere Ellam

நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் ஏசுவே-2

உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் ஏசுவே -2

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஏசுவை -2
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் ஏசுவை -2

நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் ஏசுவை -2
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் ஏசுவை -2

பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் ஏசுவை -2
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் ஏசுவை -2

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பாரீர் கெத்சமனே


பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி உனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே

2. அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே

3. ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே

திங்கள், 2 பிப்ரவரி, 2015

மரணத்தை ஜெயிக்கலாம்

மரணத்தை ஜெயிக்கலாம்

இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு காரியத்தை குறித்து பயப்படுவார்கள். சிலருக்கு பேசுவதென்றால் பயம், சிலருக்கு தண்ணீரென்றால் பயம், ஒரு சிலருக்கு உயரமான இடமென்றால் பயம், பலருக்கு இருட்டென்றால் பயம், இதில் ஒருவர் பயப்படும் காரியத்தில் மற்றவருக்கு பயம் இருக்காது.
ஆனால் உலகில் பிறந்த அனைவருக்கும் இருக்ககூடிய பொதுவான பயம் “மரணபயம்” என்பதை எவராலும் மறுக்கவோ, மாற்றவோ கூடாது. மனிதனுக்கு இரண்டு மரணம் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.

i) முதலாம் மரணம்:

ஒரு தரம் பிறப்பதும், பின்பு மரிப்பதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது என வேதம் கூறுகிறது. இந்த உலகில் பிறந்த யாவரும் நிச்சயம் இந்த முதலாம் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். இதிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது.

ii) இரண்டாம் மரணம்:

“மரணமும், பாதாளமும் அக்கினி கடலிலே தள்ளப்பட்டது. இது இரண்டாம் மரணம். ஜீவ புஸ்தகத்தின் பெயர் எழுதப்பட்டவனாக காணப்படாதவனெவனோ அவன் அக்கினி கடலிலே தள்ளப்படுவான்” வெளி 20:14,15. அக்கினி கடலில் ஒருவன் தள்ளப்படுவதே இரண்டாம் மரணம் என்று வேதம் குறிப்பிடுகின்றது.

இந்த இரண்டாம் மரணத்திலிருந்து நாம் தப்பிக்க இயலும். ஜீவ புஸ்தகத்தில் நம்முடைய பெயர் காணப்படும் போது நாம் இரண்டாம் மரணத்தை ஜெயிக்கிறவர்களாக காணப்படுகிறோம்.
எனவே முதலாம் மரணத்திற்கு நாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதைவிட இரண்டாம் மரணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜீவபுஸ்தகத்தில் நம் பெயர் காணப்படும்படிக்கு, இந்த உலகத்தால் கறைபடாதபடி பரிசுத்தமாய் ஜீவிப்போம்.

இஸ்ரேலை ஆண்ட இராஜாக்கள்

இஸ்ரேலை ஆண்ட இராஜாக்கள்

இஸ்ரேலின் முதல் ராஜா சவுல். இரண்டாவது ராஜா தாவீது. மூன்றாவது ராஜா சாலமோன். சாலமோனுக்கு அடுத்து அவனது மகன் ரெகோபெயாம் - ன் நாட்களில் இஸ்ரேல், வடக்கு ராஜ்யம், தெற்கு ராஜ்யம் என இரண்டாகப் பிரிந்தது. வடக்கு இராஜ்யத்தில் 19 இராஜாக்களும், தெற்கு இராஜ்யத்தில் 21 இராஜாக்களும் அரசாட்சி செய்தனர். அது பற்றிய விபரம்...

இஸ்ரவேல் - வடக்கு ராஜ்யம் - அரசாண்டவர்கள்

1. யெரோபெயாம் - 930 - 910

2. நாதாப் - 910 - 909

3. பாஷா - 909 - 886

4. ஏலா - 886 - 885

5. சிம்ரி - 885

6. ஒம்ரி - 885 - 874

7. ஆகாப் - 874 - 853

8. அகசியா - 853 - 852

9. யோராம் - 852 - 841

10. யெகூ - 841 - 814

11. யோவாகாஸ் - 814 - 798

12. யோவாஸ் - 798 - 782

13. யெரோபெயாம் - 793 - 753

14. சகரியா - 753 - 752

15. சல்லூம் - 752

16. மெனாகேம் - 751 - 742

17. பெக்காகியா - 741 - 740

18. பெக்கா - 751 - 732

19. ஒசெயா - 731 - 722

இஸ்ரேலின் வீழ்ச்சி - கி.மு.722 ல் ஏற்பட்டது.

யூதா - தெற்கு ராஜ்யம் அரசாண்டவர்கள்

1. ரெகொபெயாம் - 931 - 914

2. அபியாம் - 913 - 911

3. ஆசா - 910 - 870

4. யோசபாத் - 873 - 849

5. யோராம் - 849 - 842

6. அகசியா - 841

7. அத்தாலியாள் - 841 - 836

8. யோவாஸ் - 836 - 797

9. அமத்சியா - 797 - 768

10. அசரியா (உசியா) - 791 - 740

11. யோதாம் - 751 - 736

12. ஆகாஸ் - 736 - 716

13. எசேக்கியா - 729 - 687

14. மனாசே - 696 - 642

15. ஆமோன் - 641 - 640

16. யோசியா - 639 - 609

17. யோவகாஸ் - 609

18. யோயாக்கீம் - 668 - 598

19. யோயாக்கீன் - 598

20. சிதேக்கியா - 597 -586

தெற்கு ராஜ்யம் யூதா கி.மு.586 ல் வீழ்ச்சியடைந்தது.

21. கெதலியா

தீர்க்கதரிசிகளின்பிரிவுகள்‬

தீர்க்கதரிசிகளின்பிரிவுகள்‬

1. புத்தகம் எழுதிய தீர்க்கதரிசிகள் (Canonical)

புத்தகம் எழுதாத தீர்க்கதரிசிகள் (Non-Canonical)

2. பெரிய தீர்க்கதரிசிகள், சிறிய தீர்க்கதரிசிகள்.

பெரிய தீர்க்கதரிசிகள்: 4 பேர்.

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல்

சிறிய தீர்க்கதரிசிகள்: 12 பேர்.

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் எதனால் அழைக்கப்படுகிறது?

தீர்க்கதரிசிகள் எழுதின புத்தக அளவை வைத்து, பெரிய தீர்க்கதரிசி என்றும் சிறிய தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்படுகிறது. அவர்களின் வயதின் அடிப்படையில் அல்ல; இரு சாராரும் சமமானவர்கள்.

தீர்க்கதரிசிகளின் காலம்: (கி.மு.900 - கி.மு.400 வரை)

சுமார் கி.மு.850 க்கும் கி.மு.400 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் இந்த 16 தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரினம் உரைத்தார்கள். அதாவது, கி.மு.9 ஆம் நூற்றாண்டுக்கும் 4 வது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம். இப்போது 21 ஆம் நூற்றாண்டு.

வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.

வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வரிசையில் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.

9 ஆம் நூற்றாண்டில்: கி.மு.900 - 800

ஒபதியா, யோவேல், யோனா

8 ஆம் நூற்றாண்டில்: கி.மு.800 - 700

ஆமோஸ், ஓசியா, ஏசாயா, மீகா

7 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 700 - 600

எரேமியா, செப்பனியா, நாகூம், ஆபகூக்

6 ஆம் நூற்றாண்டில்: கி.மு.600 - 500

எசேக்கியேல், தானியேல்

5 ஆம் நூற்றாண்டில்: கி.மு. 500 - 400

ஆகாய், சகரியா, மல்கியா

யாருக்கு, யார் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்:

1. புறஜாதிகளுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம் - அசீரியாவுக்கு விரோதமாகவும், நினிவேயின் அழிவைக் குறித்தும்...

ஒபதியா - ஏதோமின் அழிவைக் குறித்தும்...

2. வடக்கு ராஜ்யத்திற்கு (இஸ்ரவேல்): (எப்பிராயீம், சமாரியா)

ஓசியா, ஆமோஸ், யோனா, மீகா

3. தெற்கு ராஜ்யத்திற்கு ( யூதா): (எருசலேம்)

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், யோவேல், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

அசீரியா, பாபிலோன், மேதியா,பெர்சியா ஆகிய நாடுகள் உலக வல்லரசுகளாய் இருந்த காலத்தில் இந்த சிறிய தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். கி.மு.900 முதல் கி.மு.400 க்கும் இடையில்.

தீர்க்கதரிசிகளின் மூன்று கால பிரிவு

தீர்க்கதரிசிகள் மூன்று கால அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்:#

1. சிறையிருப்புக்கு முன்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

நாகூம், ஆபகூக், செப்பனியா, ஏசாயா, எரேமியா, ஒபதியா, ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா. (கி.மு.850 - கி.மு.586).

2. சிறையிருப்புக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

ஆகாய், சகரியா, மல்கியா (கி.மு.536 - கி.மு.400).

3. சிறையிருப்பின் காலம் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள்:

எசேக்கியேல், தானியேல் (கி.மு.586 - கி.மு.536)

இரட்டுடுத்தல்

இரட்டுடுத்தல்
(Sack-Cloth)

'இரட்டு' என்றும் 'இரட்டுடுத்தல்' சொல்வதின் விளக்கம்:

இது ஒரு சணல் வஸ்திரம். இது இருண்ட நிறம். மங்கின நிறமுள்ளது. இது வெள்ளாட்டு மயிரால் செய்யப்படுகிறது.

1. இது துக்கம் கொண்டாடுபவர்கள் தரிப்பார்கள்.

யாக்கோபு தன் குமாரனுக்காக (யோசேப்பு) இரட்டுடுத்தினான். (ஆதியாகமம்: 37:34)

யோபு - 16:15 - தன் பிள்ளைகளின் இழப்புக்காக

பஞ்சம் நீங்க இரட்டுடுத்தினான் இஸ்ரவேலின் ராஜா - (2ராஜாக்கள்: 6:30)

2. சிறையிருப்பில் செல்பவர்கள் தரிப்பார்கள்.

(எரேமியா: 6:26; புலம்பல்: 2:10)

3. தீர்க்கதரிசிகள் இதனை தரிப்பார்கள்.

(தானியேல்: 9:3)

சேலா” - பொருள் விளக்கம்

சேலா” - பொருள் விளக்கம்

“சேலா” (Celah) - என்ற சொல் வேதத்தில் 71 முறை வருகிறது. இதன் பொருள் “இணைத்துப் பார்த்தல்” என்பதாகும். அதாவது, இரண்டு கருத்துக்களை இணைக்கிறது.

உதாரணமாக...

”ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி் - நாலும் ரெண்டும் சொல்லுக்கு உறுதி”

நாலும் - நாலடியார்
ரெண்டும் - திருக்குறள்
சொல்லுக்கு உறுதி. - இரண்டு கருத்துக்களையும் இணைக்கிறது - “சேலா”.

“சேலா” என்பதற்கு 7 வித கருத்து விளக்கங்கள் உண்டு. அவை...

1. இரண்டு கருத்துக்களையும் இணைத்தல் - சேலா.

2. பாடிக் கொண்டே இருக்கும்போது இடையில் நிறுத்துவது - சேலா.

3. எப்போதும் அதுதான் உண்மை என்று ஸ்தாபிப்பதற்கு என்று உபயோகப்படுத்துவது - சேலா.

4. திரும்பத் திரும்ப அதையே சொல்லுதல் - சேலா.

5. மெதுவாக பாடுகிறவன் சத்தத்தை உயர்த்திப் பாடுகிறான் - சேலா.

6. ஸ்பிரிதம் விடுதல் அல்லது பரப்பி விடுதல் அதாவது, இராகம் விடுதல் - சேலா. (உ.ம்) “நன்றி ராஜா... நன்றி ராஜா...”

7. பாடிக் கொண்டு இருக்கும்போதே வாத்தியக் கருவியில் ஒரு இடைச் சொருகல் - சேலா

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...