திங்கள், 2 பிப்ரவரி, 2015

மரணத்தை ஜெயிக்கலாம்

மரணத்தை ஜெயிக்கலாம்

இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு காரியத்தை குறித்து பயப்படுவார்கள். சிலருக்கு பேசுவதென்றால் பயம், சிலருக்கு தண்ணீரென்றால் பயம், ஒரு சிலருக்கு உயரமான இடமென்றால் பயம், பலருக்கு இருட்டென்றால் பயம், இதில் ஒருவர் பயப்படும் காரியத்தில் மற்றவருக்கு பயம் இருக்காது.
ஆனால் உலகில் பிறந்த அனைவருக்கும் இருக்ககூடிய பொதுவான பயம் “மரணபயம்” என்பதை எவராலும் மறுக்கவோ, மாற்றவோ கூடாது. மனிதனுக்கு இரண்டு மரணம் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.

i) முதலாம் மரணம்:

ஒரு தரம் பிறப்பதும், பின்பு மரிப்பதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றது என வேதம் கூறுகிறது. இந்த உலகில் பிறந்த யாவரும் நிச்சயம் இந்த முதலாம் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். இதிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது.

ii) இரண்டாம் மரணம்:

“மரணமும், பாதாளமும் அக்கினி கடலிலே தள்ளப்பட்டது. இது இரண்டாம் மரணம். ஜீவ புஸ்தகத்தின் பெயர் எழுதப்பட்டவனாக காணப்படாதவனெவனோ அவன் அக்கினி கடலிலே தள்ளப்படுவான்” வெளி 20:14,15. அக்கினி கடலில் ஒருவன் தள்ளப்படுவதே இரண்டாம் மரணம் என்று வேதம் குறிப்பிடுகின்றது.

இந்த இரண்டாம் மரணத்திலிருந்து நாம் தப்பிக்க இயலும். ஜீவ புஸ்தகத்தில் நம்முடைய பெயர் காணப்படும் போது நாம் இரண்டாம் மரணத்தை ஜெயிக்கிறவர்களாக காணப்படுகிறோம்.
எனவே முதலாம் மரணத்திற்கு நாம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதைவிட இரண்டாம் மரணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜீவபுஸ்தகத்தில் நம் பெயர் காணப்படும்படிக்கு, இந்த உலகத்தால் கறைபடாதபடி பரிசுத்தமாய் ஜீவிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...