ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பாரீர் கெத்சமனே


பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி உனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே

1. தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே

2. அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே

3. ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஸ்தோத்திர பலிகள் 1000

அன்பான சகோதர சகோதரிகளே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் நம் தேவாதி தேவனை நீங்களும் துதித்து ஆசீர்வாதங்களை பெற்றுகொள்ளுங்களேன். 1. அப்பா பி...