வியாழன், 29 ஜூலை, 2021

வேதாகம ரகசியங்கள்

*வேதாகம ரகசியங்கள்* 


             *சங்கீதம்* 

பரிசுத்த வேதாகமத்தின் சங்கீத புத்தகம்”
மற்றும் “சங்கீத பிரிவுகள்” ஆகிய முன்னைய
பதிவுகளைக்காட்டிலும் சற்று அதிகமான
தகவல்கள் தேடித் தொகுக்கப்பட்டுள்ளது.

எபிரேய மொழியில் “தெஹில்லீம்” (Tehillim) என்று
அழைப்பர். இதன் பொருள் “துதியின் பாடல்கள்”
என்பதாகும்.

☀ கிரேக்க மொழிப்பெயர்ப்பான
செப்தஜ்வெந்தில் இதனை “ப்சால்மொய்” (Psalmoi)
என்று அழைப்பர். இதன் பொருள் “இசைக்
கருவிகளுடன் பாடப்பட்ட பாடல்” என்பதாகும்.

இலத்தீன் மொழியில் இதன் தலைப்பு “லிபெர் ப்
சால் மோரம்” (Liber Psalmorum) என்பதாகும். இதன்
பொருள் சங்கீதங்களின் புத்தகம் என்பதே.


சங்கீதங்கள் ஏறக்குறைய கி.மு 1500 முதல்
கி.மு.450 வரை உள்ள காலக்கட்டத்தில்
எழுதப்பட்டதாகும்.

☀ இவைகள் எழுதப்பட்ட இடம்,
இஸ்ரவேல், பாலஸ்தீணா மற்றும் பாபிலோன்
ஆகும்.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே
19-வது புத்தகமாக வருகிறது.

☀ சங்கீத
புத்தகத்தில் அடங்கியுள்ள அதிகாரங்களை
வரிசைப்படுத்துவதில் சில வேறுபாடுகள்
உள்ளன. மூல மொழியாகிய எபிரேய வேதாகம
வரிசை முறையிலிருந்து கிரேக்க
மொழிபெயர்ப்பு வரிசை முறை
மாறுபடுகின்றது. நம்முடைய வேதாகமத்திலே
பெரும்பாலும் எபிரேய வரிசைமுறையையே
கடைப்பிடித்துள்ளன.

☀ சங்கீதப் புத்தகம் ஐந்து
பாகங்கள் அல்லது பிரிவுகளாக
காணப்படுகின்றது. ஒவ்வொரு பகுதியின்
முடிவிலும் ஸ்தோத்திர வாழ்த்தோடு ஆமென்,
ஆமென் என்ற வார்த்தைகள் வருவதைப்
பார்க்கலாம்.

☀ ஒவ்வொரு பிரிவிலுமுள்ள
கடைசி சங்கீதத்தின் இரண்டு வசனங்களை
எடுத்து படியுங்கள். இந்த 5 பாகங்களும்
வேதாகமத்தின் முதல் 5 புத்தகங்களை போல
காணப்படுகின்றன. »1 - 41 (படைப்பு) »42 - 72
(மீட்பு) »73 - 89 (பரிசுத்தம்) »90 - 106 (அலைந்து
திரிதல்) »107 - 150 (தேவனைப் போற்றுதல்)

தமிழ் வேதத்தில் 150 சங்கீதங்களும் 2026
வசனங்களும் உள்ளன.

☀ 119-வது அதிகாரம்
பெரிய அதிகாரமாகவும் 117-வது அதிகாரம்
சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ “கர்த்தர்”
என்று சங்கீத புத்தகத்தில் மட்டும் 650-க்கும்
மேலதிகமாக வருகின்றது.

☀ சங்கீத புத்தகத்தில்
5 அதிகாரங்கள் 5 வசனங்களைக் கொண்டுள்ளது –
சங் 15,70,93,100,125.

☀ தாவீது 73 சங்கீதங்களையும்,
மோசே 1-ம், சாலமோன் 2-ம், ஆகசாப் 12-ம், ஏமான்
1-ம், ஏத்தான் 1-ம், கோராகின் புத்திரர்கள் 10
சங்கீதங்களையும் எழுதி உள்ளனர். மீதமுள்ள 50
சங்கீதங்களின் ஆசிரியர்கள் யாரென்று
தெரியவில்லை.

☀ சங்கீதங்கள் 2 மற்றும் 95
தாவீதால் எழுதப்பட்டதாக இருக்கும் என்கிற (அப்
4:25, எபி 4:7, ஆகிய வசனங்களின் அடிப்படையில்)
கருத்து வெகு நாளாகவே உள்ளது.

☀ “சேலா”
என்கிற வார்த்தை சங்கீத புத்தகத்தில் 71
முறையும் ஆபகூக் புத்தகத்தில் 3 முறையும்
வருகிறது.

☀ “சேலா” என்கிற வார்த்தை,
வாத்தியங்களை ஒரு சில விநாடிகள்
வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியை
மறுபடியும் ஒரு முறை பாடவும், அந்த பாடல்
வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள்
தியானிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை
குறித்து படிக்கலாம்.

☀ சங்கீத புத்தகத்தில்
ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97
வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.

☀ சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160
வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும்
ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற
வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.

☀ புதிய
ஏற்பாட்டில் மட்டும் 36 தடவை சங்கீதங்களை
மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

☀ சங்கீதம் 119 –ல்
ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும்
தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள்
எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.

☀ தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும்
எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.

☀சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட
வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும்
154 ஆகிய 4 சங்கீதங்கள் உள்ளன.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...