புதன், 17 பிப்ரவரி, 2016

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் - பாடல்

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே

இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
மாறானுமே நாம் ஜெபிக்கணுமே

எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே

உணவை தவிர்த்து உபவாசித்து
தேசத்திற்காய் நாம் கதறணுமே

jeba Avi ootri jebikka seiyum
vinnappaththin Avi vanthirankattum

jeba aavi ootrumae
vinnappaththin Aviyai ootridumae

iravukaL ellaam jeba nearamaai
maatrumae naam jebikkanumae

Iravin naduvilum thaanieal poola
vairaakkiyamaai naan jebikkanumae

unavai thavirththu ubavaasiththu
thesaththirkaai naan katharanume

-

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

புதிய ஏற்பாடு

“புதிய ஏற்பாடு”

புதிய ஏற்பாடு 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. சுவிஷேசங்கள்:

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்

2. அப்போஸ்தலரின் நடபடிகள்

3. பவுலின் நிருபங்கள்:

ரோமர், 1கொரிந்தியர், 2கொரிந்தியர், கலாத்தியர், எபேசியர், பிலிப்பியர், கொலோசெயர், 1தெசலோனிக்க‌ேயர், 2தெசலோனிக்கேயர், 1தீமோத்தேயு, 2தீமோத்தேயு, தீத்து, பிலமோன்

4. பொதுவான நிருபங்கள்:

எபிரேயர், யாக்கோபு, 1பேதுரு, 2பேதுரு, 1யோவான், 2யோவான், 3யோவான், யூதா

5. வெளிப்படுத்தின விஷேசம்

பழைய ஏற்பாடு

“பழைய ஏற்பாடு”

“மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளிலெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்கு சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே” - என்று இயேசு கூறினார். (லூக்கா: 24:14).

இ‌‌யேசு கிறிஸ்துவின் வாத்தைகளின் அடிப்படையில், பழைய ஏற்பாடு பொதுவாக 3 பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. நியாயப்பிரமாணம்: (The Law)

ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்

இந்த 5 புத்தகங்களும் “பஞ்சாகமம்” (Pentateuch) என அழைக்கப்படுகிறது. இது “தோரா” (Torah) என்று அழைக்கப்படுகிறது. The Law - அதாவது “சட்டபுத்தகம்” - “நியாயப்பிரமாணம்” என எபிரேய பாஷையில் அழைக்கப்படுகிறது.

2. தீர்க்கதரிசிகள்: (The Prophets):

தீர்க்கதரிசிகள் - 2 பகுதி உண்டு.

1. முந்திய தீர்க்கதரிசிகள் (Former)
2. பிந்தைய தீர்க்கதரிசிகள் (Latter)

முந்திய தீர்க்கதரிசிகள்:

யோசுவா, நியாயாதிபதிகள், சாமுவேல், இராஜாக்கள்

பிந்திய தீர்க்கதரிசிகள்:

பிந்திய தீர்க்கதரிசிகளில் 2 பிரிவாக பிரிக்கலாம்.

அ) பெரிய தீர்க்கதரிகள்
ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்

அ)பெரிய தீர்க்கதரிசிகள்:

ஏசாயா, எரேமியா, எசேக்கியேல்.

ஆ) சிறிய தீர்க்கதரிசிகள்:

ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

தீர்க்கதரிசிகள் எபிரேய பாஷையில் (Nebhim) “ந‌ெபீம்” என அழைக்கப்பட்டனர்.

3. எழுத்துப்படைப்புக்கள்: The Writings:

கவிதை வடிவில் சார்ந்தவை:

சங்கீதங்கள், நீதி மொழிகள், யோபு

ஐந்து சுருள்கள்: மகிலோத் (Megiloh):

உன்னதப்பாட்டு, ரூத், புலம்பல், எஸ்தர், பிரசங்கி

சரித்திரம் சார்ந்தவை:

தானியேல், எஸ்றா, நெகேமியா, நாளாகம புத்தகங்கள்.

இவைகள் எபிரேய மொழியில் “கெத்துபீம்” (Kethubim) என அழைக்கப்படுகிறது.

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...