உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை
என் இதயம் மகிழ்கின்றது
என் கொம்பு உயர்ந்துள்ளது
பகைவர்கள் மேல் என் வாய் திறந்து
இரட்சிப்பினால் களி கூறுகின்றது
மலட்டு வாழ்க்கையெல்லாம்
மாற்றிவிட்டீரே
பலுகிப் பெருகும் படி தூக்கி விட்டீரே
என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
கனி கொடுப்பேன் நான் உமக்காகவே
புழுதியில் இருந்த என்னை தூக்கிவிட்டீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே
அமர்த்தினீரே என்னை பிரபுக்களோடு
(உம்மை) உயர்த்திடுவேன் முழு இருதத்தோடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக