திங்கள், 25 மே, 2020

பனைமரம் = நீதிமான்கள்

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 
சங்கீதம் 92:12

பனைமரம் = நீதிமான்கள்

பனைமரம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்கள்

1) பனைமரம் வனாந்திரத்தில் இருந்தாலும் அதின் இலைகள் பச்சையாக இருக்கும். ஏற்ற காலத்தில் கனி கொடுக்கும். (நான் தோட்டத்தில் இல்லை வனாந்திரத்தில் இருக்கிறேன் கனி கொடுக்க முடியாது என்று கூறுவதில்லை) = அது போல நாம் வனாந்திரத்தில் (உலகம்) இருந்தாலும் கனி கொடுக்க வேண்டும் (கலா 5:22,23)

2) பனை மரத்துக்கு ஆணி வேர் கிடையாது (ஆணி வேர் பூமியை இறுக பற்றி கொள்ளூம் வேர்) = அது போல நாமும் உலகத்தானாக ஜிவிக்காதபடி இருக்க வேண்டும் (யோ 17:14)

3) பனை மரத்துக்கு கிளைகள் கிடையாது = பக்க வழியாக தோன்றுகிற ஆசைக்கு,  இன்பத்துக்கு நாம் இடம் கொடுக்க கூடாது (எபி 12:1) 

4) பனை மரத்த்தின் வெளிப்பகுதி கறுப்பாக இருக்கும் = உலகத்தில் நமக்கு உள்ள பாடுகளினால் நாமும் அழகற்றவர்களாய் இருக்கிறோம் (ஏசா 53:2 இயேசு பாடுகளினால் அழகற்றவராக காணபட்டார்)

5) பனை மரத்தின் வெளிப்பகுதி கடினமாக இருக்கும் = பாவத்திற்கு விரோதமாக நாம் கடினமாக இருக்க வேண்டும். உலக அசுத்தங்கள் நமக்குள் புகாதபடி நாம் போராட வேண்டும் (எபி 12:4)

6) பனை மரத்தின் உட்பகுதி மிருதுவாக இருக்கும் = இது இரக்கம்,  நன்மை செய்யும் சுபாவத்தை காட்டுகிறது

7) பனை மரத்தின் எல்லா பாகமும் மனிதனுக்கு பயன் படுகிறது = நாமும் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். 

8) பனைமரம் பலமான காற்று அடித்தாலும் கிழே விழாது. உறுதியாக இருக்கும் (தென்னை, பாக்கு மரம் பலமான காற்று அடித்தால் கிழே விழுந்து விடும்) - நீதிமான் உபத்திரவம், சோதனை போன்ற காற்று அடித்தாலும் உறுதியாக இருப்பான். பின் வாங்கி போக கூடாது.

9) பனை மரம் வானத்தை பார்த்து வளர்கிறது = நாமும் வருகையை எதிர்பார்த்து ஜிவிக்க வேண்டும் (லூக் 21:28)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD