திங்கள், 11 மே, 2020

சங்கீதமும், பஞ்சாகமமும்

சங்கீதமும், பஞ்சாகமமும்

சங்கீத புஸ்கத்திலுள்ள
150 சங்கீதங்களையும் , எபிரெய மொழியில் ஐந்து பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். 

மோசே எழுதிய பஞ்சாகமம் போன்று சங்கீத புஸ்தகத்தையும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.. 

*அவையாவன:* 

1.ஆதியாகம சங்கீதம் ( 1 முதல் 41 வரையுள்ள சங்கீதங்கள் ) = 41

2.யாத்திராகம சங்கீதம் ( 42 முதல் 72 வரையுள்ள சங்கீதங்கள் ) = 31 

3.லேவியராகம சங்கீதம் ( 73 முதல் 89 வரையுள்ள சங்கீதங்கள் ) = 17 

4.எண்ணாகமம் சங்கீதம் ( 90 முதல் 106 வரையுள்ள சங்கீதங்கள் ) = 17

5.உபாகம சங்கீதம் 107 முதல் 150 வரையுள்ள சங்கீதங்கள்) = 44

*1) ஆதியாகம சங்கீதம் (1 - 41)*
இந்த சங்கீதங்களில் மையக் கருத்தாயிருப்பவன் மனுஷனே . துவக்கம் முதல் முடிவு வரையிலும் மனுஷனுக்குத் தேவைப்படும் . தெய்வீக ஆலோசனைகள் இந்த சங்கீதங்களில் இடம் பெற்றுள்ளன .
- ஆதியாகமத்தைப் போன்றே , ஆதியாகம சங்கீதமும் மனுக்குலத்தின் மீது தேவனுடைய ஆசீர்வாதத்துடன் துவங்குகிறது . மனுஷன் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால் ஆசீர்வாதம் பெறுவான். (ஆதியாகமம் 1 - 2 ஒப்பிடவும் சங்கீதம் 1 )
இதைத் தொடர்ந்து மனுஷனுடைய வீழ்ச்சியும் கீழ்ப்படியாமையும் இடம் பெறுகிறது ( ஆதியாகமம் 3 - 11 ஒப்பிடவும் சங்கீதம் 2 - 15 )
கிறிஸ்துவின் மூலமாக மனுக்குலத்திற்கு கிடைக்கக்கூடிய மீட்பின் நம்பிக்கையுடன் ஆதியாகமும் ஆதியாகம் சங்கீதமும் முடிவு பெறுகிறது . (ஆதியாகமம் 12 - 50 ஒப்பிடவும் சங்கீ தம் 16 - 41 )
ஆதியாகம சங்கீதத்தின் கடைசி வசனம் சங்கீதம் 41 :13 ஆமென் , ஆமென் என்று கூறி முடிவு பெறுகிறது .

*2) யாத்திராகம சங்கீதம் (42 - 72)*
இந்த சங்கீதங்களின் மையக் கருத்து இஸ்ரவேல் தேசம் . இஸ்ரவேலின் அழிவு , மீட்பர் , மீட்பு ஆகியவை இவற்றில் இடம் பெற்றுள்ளன .

தேவனுடைய வல்லமையான கிரியைகளும் மீட்பும் இதைத் தொடர்ந்து வருகிறது . ( யாத்திராகமம் 4 - 15 ஒப்பிடவும் சங்கீதம் 44 - 50 )
இதைத் தொடர்வது இஸ்ரவேலரின் பின்மாற்றமும் , எதிரிகளிடம் தோல்வியுறுவதும் , அதனால் ஏற்படும் உபத்திரவங்களும் ஆகும் . (யாத்திராகமம் 16 - 27 ஒப்பிடவும் சங்கீதம் 51 - 55 )
இஸ்ரவேலுக்காக தேவன் நடப்பிக்கும் மீட்பின் கிரியை , அவர்கள் மீது தேவனுடைய ஆளுகை ஆகியவற்றுடன் இந்தப் புஸ்தகம் முடிவு பெறுகிறது . ( யாத்திராகமம் 19 - 40 ஒப்பிடவும் சங்கீதம் 56 - 72 )
யாத்திராகமம் சங்கீதம் ஆமென் , ஆமென் என்று கூறி ( சங்கீதம் 72 : 19 ) நிறைவு பெறுகிறது..

*3) லேவியராகம சங்கீதம் (73 - 89)*
இந்த சங்கீத புஸ்தகத்தின் மையக்கருத்து தேவனுடைய பரிசுத்தஸ்தலமும் , தேவனையும் மனுஷனையும் குறித்த இதன் நோக்கமும் .
மனுஷனுக்கு தேவன் வெளிப்படுத்தும் பரிசுத்த ஸ்தலம் , தேவனோடு ஐக்கியமாக இருப்பதன் அவசியம் ஆகியவற்றை விளக்கி இப்புஸ்தகம் ஆரம்பமாகிறது . ( லேவியராகமம் 1 - 7 ஒப்பிடவும் சங்கீதம் 73 - 83 )
தேவனுக்கும் பரிசுத்த ஸ்தலத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு , மீட்கப்பட்டோர் தேவனுக்கு முன்பாக நடந்து கொள்ளவேண்டிய விதம் , தேவனோடு வைத்திருக்க வேண்டிய ஐக்கியம் ஆகியவற்றை இந்த சங்கீத புஸ்தகம் தொடர்ந்து விவரிக்கிறது . ( லேவியராகமம் 8 - 27 ஒப்பிடவும் சங்கீதம் 84 - 49 ) .
இந்தப்புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு சங்கீதமும் தேவனுடைய பரிசுத்தஸ்தலத்தைப் பற்றியும் , இத்துடன் மனுஷனுக்கு இருக்கவேண்டிய தொடர்பு பற்றியும் விவரிப்பது , இப்புஸ்தகத்தின் தனிச் சிறப்பு ஆகும் . 
மற்ற சங்கீத புஸ்தகங்களைப் போலவே , லேவியராகம சங்கீதபுஸ்தகமும் ஆமென் , ஆமென் ( சங்கீதம் 89 : 52 ) என்று கூறி நிறைவு பெறுகிறது..

4) எண்ணாகம சங்கீதம் ( 90 - 106 )
இந்த சங்கீத புஸ்தகத்தின் மையக் கருத்து பூமியிலுள்ள இஸ்ரவேலரும் புறஜாதி ஜனங்களும் . மனுக்குலத்திற்கு தேவனைத் தவிர வேறு நம்பிக்கை இல்லை . மனுஷன் இந்த உலகத்தில் ஜீவிக்கும்போது நல்ல ஜீவியத்தையும் நல்ல உலகத்தையும் நாடி தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் .
இஸ்ரவேலரின் பிரயாணம் வனாந்தரத்தில் ஆரம்பமாயிற்று . இதில் அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டார்கள் . ( எண்ணாகமம் 1 - 8 ஒப்பிடவும் சங்கீதம் 90 } |
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவனுடைய பிரமாணமும் வருங்காலத்திற்குரிய கட்டளைகளும் கொடுக்கப்பட்டன . ( எண்ணாகமம் 9 - 14 ஒப்பிடவும் சங்கீதம் 91 - 94 ) . இஸ்ரவேலர்கள் இளைப்பாறுதலை எதிர்பார்த்தார்கள் ( எண்ணாகமம் 15 - 26 ஒப்பிடவும் சங்கீதம் 95 - 1001

இதைத் தொடர்ந்து அவர்களுக்கு தேவனுடைய பிரமாணமும் வருங்காலத்திற்குரிய கட்டளைகளும் கொடுக்கப்பட்டன . ( எண்ணாகமம் 9 - 14 ஒப்பிடவும் சங்கீதம் 91 - 94 ) . இஸ்ரவேலர்கள் இளைப்பாறுதலை எதிர்பார்த்தார்கள் ( எண்ணாகமம் 15 - 26 ஒப்பிடவும் சங்கீதம் 95 - 100 )

5) உபாகம சங்கீதம் (107 - 150 )
இந்தப் புஸ்தகத்தின் மையக்கருத்து தேவனும் அவருடைய வார்த்தையும் ஆகும் . தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால் மனுக்குலத்திற்கும் , இஸ்ரவேலுக்கும் , தேவனுடைய வாசஸ்தலத்திற்கும் , பூமிக்கும் , முழு மனுக்குலத்திற்கும் எல்லா ஆசீர்வாதங்களும் உண்டு ( உபாகமம் 8 : 31)
கீழ்ப்படியாமையினால் மனுஷனுக்கு வருத்தம் வந்தது . இஸ்ரவேல் சிதறிப் போயிற்று . தேவாலயம் அழிந்து போயிற்று . பூமியில் பாடுகள் உண்டாயிற்று . தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதினால் மட்டுமே இந்த சாபங்களை அகற்றமுடியும் .
இந்த சங்கீத புஸ்தகத்தில் உட்பிரிவு எதுவும் இல்லை . தேவனுடைய வார்த்தையைப் போல , இந்தப் புஸ்தகம் பரிபூரணமாக முழுமையானது.!!..

*#ஆமென்!!*
*#அல்லேலூயா!!!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...