ஞாயிறு, 26 மார்ச், 2023

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட தாரகம் நீரல்லவோ

பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட
   தாரகம் நீரல்லவோ (3)

        அனுபல்லவி

   தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
   இயேசு நாயகன் நீரல்லவோ

        சரணங்கள்

1.    இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல்
   திரு சமுகமளிப்பேன் என்றீரே  (3)
   நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு
   விரைந்து எழுந்திடுவீரே           -        பெலமளி

2.    அதிசயமானவர் என்பதுமது பெயர்
   அதிசயம் விளங்கச் செய்யுமே  (3)
   இது சமயம் உமது இதயம் விரும்புவதை
   இறைவா விளங்கச் செய்யுமே     -        பெலமளி

3.    பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து
   தாகமுடன் அண்டிட  (3)
   நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று
   நாதனைப் பின் சென்றிட           -

4.கலங்காதே சிறுமந்தையே என்ற நல்லுரை
பலமாயுரைக்க வேணுமே
நலமெனக் காண்பதை நமது மத்தியில் செய்து
அலகை அடக்க வேணுமே - பல

5. வழி நடத்திட எம்மை வல்லமையுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மைக் காருமே - பல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD