கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட பாலர்கள்
ஓசன்னா பாடும் கீதம்
காதில் வந்து கேட்குதோ
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று சொல்லி
ஆடினர் பாடினர் கூடினர் தேடினர்
1.யாருமே ஏரிடாத குருகுரு கழுதை
தாருமே ஆண்டவர்க்கு என்று சீடர் கேட்டிட்டார்
நீருமே தேவை ஐயா ஆண்டவர்க்கு என்றுமே -2
சேருமே வாருமே நாளுமே தினம் தினம்
2.கர்த்தரின் நாமத்தினால் வருகிற ராஜாவாம்
நித்யரும் ஸ்தோத்தரிக்கப்பட்டவரும் இவர்தாம்
பரலோகில் சமாதானம் உன்னதத்தில் மகிமை -2
பாடியே போற்றியே வாழ்த்தியே புகழ்ந்தனர்
3.எருசலேம் எருசலேம் ஏன் இந்த அலட்சியம்
உருகி நிற்கிறேனே நான் உனக்காக நித்தமும்
இந்த நாளில் (இந்நாளில்) சமாதானம் பெற்றிட நினைப்பாயா -2
இல்லாவிடில் அழிவும் கேடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக