ஞாயிறு, 26 மார்ச், 2023

ஈசன் நமக்காய் மனிதனாய் உதித்தார்

1. ஈசன் நமக்காய் மனிதனாய் உதித்தார்;
உலகத்தின் பாவத்தை போக்கிடவே;
நேச மா மரியா மக்தலேனா
ஈசனை பெற்ற பாக்கியம் அடைந்தாள்’.
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்:-
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்,
நம் அஹந்தையை நாம் கொன்று விட்டால்,

2. அன்பு காண் மரியா மக்தலேனா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்.
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே,
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை,
அன்பெனும் மரியா மக்தலே னா.
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.-

3. உண்மை யென்ற சிலுவையிற் கட்டி,
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்
வண்மைப் பேருயிர் – யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்.
பெண்மை காண் மரியா மக்தலே னா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...