செவ்வாய், 28 மார்ச், 2023

பவனி பாடல்கள் தொகுப்பு / குருத்தோலை ஞாயிறு பாடல்கள் / palm Sunday songs

பவனி பாடல்கள் தொகுப்பு / PALM SUNDAY SONGS
மத்தேயு 21:9 முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
பாடல் 1
பவனி செல்கின்றார் ராசா நாம் பாடிப் புகழ்வோம் நேசா 
அவனிதனிலே மறிமேல் ஏறி  ஆனந்தம் பரமானந்தம்

1. எருசலேமின் பதியே சுரர் கரிசனையுள்ள நிதியே
அருகில் நின்ற அனைவரும் போற்றும் அரசே எங்கள் சிரசே 

2. பன்னிரண்டு சீஷர் சென்று நின்று பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத

3. குருத்தோலைகள் பிடிக்க பாலர் கும்பல்கும்பலாக நடக்க
பெருத்த தோணியாய் ஓசன்னாவென்று போற்ற மனம் தேற்ற 

4.மங்கள ஓசை ஒலிக்க மாந்தர் ஏசுவை யார் என்று கேட்க 
இறைவன் பெயரால் போற்றப் பெறும் ராஜன் - வேதநாதன்

பாடல் 2
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1. முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.

2. சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்,
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

3. பாவமதைப் போக்கவும் இப்பவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4. பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5.வீதியெங்கும் ஓசை கேட்டு ஆனந்தத்தில் திளைத்தார்
ஆவல் மேவும் பவனியோடு நம்மில் கோலம் காணுவோம்.

6. போகும் பாதையாதுவென்று நாடாதிருப்போரையும்
இடுக்கத்தின் வாசலிலே பயணம் செய்ய ஏகுவோம்.

7. குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
கூடி அருள் பெற்றுநாமும் திரியேகரைப் போற்றுவோம்.

பாடல் 3
தாவீதின் மைந்தனுக்கே ஓசன்னா  தாரணி வந்தவர்க்கே ஓசன்னா 
பிதாவின் சுதனுக்கே ஓசன்னா  பரிசுத்த ஆவிக்கு ஓசன்னா 
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா -3

1.மரிமேல் வருபவர் மாசற்றவர்  மகிபனுக்கே ஓசன்னா 
மணம் குளிர பாடிடுவோம்  மன்னவர்கே ஓசன்னா

2.எருசலேம் வீதியிலே பவணிவருபவர் ஸ்கோதிரிக்கப்படத்தக்கவர்
எந்நாளும், மகிழ்ந்தே பாடிடுவோம்  உன்னதத்தில் ஓசன்னா

3.மரக்கிளைகள் தறித்தே பாதைகளை நிரப்பி மேலாடைவிரித்திடுவோம் 
மன்னாதி மன்னன் மாதேவன் ஏசுவுக்கு  உன்னகத்தில் ஓசன்னா

பாடல் 4
ஏசு மகாராசனுக்கே இன்றும் என்றும் ஜெ
மீசுரர்கள் போற்றும் எங்கள் ஈசனுக்கு ஜெ ஜெ

1.சின்ன மறி யொன்றைச் சீடர் கொண்டு சேர்த்தனர் 
கன்னி மரி மகனைப் பாலர் காண ஏகினார்.

2.மாவிலையும் மரக்கிளையும் தரித்துவந்துமே 
பாவியின் நேசருக்கவர் தாவி விரித்தார்.

3.காணரிய கூட்ட ஜனம் கண்டு களித்துச் 
சேணமாக வஸ்திரம் விரித்துச் சேவித்தார்.

4.சோலைக்கிளி குயலினங்கள் சூழ்ந்து பாடியே 
மாலையிட்டால்போல் அவரை மகிழ்ந்து போற்றவே.

5. ஈந்து செடி குருத்துகளை எடுத்துக் கைகளில்
ஏந்தி நின்று ஆடிப்பாடிச் சென்ற சிறுவரே.

6.ஆண்டவருக் கேற்ற மறி நானும் ஆவேனே
தாண்டவம் ஆடி அவரை ஈண்டு போற்றுவேன்

பாடல் 5
ஓலைக் கரங்களில் ஓசன்னா சாலை நெடுகிலும் ஓசன்னா
தாவீதின் மகனே ஓசன்னா உன்னதம் தனிலே ஓசானா

மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்
பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்
விடியல் வேந்தனை வரவிடுங்கள்
வாழ்வை நமக்குத் தரவிடுங்கள்

அடிமை நிலையை மாற்றப் பிறந்தவர்
அன்பின் அரசர் இவர் தானோ ?
எளிமை நிலையை தோளில் சுமந்த
விண்ணின் மகனும் இவர் தானோ ?

மரியின் மகனாய் பிறந்தாரோ
மறியின் முதுகில் இருந்தாரோ
மனிதம் சுமந்து திரிந்தாரோ
மரணம் வருதல் அறிந்தாரோ

ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்து
அரசின் அரசை வரவேற்போம்
எபிரே யத்துச் சிறுவர் போலே
குருத்து ஓலைகள் அசைத்திடுவோம்

இருளில் ஒளியாய் நடந்தாரோ
எங்கும் ஒளியா திருந்தாரோ
விண்ணின் வாழ்வைத் துறந்தாரோ
பாவம் மறையத் தெரிந்தாரோ

பாடல் 6
கரத்திலே குருத்தோலை பிடித்திட்ட பாலர்கள்
ஓசன்னா பாடும் கீதம்  காதில் வந்து கேட்குதோ

தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று சொல்லி 
ஆடினர் பாடினர் கூடினர் தேடினர்

1.யாருமே ஏரிடாத குருகுரு கழுதை 
தாருமே ஆண்டவர்க்கு என்று சீடர் கேட்டார்
நீருமே தேவை ஐயா ஆண்டவர்க்கு என்றுமே -2
சேருமே வாருமே நாளுமே தினம் தினம்

2.கர்த்தரின் நாமத்தினால் வருகிற ராஜாவாம்
நித்யரும் ஸ்தோத்தரிக்கப்பட்டவரும் இவர்தாம்
பரலோகில் சமாதானம் உன்னதத்தில் மகிமை -2
பாடியே போற்றியே வாழ்த்தியே புகழ்ந்தனர்

3.எருசலேம் எருசலேம் ஏன் இந்த அலட்சியம்
உருகி நிற்கிறேனே நான் உனக்காக நித்தமும்
இந்த நாளில் (இந்நாளில்) சமாதானம் பெற்றிட நினைப்பாயா -2
இல்லாவிடில் அழிவும் கேடும்

பாடல் 7
வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்

1.திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்

2.அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்
அதமக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்

3.சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்

4.இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்
நீதிக்கவசம் கையாடுவோம் வசம்

5.விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்
அதை மேலுயர்த்துவோம்

பாடல் 8
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வீரநடை நடந்திடுவோம்

1.வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே

2.ஆயிரம் தான் துன்பம் வந்தாலும் அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு நாம் அலகையை வென்று விட்டோம்

3.காடானாலும் மேடானாலும் கர்த்தருக்கு பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்தோம் நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

4.கோலியாத்தை முறியடிப்போம் இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால் பிசாசை வென்றிடுவோம்

பாடல் 9
யெகோவா நிசி யேகோவா நிசியை போற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே – அல்லேலூயா

1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா?
யூத சிங்கம் யுத்த சிங்கமே – யெகோவா

2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல வீரரே – யெகோவா

3. எதிரி வெல்லம் போல ஏறி வருகின்றான்
இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா?
கர்த்தர் நாமம் வல்ல நாமம் – யெகோவா

4. ஆவியில் நிறைந்த ஜெபம் செய்வோமே
ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே
ஆர்ப்பரித்து அலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை வெல்வோமே
கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ – யகோவா

5. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவ தேவ சேனை அல்லவோ? – யகோவா

பாடல் 10
யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
உமக்கே ஆராதனை
யெகோவாயீரே தேவைகளை சந்திப்பீர்
உமக்கே ஆராதனை

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா

1. ஜெபத்தின் காரணரே ஆராதனை
ஜெபிக்க வைத்தவரே ஆராதனை
ஜெபமே சுவாசமே ஜெபமே தூபமே
ஜெபத்தின் வீரரே ஆராதனை

2. அழகில் உன்னதரே ஆராதனை
அணைக்கும் ஆதரவே ஆராதனை
அன்பின் ராஜனே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே ஆராதனை

3. சர்வ வல்லவரே ஆராதனை
சாட்சியாய் மாற்றினீரே ஆராதனை
சாத்தானை ஜெயித்தவரே சாவை வென்றவரே
சர்வ சிருஷ்டிகரே ஆராதனை

பாடல் 11
ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம்
இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர்
ஓசான்னா தாவீதின் புதல்வா
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. தாவீது அரசரின் புத்திரரே ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப் புகழ் அடைந்தவரே எம்
தேவனே தேவனே வருவீரே - ஓசான்னா

2. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா
அருள் போதனரால் புகழப்பட்டீர் 
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதிப் பிதாவிடம் பதவி பெற்றீர்

3.மரித்தவர் பலருமே உயிர்பெற்றார் - ஒரு
மனமுடை விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சோதரன் பெற்றார் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே

4.யூதேயா நாட்டில் புகழ் பெற்றீர் - எம்
யூத ராஜனாய் முடிபெற்றீர் 
எருசலேம் நகர்தனிற் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசரே அரசாள்வீர்

5. பாவிகளைத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் பொறுக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே

6. கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே

7. உலகமே நுமது அரிய வேலை - எம்
உயிருமே நுமது மா புதுமை
உலகத்தை யாண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே

பாடல் 12
போலா கிறிஸ்து மஹாராஜுக்கு ஜெ
போலா போலா போலா சாரே போலா

1. யேஷு சி பிரிதி லைபரி-3
 யேஷு சி சக்தி லைபரி-3
 யேசு சே ஆனந்த் லைபரி-3

2. யேசு சி க்ருபா லைபரி-3
 யேசு சே சமர்த் லைபரி-3
 தியாச்சா அபிஷேக லைபரி-3

பாடல் 13
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்

ஓசன்னா ஜெயமே
ஓசன்னா ஜெயம் நமக்கே

1.அல்லேலூயா துதி மகிமை என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

2.துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமுமில்லை கலக்கமில்லை   கர்த்தர் நம்முடனே

3யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை எதிர் நின்றாலும்
பயமில்லை கலக்கமில்லை  மீட்பர் நம்முடனே

தாவீதின் மைந்தனுக்கே  ஓசன்னா
உலகத்தின் ராஜாவுக்கே  ஓசன்னா
இயேசு மகா ராஜாவுக்கே  ஓசன்னா
தாவீதின் குமாரனுக்கு  ஓசன்னா
இஸ்ரவேலின் ராஜாவுக்கு   ஓசன்னா
இயேசு கிறிஸ்துவுக்கு  ஓசன்னா
கழுதையின் மேல் பவனி வந்தவர்க்கு  ஓசன்னா
உலகத்தின் பாவத்தை போக்க வந்தவர்க்கே  ஓசன்னா
நம்மை வழிநடத்து ஏசு ராஜாவுக்கு  ஓசன்னா
உன்னதத்திலே  ஓசன்னா
போலா கிறிஸ்து மகா ராஜ் கீ  ஜே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...