பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
பாரிடை பிறந்தவரே…
பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்
தரணியில் பிறந்தவரே… (2)
1. மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்
வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)
தேவ குமாரா தாவீதின் மைந்தா
தாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே
– பரிதி
2. கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்
பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)
மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்
மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே
– பரிதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக