ஞாயிறு, 26 மார்ச், 2023

நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருளநமக்கொரு பாலன் பிறந்தார்

நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருள
நமக்கொரு பாலன் பிறந்தார்

அனுபல்லவி:
மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திட
ஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம

சரணம்:
1.சகலமும்  படைத்திட்ட சர்வ வல்லோன்
இகமதில் பிறந்தது விந்தையன்றோ!
நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார்
ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார்
தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில்
அவரின்றி வாழ்வே இல்லை-தினம்
அனுமதியார் ஒரு தொல்லை-தேவ
அன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு

2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன்
கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்!
வானவரோடும் மேய்ப்பர்களோடும்
கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்.
மாற்றிடுவார் பவரோகம்-நம்மை
செய்திடுவார் சிங்காரம்-தினம்
சுமந்திடுவார் நம்பாரம்-நம்
வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு
ஸ்வரங்கள் 
1.ஸா ரீ  கா மா  ப த நி - நமக்கொரு 
2.ரீ மா பா ரீ  நீ ரீ  ஸா ... நி ரி ம ப த நி - நமக்கொரு 
3.கா க  கா கா க கா .....க ரி ச நி  நீ ரி கா பா மா கா ....
   கா க கா கா க காப ...க ரி ச நி   நீ ரி  கா  ப ம ப  கா ...
   நீ ரி கா பமப மா ...... ரீ ம பா  நீ தா பா 
   நீ  ரி கா ம ப த பா ....ரீ  ம  பா ச^  நி த பா - த நி சா^  
  நமக்கொரு  பாலன் பிறந்தார் ........                      
                                                            
4. சாச பாப மாம காக ரி க ரி ச [ சாரிகா] {கா பா சா^  }
    காக நீநி பாப  மாம ரிகரிநி    [ நீபாமா]  {ரீ^  சா^  தா }
    சாச  பாப மாம காக ரிகரிச [காமாபா] {சா^  தா நீ }
    காக  நீநி பாப காக    ரிகரிநி[பாகாமா]  {நீ சா^  ரீ^  }
^ சா ச சா சா சா நி ரி ச நீ தா ...மா ம தா  நீரி  நிரி க ரி நீ .....
கரிச நீத பமகா ... ரி சா நி   தபமகரி ....ச நீ தா பமகரி 
க ம பா ......... ச ரி  கா .....(3)
ச ரி க ம ப த நீ ...ரி க ம ப த நீ ச ...க மப த நீ ச ரீ ....
ச ரி க ம ப த நீ ....ரி க ம ப த நி ச ... க ம ப த நீ ச 
சரிகம பதநி   ரிகமப தநிச  கமபதநீசரீ ......... 
க ரி சநீத   ரி ச நீதப    ச நீ த பமக......
க ரி ச நீ த     ரி ச நீ த ப   ச நீ த ப ம   க ம ப த நீ ச - நமக்கொரு ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பைபிள் புள்ளிவிவரங்கள்பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல்

பைபிள் புள்ளிவிவரங்கள் பைபிள் உண்மைகள் மற்றும் புள்ளியியல் பைபிள் புத்தகங்கள் எண்ணிக்கை: 66 அத்தியாயங்கள்: 1,189 வசனங்கள்: 31.101 சொற்கள்: ...