துள்ளித்துள்ளி ஓடி வந்தோம் சின்ன பாலகா
சின்ன பிள்ளை எங்கள் நெஞ்சில் வந்துதித்த வா
தீர்க்கண் முன்னுரை படியே வந்த எங்கள் வானவா
தீய சாத்தானை மிதிக்க மானிடராய் வந்தவா?
சேர்ந்து நாங்கள் பாடிடுவோம் தூய ஆவி தந்த வா
சோர்ந்திடாமல் எங்கள் உள்ளமதிநிலே தங்கவா.
மாடடை கொட்டிலையே மாளிகையாய் கொண்டவா
பசும்பெல்லாம் தரையை பஞ்சனையாய் கண்டவா
பொன் போலம் துபவர்கத்தால் ஞானியர் வனங்கவா
விண்வெளி நட்சத்திரத்தை வானிலே பதித்த வா
நள்ளிரா வேலையிலே மந்தையர் மகிழவா
ஆடிப்பாடி தெய்வத்தூதர் ஆரவாரம் செய்யவா
ஆரிராரோ பாடி அன்னை மரியும் தாலாட்டவா
முன்னறிந்து முன்னணியில் மஞ்சம் கொண்ட மன்னவா
ஆனந்தமாய் குடி வந்தோம் அல்லேலுயா பாடுவோம்
அற்புதர் இயேசுவின் தூய ஆவியில் நிரம்புவோம்
பொற்பரனை உந்தனுக்கே ஸ்தோத்திர பாடல் பாடுவோம்.
பாத்திரமான காணிக்கையாய் உள்ளத்தை படைக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக