ஞாயிறு, 26 மார்ச், 2023

தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே

1. தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உந்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர் (2)

மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன், என் முழு இதயத்தோடு (2)
என் கர்த்தர் நல்லவர், மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் (2)

2. வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்( தேவ )
ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே (2)

3. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர் (2)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD