*மகா உபத்திரவம்*
ஏழு முத்திரைகள் உடைக்கப்படுதல்:
1. அந்திக்கிறிஸ்து வெளிப்படல்
2. அராஜகம்
3. பஞ்சம்
4. நாலிலொரு பங்கு மக்கள் கொல்லப்படுதல்
5. ரத்த சாட்சிகள்
6. பூமியதிர்ச்சிகள்
7. ஏழு எக்காளங்கள் ஊதப்படுதல்
👇🏾👇🏾
1.மரங்கள் - பசும்புல் எரிந்து போகுதல்
2. கடல் ரத்தமயமாவது - கடல் ஜீவன் மூன்றிலொரு பங்கு செத்துப்போகும் - கப்பல் சேதமாகும்
3. மூன்றிலொரு பங்கு ஆறுகள் & நீரூற்றுகள் கசக்கும் - மனிதர்கள் இறப்பார்கள்
4. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அதனதன் நேரத்தில் மூன்றிலொரு பங்கு ஒளி கொடுக்காது. இருளடையும்.
5. பாதாளக்குழிகள் திறக்கப்படும், அதிலிருந்து வரும் புகை சூரியனையும் வானத்தையும் அந்தகாரப்படுத்தும், பின் தேளுக்கு ஒத்த வெட்டுக்கிளி குதிரை மாதிரி வந்து 666 முத்திரை பதித்தவர்களை கொட்டும். 5 மாதத்திற்க்கு நடக்கும். சாக மாட்டார்கள்.
6. குதிரை சேனைகளில் தூதர்கள்
அக்கினி - புகை - கந்தகத்தால் பூமியின் மூன்றிலொரு பங்கு மக்களை அழிவார்கள்.
7. சாத்தானும் அவனைச்சேர்ந்த (வானத்திலே நடந்த யுத்தத்தில்) தூதர்களும் தாளத்தள்ளப்பட்டார்கள்.
7 கலசங்கள் ஊற்றப்படுதல் : 👇🏾
1. 666 முத்திரை பதித்தவர்களுக்கும் விக்கிரக வழிபாட்டுக்காரர்களுக்கும் புண்கள் உண்டாகும்.
2. கடல் செத்தவனைப்போல் ரத்தமயமாவது - கடல் உயிரினங்கள் எல்லாம் இறந்து போகும்.
3. நதிகள் & நீரூற்றுகள் இரத்தமயமாகும் - பரிசுத்தவான்களையும் தீர்க்கதரிசிகளையும் கொன்று ரத்தத்தை கண்டவர்கள் - குடிக்கும் தண்ணீர் அது.
4. சூரியன் மீது கலசம் ஊற்றப்படுதல் - தீயினால் மனுஷர்கள் அழிவு
5. அந்திக்கிறிஸ்து (மிருகத்தின்) மீது ஊற்றப்படுதல் - அந்திக்கிறிஸ்து ராஜ்யம் அழிதல்
6. எப்பிராத்து நதி மீது ஊற்றி நதி வறண்டு போதல் - கிழக்கு தேச படைகள் வர இஸ்ரவேலுக்கு ஆதரவாக வர தண்ணீரை வறண்டு போக செய்தல். அந்திக்கிறிஸ்துவும் சாத்தானும் கள்ளத்தீர்க்கதரிசியும் யுத்தத்திற்க்கு ராஜாக்களை சேர்ப்பார்கள்.
7. மகா பாபிலோன் விழுந்தது - விக்கிரக ஆவியுடயவளும் வேசித்தன ஆவியுடையவளும் உலகத்தை மோசம் போக்கின ஆவியுடையவளுமான ஸ்திரீ இவள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக